அக்னிப்புரட்சி இன்றைய (28.01.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.48 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு
பிரான்ஸ் - 3.92 லட்சம், அமெரிக்கா - 4.46 லட்சம், இத்தாலி - 1.55 லட்சம், ஜெர்மனி - 1.89 லட்சம் பேருக்கு பாதிப்பு
* தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்; வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.
* ஐபிஎல் மெகா ஏலம்:
ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த எந்த வீரர்களை வாங்கலாம் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள சென்னை வந்தடைந்தார் தோனி.
ஐபிஎல் மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதி நடைபெறுகிறது.
* திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், கட்சி கட்டுப்பாட்டை மீறி வருவதால் திருவொற்றியூர் திமுக மேற்கு பகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்-திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
* கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தான் தேர்வு- அமைச்சர் பொன்முடி.
கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் தான் நடைபெறும்
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கவுள்ள நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்.
செய்முறை தேர்வுகள் கல்லூரியில் நேரடியாக நடைபெறும்.
* ப்ரீபெய்டு திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் - தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவு.
* தமிழக பாஜக இளைஞரணி தலைவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.
பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது போலீஸ் வழக்குப் பதிவு.
பொய் தகவலை ட்விட்டரில் பரப்பிய புகாரில் வழக்குப் பதிவு.
இளங்கோவன் என்பவர் கீழ்ப்பாக்கம் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு.
* மகாராஷ்டிராவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 12 பேரை ஓராண்டு சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து- உச்சநீதிமன்றம்.
எம்.எல்.ஏ.க்களை காலவரம்பின்றி இடைநீக்கம் செய்வது சட்டவிரோதம் - உச்சநீதிமன்றம்.
ஒரு கூட்டத்தொடரில் இருந்து வேண்டுமானால் இடைநீக்கம் செய்யலாமே தவிர வரம்பின்றி நீக்கமுடியாது - உச்சநீதிமன்றம்.
* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது.
அண்ணா அறிவாலயத்தில் திமுக, காங்கிரஸ் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை பேச்சுவார்த்தை.
* பிப்.19 நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் மார்ச் மாதத்திற்கு மாற்றம்- அண்ணா பல்கலை.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளில் (பிப்ரவரி 19) நடக்கவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மாற்றம்.
பிப்ரவரி 19ல் நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை படிப்பு தேர்வுகள் மார்ச் 5,6,9,11ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆலோசனை.
* விஜய் வழக்கில் நடவடிக்கை நிறுத்திவைப்பு.
நடிகர் விஜய் இறக்குமதி செய்த சொகுசு கார் வழக்கில் நடவடிக்கை எடுப்பதை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
இறக்குமதி காருக்கு அதிக நுழைவு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார்.
* கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா(30) பெங்களூருவில் தற்கொலை.
பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் சௌந்தர்யா சடலமாக மீட்கப்பட்டார்.
சௌந்தர்யா பெங்களூருவில் உள்ள எம்எஸ் ராமையா மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.
* புதிய கொரோனா வைரஸ் - வூகான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை:
‘NeoCov' என்ற புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து சீனாவின் வூகான் நகர விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
அதிக பரவல் வேகம், அதிக உயிரிழப்பு விகிதத்தை கொண்டிருக்கும் என தகவல்.
சீனாவின் வூகான் நகரில்தான் 2019ம் ஆண்டு கோவிட் 19 வைரஸ் முதலில் பரவியது குறிப்பிடத்தக்கது.
* ரூ.4,847.78 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் நாட்டிலேயே பாரதிய ஜனதா கட்சி முதலிடம்.
ரூ.4,847.78 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் நாட்டிலேயே பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR) அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.
2019- 20ம் நிதியாண்டு கணக்கின்படி ரூ.698.33 கோடி சொத்துக்களுடன் பகுஜன் சமாஜ் 2வது இடத்தில் உள்ளது.
ரூ.588.16 கோடி சொத்துக்களுடன் காங்கிரஸ் 3வது இடத்தில் உள்ளது.
* தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி- க்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.
மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி அவரது தந்தை முருகானந்தம் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
* சென்னை புறநகர் ரயில்களில் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தியவர்களுக்கு மட்டுமே பயணச்சீட்டு, சீசன் டிக்கெட் என்ற கட்டுப்பாடுகள் நீக்கம்.
பிப்.1 முதல் யுடிஎஸ் செயலி மூலமும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.
* ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை.
வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக இருவர் மீதும் வழக்கு.
வழக்குப்பதிவுக்கு உத்தரவிட்டது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம்.
* தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் வருகிற 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இயங்குமென அறிவிப்பு.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ரேஷன் கடைகள் இயங்குமென தமிழக அரசு அறிவிப்பு.
30 ஆம் தேதி பணியாற்றும் ஊழியர்களுக்கு, அதற்கு பதிலாக பிப்ரவரி 26 ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிப்பு.
* நவநீதிகிருஷ்ணன் பொறுப்பில் இருந்து நீக்கம்.
அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் எம்.பி நவநீத கிருஷ்ணன் கட்சி பதவியில் இருந்து நீக்கம் - ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கூட்டறிக்கை.
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 28,156 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 48 பேர் உயிரிழப்பு.
* அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும் ககன் தீப் சிங் பேடி நாளை ஆலோசனை.
நாளை நண்பகல் 12 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
* முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் கணினி வழி எழுத்துத் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்
நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்
No comments:
Post a Comment