அக்னிப்புரட்சி இன்றைய (21.11.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* தமிழகத்தில் 10 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெகிறது.
முதல் தவணை தடுப்பூசி செலுத்தி, இரண்டாம் தவணைக்கான அவகாசம் முடிந்துள்ள, 71 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமை என, வாரத்தில் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன.
10 வது மெகா தடுப்பூசி முகாம், தமிழகம் முழுதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெறுகிறது.
* திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை.
நேற்றிரவு ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற போது எஸ்எஸ்ஐ பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கீரனூர் மூகாம்பிகை கல்லூரி அருகே ஆடு திருடர்களை பிடிக்க முயன்றபோது கொலை.
திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்களால் எஸ்எஸ்ஐ பூமிநாதன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
* நாடாளுமன்ற கூட்டத்தொடர் நவம்பர் 29ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம்.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்.
3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து போராடி உயிர் தியாகம் செய்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அஞ்சலி.
அறவழிப் போராட்டம் மூலம் வென்ற விவசாயிகளுக்கு பாராட்டு.
* சிறப்பு எஸ்.ஐ குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி.
ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்ட திருச்சி நவல்பட்டு எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ .1 கோடி நிதியுதவி.
எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* வருத்தம் தெரிவித்த இயக்குனர் ஞானவேல்:
ஜெய்பீமில் இடம்பெற்ற காலண்டர், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளப்படும் என அறியவில்லை.
1995ஆம் ஆண்டை பிரதிபலிப்பதே அதன் நோக்கம், ஒரு சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது நோக்கமும் அல்ல.
பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை மட்டுமே நடிகர் சூர்யா நோக்கமாக கொண்டிருந்தார்.
இயக்குனராக என்பொருட்டு அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஜெய்பீமில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை.
இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்- இயக்குனர் த.செ.ஞானவேல்.
* டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை நேரடி வகுப்புகள் கிடையாது.
ஆன்லைன் வாயிலாக, வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்- டெல்லி கல்வி இயக்குனரகம்.
* திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் உடல் நல்லடக்கம்.
திருச்சி, சோழமாநகரில் உள்ள இடுகாட்டில் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சிறப்பு உதவி ஆய்வாளரின் உடல் நல்லடக்கம்.
* மழை வெள்ள பாதிப்பு: ஆய்வு மேற்கொள்ள தமிழகம் வந்தது மத்திய குழு.
சென்னை ரிப்பன் மாளிகையில் மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழு மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை.
சென்னை மாநகராட்சியில் வெள்ளை பாதிப்பு குறித்து வைக்கப்பட்டு உள்ள புகைப்படங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
* மக்களே உஷார்; தமிழகத்தில் நவ.24, 25ல் மிக கனமழைக்கு வாய்ப்பு:
வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்.
அடுத்த 3 நாட்களில் மழையின் தீவிரம் குறைந்து மீண்டும் வலுப்பெறும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
* காஞ்சிபுரம்: வாலாஜாபாத், உத்திரமேரூரில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட நிர்வாகம்.
* திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (22.11.2021) விடுமுறை
* திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (22.11.2021) விடுமுறை
* 3 வது டி-20: 73 ரன்னில் இந்தியா அபார வெற்றி.
கடைசி டி-20 - நியூசிலாந்தை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி.
185 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து 17.2 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்.
No comments:
Post a Comment