அக்னிப்புரட்சி இன்றைய (23.11.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (23.11.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (23.11.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை  மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* 3 நாட்கள் அதிகனமழைக்கு வாய்ப்பு:
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தெற்கு தமிழ்நாடு கடல் பகுதிகள் இடையே வரக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25 முதல் 27-ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு-இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

* எஸ்.ஐ குடும்பத்திற்கு டிஜிபி ஆறுதல்:
திருச்சி: திருடர்களால் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் புகைப்படத்திற்கு டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அஞ்சலி.

சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தினருக்கு சைலேந்திர பாபு ஆறுதல் கூறினார்.

* முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம்:

சென்னை, டிபிஐ அலுவலகத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இன்று ஆலோசனை.

பள்ளி இடைநிற்றல், பொதுத்தேர்வு, பாலியல் புகார்களை தடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 சரிந்து விற்பனை. ஒரு கிராம் ரூ.4534-க்கும், ஒரு சவரன் ரூ.36,272-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* திருப்பதி : ஏழுமலையான் தரிசனத்திற்காக டிக்கெட் முன்பதிவு செய்து, மழை காரணமாக திருமலைக்கு வரமுடியாத பக்தர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

வங்கக்கடலில் உருவான, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த கன மழையால், திருமலை மற்றும் திருப்பதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஏழுமலையான் தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள், திருமலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது நிலைமை சீரடைந்து வருவதால், திருமலை மலைப்பாதையிலும், அலிபிரி நடைபாதை மார்க்கத்திலும் பயணிக்க, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், நவம்பர் 18 முதல் 30ம் தேதி வரையிலான நாட்களில், ஏழுமலையான் தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்து, திருமலைக்கு வர முடியாத பக்தர்களுக்கு, மற்றொரு நாளில் தரிசிப்பதற்கான வாய்ப்பை தேவஸ்தானம் வழங்குகிறது.

இதற்காக சிறப்பு மென்பொருளை உருவாக்க உள்ளது.

அவர்கள், ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தரிசனம், வாடகை அறை உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

இலவச சர்வதரிசனம், 300 ரூபாய் விரைவு தரிசனம், வர்ச்சுவல் சேவை, ஸ்ரீவாணி அறக்கட்டளை சேவை உள்ளிட்டவற்றுக்கு முன்பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.

மேலும், கடந்த சில நாட்களில், தரிசனத்திற்கு வர இயலாத பக்தர்கள், 30ம் தேதிக்குள் தரிசனத்திற்கு வந்தால், அவர்களை தரிசனத்திற்கு அனுமதித்து, லட்டு பிரசாதம் வழங்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

வரும், 30ம் தேதிக்கு பிறகு தரிசனத்திற்கு வருவதாக இருந்தால், புதிய மென்பொருள் உருவான பின், அதன் வாயிலாக முன்பதிவு செய்து தான் வரவேண்டும் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது.

* ஜெய்பீம் விவகாரம் - நீதிமன்றத்தில் வழக்கு:

ஜெய்பீம் - நடிகர் சூர்யா, ஜோதிகா,
இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு-வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி மனு.

* தமிழக வீரருக்கு 'வீர் சக்ரா' விருது:
கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனிக்கு 'வீர் சக்ரா' விருது வழங்கப்பட்டது.

மறைந்த வீரர் பழனி சார்பாக அவரது மனைவி விருதை பெற்றுக்கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த ராணுவ வீர‌ர் பழனி, கடந்தாண்டு நடந்த சீன ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்தார்.

* 3944 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 10 திட்டங்களின் கோவையில் வணிக உற்பத்தியினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

இன்று மட்டும் ரூ.35,208 கோடி அளவில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் மூலம் 76,795 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நம்பர் 1 முதலமைச்சர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்குவதுதான் எனது லட்சியம்
- கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

* சிலிண்டர் விபத்து - பலி எண்ணிக்கை உயர்வு:

சேலம்: பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் சிலிண்டர் வெடித்த‌ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு.

சேலம்: பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் சிலிண்டர் வெடித்த‌ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு.

தீயணைப்புத்துறை சிறப்பு அலுவலர் பத்மநாபன், அவரது மனைவி தேவி, மூதாட்டி ராஜலட்சுமி, எல்லம்மாள் மற்றும் கார்த்திக்ராம் ஆகியோர் உயிரிழப்பு.

சிலிண்டர் வெடித்து வீடுகள் தரைமட்டமானதில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பு.

* ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம்:

மனித உரிமை ஆணையத்தில் சிறைத்துறை மருத்துவரின் சான்று தாக்கல்.

ராம்குமார் சிறையிலேயே இறந்து விட்டார் - சிறைத்துறை மருத்துவரின் சான்று ஆவணத்தில் தகவல்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக அரசு மருத்துவர்கள் கூறிய நிலையில் புதிய திருப்பம்.

ஸ்வாதி கொலை வழக்கில் சிறையில் இருந்த ராம்குமார் திடீரென மரணம் அடைந்தது சர்ச்சையானது.

* உரிய காரணமின்றி வணிகவரித்துறை பணியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதை கண்டித்து நாளை ஒரு நாள் "ஒட்டுமொத்த  தற்செயல் விடுப்பு" (Mass CL) போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வணிகவரித்துறை ஊழியர்  சங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு

* இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பாக 600 க்கும் மேற்பட்ட கடன் வழங்கும் செயலிகள் இயங்கி வருவதாக RBI அதிர்ச்சி தகவல்

டிஜிட்டல் கடனளிப்பை (Digital Lending) நெறிப்படுத்த தனியாக சட்டம் இயற்ற நடுவண் அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை

* வெள்ளம் பாதித்த பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால் பொதுமக்களுக்கு இழப்பீட்டு உதவித் தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கிட வேண்டும்

தமிழ்நாடு அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

* கரூர் : ரூ.25,000 லஞ்சம் வாங்கிய க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டு மனைப்பட்டவை முறைப்படுத்த லஞ்சம் பெற்றபோது குமரவேலை லஞ்சஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்.

* பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் தக்காளி ஒரு கிலோ 85 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்-கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு.

பொதுமக்களுக்கு குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்ய நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படும்.

65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் அனைத்து காய்கறிகளுடன் தக்காளி விற்க நடவடிக்கை.

* வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில் நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* சேலம் தாதகாப்பட்டியில் சிலிண்டர் வெடித்து பலியான 5 பேரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு.

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் அறிவிப்பு.

படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

* தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை:

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

தக்காளி பதுக்கலை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்.

* 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வகையிலான சட்ட முன்வரைவை, வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவையில் அறிமுகப்படுத்த மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது

* ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடமையாக்கியதை எதிர்த்து ஜெ.தீபக், ஜெ.தீபா வழக்கு - நாளை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

* மருத்துவரின் பரிந்துரையில்லாமல் போதைக்கு பயன்படுத்தும் மருந்துகள், மாத்திரைகள் விற்பனை செய்யும் மருந்து கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். - சென்னை காவல்துறை எச்சரிக்கை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages