ஆசிரியர் அரங்க. சுந்தரமூர்த்தி மறைவுக்கு மருத்துவர் ச. இராமதாசு இரங்கல்
கும்பகோணம் செட்டிமண்டபத்தைச் சேர்ந்த சமூக முன்னேற்ற சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஆசிரியர் அரங்க. சுந்தரமூர்த்தி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட சிறிது காலத்தில் குத்தாலம் நகர வன்னியர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்ட அரங்க சுந்தரமூர்த்தி, அவருக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பொறுப்புகளிலும் சிறப்பாக செயல்பட்டவர். சமூக முன்னேற்ற சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் தொடங்கி மாநிலத் துணைத் தலைவர் வரை பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்தவர். தமிழ் ஆசிரியராக பணியாற்றிய அவர், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்பாக பணியாற்றியவர். அதற்கான அங்கீகாரமாக தமிழக அரசின் நல்லாசிரியர் விருதையும் பெற்ற பெருமை சுந்தரமூர்த்திக்கு உண்டு.
நல்லாசிரியர் அரங்க சுந்தரமூர்த்தி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், சமூக முன்னேற்ற சங்கத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment