அக்னிப்புரட்சி இன்றைய (22.11.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.11.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.11.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் 2 பேர் கைது.

தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே உள்ள தோகூர் பகுதியை சேர்ந்த 2 பேர் கைது.

சென்னை புளியந்தோப்பில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழு ஆய்வு!

* சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கொலையில் பள்ளி மாணவர்கள் 2 பேர் உட்பட 3 பேர் கைது.

ஆடு திருடியவர்களை விரட்டி பிடிக்க முயன்றபோது நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 - ம் வகுப்பு, 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது.

அவர்களிடருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்,  இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல்.

* சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவியேற்பு
- ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

* இந்தியாவில் இதுவரை 116.87 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

* நடப்பு கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக 'பயிற்று மொழி' சேர்க்கப்படுகிறது.

1 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர் என்ற விவரம் வகுப்பு வாரியாக சேர்க்கப்பட உள்ளது.

மாணவர்களின் பயிற்று மொழி விவரங்களை தனித்தனியே இணையத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய ஏற்பாடு.

* கரூர்: வெங்கக்கல்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் வேன் மோதி உயிரிழப்பு.

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேன் ஒன்றை தடுத்து நிறுத்த முயற்சித்தார் கனகராஜ்.

வேன் ஓட்டுநர் நிறுத்தாமல் மோதிவிட்டு சென்றதால் கனகராஜ் உயிரிழப்பு.

* 27.02.2019 அன்று பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு, பாதுகாப்புத்துறையில் வழங்கப்படும் 3வது உயரிய விருதான "வீர் சக்ரா" விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  வழங்கினார்

* சென்னை, மெரினா கடற்கரைக்கு இன்று பொதுமக்கள் செல்ல தடை விதிப்பு; மெரினாவில் உள்ள சர்வீஸ் சாலை மூடல்.

ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் மெரினாவில் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவிய நிலையில் தடை விதிப்பு.

* கோவையில் ரூ.89 கோடியில் நிறைவேற்றப்பட்ட 120 மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைத்து ரூ.500 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கோவையில் முதலமைச்சர் உரை:
நான் ஓட்டு போட்டவர்களுக்கு மட்டும் பணியாற்றுவதில்லை.

சட்டமன்ற தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் பெருவாரியான வெற்றி கிடைத்தது.

கோவையில் எதிர்பார்த்த வெற்றி திமுகவுக்கு கிடைக்கவில்லை.

ஓட்டு போடாதவர்களுக்கும் பணியாற்றுகிறேன்.

அப்படிதான் அண்ணா, கலைஞர் எங்களை வளர்த்திருக்கிறார்கள்.

தொழில் வளர்ச்சி நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும்.

கோவை முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

இது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசியை தமிழக அரசு கட்டாயப் படுத்தக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்.

ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல விரும்பினால், மாணவர்களின் நலன் கருதி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் - நீதிமன்றம்.

ஆசிரியர்களை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள கட்டாயப்படுத்த கூடாது என்பதை ஏற்க முடியாது.

மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்.

தடுப்பூசி செலுத்தாமல் இருந்து குழந்தைகள் இறந்தால் யார் பொறுப்பேற்பது? - நீதிபதிகள்.

வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் தெரிவித்ததை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி அமர்வு ஆணை.

* கரூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்தினருக்கு ரூ 50 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர்.

வாகன சோதனையின்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த கரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கவும் உத்தரவு.

* மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று:

அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது.

பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது.

மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்- கமல் ட்வீட்.

* நவல்பட்டு எஸ்எஸ்ஐ பூமிநாதன் ரோந்து பணியின்போது படுகொலை செய்யப்பட்டார்; குற்றவாளிகளை 4 தனிப்படைகள் அமைத்து தேடிவந்தோம், 3 பேரை கைது செய்துள்ளோம், அதில் 2 பேர் இளம் சிறார்கள்- மத்திய மண்டல டிஐஜி சரவண சுந்தர்.

செல்போனில் எஸ்எஸ்ஐ பேசிக்கொண்டு இருந்தபோது பின் பகுதியில் இருந்து சிறுவர்கள் தாக்கியுள்ளனர்.

மணிகண்டன்தான் (19) முக்கிய குற்றவாளி, அனைவரும் போதையில் இருந்துள்ளனர், இதற்கு முன் இவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை.

காவலர்கள் தங்கள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்; இரவு நேரத்தில் இருவராக ரோந்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளோம்- மத்திய மண்டல டிஐஜி சரவண சுந்தர்.

* கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

20.01.22 முதல் நேரடி தேர்வுகள் நடக்கவிருப்பதால் அதற்கு முன், மாதிரி தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என - உயர்கல்வித்துறை ஆணை.

* கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனின் உடல் நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனை அறிக்கை

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை ( CMDA ) போல கோவை, திருப்பூரில் நகர வளர்ச்சிக் குழுமங்களை உருவாக்குவதற்கான அரசாணை வெளியீடு

* ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் எனும் திட்டத்தை கைவிடுவதாக ஆந்திரா அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

இதற்கான அறிவிப்பை முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் விரைவில் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது

* ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து.

3331 விற்பனையாளர்கள் உள்ளிட்ட 3,997 காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற்றது கூட்டுறவுத்துறை.

* புதுச்சேரியில் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கும் மழை வெள்ள நிவாரணமாக ரூ.5000 வழங்கப்படும் - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.

சிவப்பு கார்டுகளுக்கு ரூ.5000 வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மஞ்சள் கார்டுகளுக்கும் நிவாரணம் அறிவிப்பு.

* அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை  மற்றும் தென்-தமிழகம் இடையே கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு நடுவம் தகவல்

* வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய் மற்றும் ₹2000 பணம் வழங்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆணை

* திருச்சி நவல்பட்டு எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைதான மணிகண்டனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages