மரம் நடும் அறமே மாபெரும் அறம்! பிறந்தநாளில் மரம் நடுங்கள்.... இயற்கையைக் காத்து என்னுடன் உரையாடுங்கள்! - மருத்துவர் இராமதாசு அய்யா. - Agnipuratchi

மரம் நடும் அறமே மாபெரும் அறம்! பிறந்தநாளில் மரம் நடுங்கள்.... இயற்கையைக் காத்து என்னுடன் உரையாடுங்கள்! - மருத்துவர் இராமதாசு அய்யா.

Share This

மரம் நடும் அறமே மாபெரும் அறம்!
பிறந்தநாளில் மரம் நடுங்கள்....
இயற்கையைக் காத்து
என்னுடன் உரையாடுங்கள்! - மருத்துவர் இராமதாசு அய்யா.

பாட்டாளிகள் அனைவரும் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாளையொட்டி மரம் நட வேண்டும்; அவ்வாறு மரம் நடும் பாட்டாளிகள் என்னை தொடர்பு கொண்டால் அவர்களுடன் உரையாடுவேன் என்று கூறியிருந்தேன்.  அதைப் பின்பற்றி பாட்டாளிகள் பலரும் தங்களின் பிறந்தநாளுக்கும், குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் பிறந்தநாளுக்கும் மரக்கன்றுகளை நட்டு, அது குறித்த விவரங்களை என்னுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் சேலம்  மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் இரா. இராஜசேகர் இன்று அவரது பிறந்தநாளையொட்டி அவரது அலுவலகம் அருகில் மரக்கன்று நட்டார். அது குறித்த விவரங்களையும், புகைப்படங்களையும் எனக்கு அனுப்பி, பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். நானும் உள்ளம் மகிழ்ந்து அவரை வாழ்த்தினேன்.

இராஜசேகரையும், இதுவரை மரக்கன்று நட்ட மற்றவர்களையும் போல  பாட்டாளிகள் அனைவரும் தங்களின் பிறந்த நாள், மணநாள், குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள் ஆகியவற்றையொட்டி மரக்கன்றுகளை நடுங்கள். இயற்கை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு துணை நில்லுங்கள். அது குறித்த விவரங்களை எனக்கு அனுப்புங்கள். நானும் உங்களை வாழ்த்துகிறேன்.

நாமும் வளர்வோம்.... நாம் நட்ட மரமும் வளரட்டும்!

மரம் நடும் அறமே மாபெரும் அறம்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages