அக்னிப்புரட்சி இன்றைய (24.11.221) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (24.11.221) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (24.11.221) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* இன்றைய தக்காளி விலை:
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தக்காளி விலை ரூ.140க்கு எகிறியது.

சில்லறை விற்பனையில் ஏரியாவுக்கு தகுந்தாற்போல் கிலோ ரூ.160 வரை விற்பனையாகி வருகிறது.

சென்னையில் பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூபாய் 79 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை மட்டுமன்றி பீன்ஸ் கிலோ 90 ரூபாய்க்கும்,  முருங்கைக்காய் கிலோ 120 ரூபாய்க்கும், அவரைக்காய் ரூபாய் 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து

ஜெயலலிதா வாரிசுகள் என அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சாவியை மனுதாரர்களிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

* ஆந்திர பிரதேசத்திற்கு இடைக்கால நிவாரணமாக ₨1,000 கோடி வழங்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெகன் மோகன் கடிதம்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை நியமிக்க வேண்டும் - ஜெகன் மோகன்

* சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்

* காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வியூக குழு நாளை ஆலோசனை

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக ஆலோசனை

* டெல்லி அரசின் இலவச புனிதப் பயணத் திட்டத்தில் தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி மாதா கோயிலும் சேர்ப்பு - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு

* ஆடு திருடர்களால் கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

* இன்று முதல் தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை..

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..
சென்னையில் 27 ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.. - சென்னை வானிலை ஆய்வு மையம்

* தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

* இரண்டாவது முறையாக மாநாடு திரைப்படம் ஒத்திவைப்பு!

தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன் - : சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர்

அண்மையில் தமிழக அரசுக்கு எதிராக சுரேஷ் காமாட்சி கருத்து தெரிவித்து இருந்த நிலையில் நாளை வெளியாக இருந்த திரைப்படம் ஒத்திவைக்கப்படுவதாக  இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் விரைவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல்!

மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் ஆணை

* தில்லி அரசின் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா "தீர்த்த யாத்திரை" திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த வேளாங்கண்ணி  திருத்தலமும் சேர்க்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

* வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் "மாநாடு" திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகும் என தகவல்.

* கடலூர் : சிதம்பரம் அருகே சேதியூர் பகுதியில் 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அசோக்குமார் என்ற ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

* தமிழகத்தில் மேலும் 744 பேருக்கு கொரோனா தொற்று

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,22,506 ஆக உயர்வு  தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 782 பேர் குணமடைந்தனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages