அக்னிப்புரட்சி இன்றைய (29.11.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (29.11.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (29.11.2021) முக்கிய செய்திகள்.

* இன்று அதிகாலை 04.17 மணிக்கு, வேலூரில் இருந்து 59  கி.மி. தொலைவில் காரப்பட்டு அருகே, லேசான நிலநடுக்கம்.ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது,

* கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தை சேர்ந்த 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; அவர்கள் அண்மையில் நைஜீரியா சென்று திரும்பியவர்கள் என தகவல்!

* ஒமைக்ரான் வைரஸ் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று மதியம் காணொலி வாயிலாக ஆலோசனை.

* சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.60ல் இருந்து ரூ.70 ஆக அதிகரிப்பு

* குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: மக்களவை, மாநிலங்களவை தொடங்கின.
இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

திமுக எம்.பி.க்கள் பதவியேற்பு:
நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக எம்.எம்.அப்துல்லா, கனிமொழி ஆகியோர் பதவியேற்பு.

* வேளாண்  சட்டங்கள் ரத்து - மசோதா நிறைவேற்றம்

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

* நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி:

தெற்கு அந்தமான் கடற்பகுதியில்
நாளை புதிய, குறைந்த காற்றழுத்த
தாழ்வு பகுதி உருவாகிறது.

மதுரை, நெல்லை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

* தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்த ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு குறையாத இடத்தை ஒதுக்க வேண்டும் - கோயம்பேடு மார்க்கெட் கமிட்டிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தற்காலிகமாக 4 வாரங்களுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க நீதிமன்றம் உத்தரவு.

தொடர்மழை, வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டுள்ள விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் இடைக்கால உத்தரவு - நீதிமன்றம்.

தற்காலிகமாக ஒதுக்கப்படும் இடத்தில் உள்ள சாதக-பாதகங்கள் குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவுஉத்தரவு.

* மாநிலங்களவையில் விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றம்.

மாநிலங்களவையில் விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றம்.

* இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை நியூ ஸிலாந்து அணி டிரா செய்துள்ளது.

1 விக்கெட் எடுத்தால் வெற்றி என்ற சூழல் இருந்த நிலையில், போட்டி டிரா ஆனது. போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி சீக்கிரமே முடிக்கப்பட்டது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஷ்வின் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்.

டெஸ்ட் போட்டிகளில் 418 விக்கெட்டுகளை எடுத்து ஹர்பஜன் சிங்கை முந்தினார் அஷ்வின்.

* தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும்.

போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், தொண்டர்கள் டிச.1-7  வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்-தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

* மாநிலங்களவையை சேர்ந்த 12 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கண்ணிய குறைவாக நடந்து கொண்டதாக 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.

கனமழை காரணமாக நாளை (நவ்.30) திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

* 12 எம்.பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எம்.பிக்கள் மீதான நடவடிக்கையை உடனே திரும்பப்பெற திமுக வலியுறுத்துகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டம் நடத்திய சுகாதார ஆய்வாளர்கள் கைது

* கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட நிர்வாகம்.

* கனமழை எதிரொலி: தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட நிர்வாகம்.

* ஒமைக்ரான் "மிக அபாயகரமானது"
ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் ஆயத்தமாக  இருக்க வேண்டும்.
- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

1974ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 100% பங்குகளை நந்தால் ஃபைனான்ஸ் மற்றும் லீசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ₹210 கோடிக்கு விற்க நடுவண் அரசு ஒப்புதல் அளித்துள்ளது

* டுவிட்டர் CEO பதவியில் இருந்து விலகினார் ஜாக் டோர்சி

புதிய முதன்மை செயல் அலுவலராக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பராக் அக்ரவால்  பொறுப்பேற்க உள்ளார்.

* அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம்
கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால் அன்வர் ராஜா நீக்கப்படுவதாக அறிவிப்பு

* ஐபிஎல் 2022 - பெங்களூரு அணியில் விராட் கோலி, மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகியோர் தக்கவைப்பு - அணி நிர்வாகம்

* ஐபிஎல் 2022 - பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தக்கவைப்பு - அணி நிர்வாகம்.

* ஐபிஎல் 2022  - ஐதராபாத் அணியில் கேன் வில்லியம்சன், அப்துல் சமாத், உம்ரான் மாலிக் ஆகியோர் தக்க வைப்பு - அணி நிர்வாகம்

* ஐபிஎல் 2022 -  மும்பை அணியில் ரோகித் சர்மா, பும்ரா, சூர்யகுமார், பொல்லார்டு ஆகியோர் தக்க வைப்பு - அணி நிர்வாகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages