அக்னிப்புரட்சி இன்றைய (27.11.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (27.11.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (27.11.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், நாமக்கல்லில் மழை தொடரும்

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை தொடரும் என அறிவிப்பு.

* தென்னாபிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனாவுக்கு ‘ஒமீக்ரான்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் வகைகளில் மிக மோசமானதாகவும் (Variant of Concern),தொற்று ஏற்பட்டோருக்கும் மீண்டும் பரவும் தன்மை கொண்டதாகவும் இருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை.

* தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு.

சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காலை 11 மணியளவில் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

* தென்னாபிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனாவுக்கு ஒமீக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது

இதுவரை கண்டறியப்பட்டுள்ள COVID19 வைரஸ் வகைகளில் மிக மோசமானதாகவும் (Variant of Concern), தொற்று ஏற்பட்டோருக்கும் மீண்டும் பரவும் தன்மை கொண்டதாகவும் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

* நீட் தேர்வு தொடர்பாக பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்முடிவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட NEET தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட முன் வரைவை குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தினார்

* எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வகையிலான சட்ட முன்வரைவு  வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

* சென்னையில் மழைநீர் தேக்கம் காரணமாக 3 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிப்பு - மாநகராட்சி.

ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை, மேட்லி மற்றும் கணேஷபுரம் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை - மாநகராட்சி.

* கனமழை காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது

* புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்துக்கென்று தனியாக முதன்மைக் கல்வி அலுவலகம் உருவாக்கம்.

22 புதிய பணியிடங்களுடன் முதன்மைக்கல்வி அலுவலகம் செயல்பட முதற்கட்டமாக ரூ.1.63 கோடியை விடுவித்தது பள்ளிக்கல்வித்துறை.

*மயிலாடுதுறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் துவக்கம்: அரசாணை வெளியீடு

புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி கல்வி மாவட்டங்களில் உள்ள 842 பள்ளிகளுக்கு தனியாக 22 பணியிடங்களுடன் கூடிய முதன்மைக் கல்வி அலுவலகம் அமைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு

* ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான ஊக்கத்தொகை 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாக உயர்வு.

குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை.

முழுநேர முனைவர் படிப்புக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 1,600 மாணவர்களுக்கு தலா 1 லட்சம் வழங்கவும் தமிழ்நாடு அரசு அரசாணை.

நாட்டிலேயே முதன்முறையாக ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம்” அமைக்கவும்
தேனி, தென்காசி, தஞ்சை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் தொடர் சுற்றுப்புற காற்றுத்தர கண்காணிப்பு மையம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு

* சென்னை தி.நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.

விஜயராகவா சாலை, ஜி.என்.சாலையில் கொட்டும் மழையிலும் முதல்வர் நேரில் ஆய்வு.

* நெகிழி பயன்பாட்டை குறைக்கும் வகையில் மக்கள் இயக்கமாக செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு.

இந்த பிரச்சாரத்திற்கு "மீண்டும் மஞ்சள் பை"  என்று நமது பாரம்பரியமாக பயன்படுத்திய மஞ்சள் பைக்கு திரும்பும் விதமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

* மிக அதிக மழை பெய்யும் இக்காலத்தில் நேரம் , காலம் பார்க்காது களத்தில் பணியாற்றி வரும் மக்கள் பிரதிநிதிகள் , அரசு அதிகாரிகளுடன் நானும் களத்தில் நிற்கிறேன் ; நிற்பேன்-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு.

சென்னையில் , கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள் . இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து ; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து ; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு ; நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம் , ஒய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி , மின்துறை , பொதுப்பணித்துறை , வருவாய்த்துறை , காவல்துறை , உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள்தான் . அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது ! அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் , மக்கள் பிரதிநிதிகள் , அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம் , காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் . உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன் ; நிற்பேன் !

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages