அக்னிப்புரட்சி இன்றைய (02.12.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* சென்னையில் உள்ள அனைத்து சுரங்கபாதைகளிலும் போக்குவரத்து மீண்டும் துவக்கம் - சென்னை மாநகராட்சி.
மழைநீரால் முழ்கி இருந்த சுரங்கப்பாதைகளில் இருந்து முழுவதுமாக மழைநீர் வெளியேற்றப்பட்டதால் நடவடிக்கை.
* நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதி வெளியீடு - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
* தெற்கு அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியது.
அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் - இந்திய வானிலை ஆய்வு மையம்.
புயலாக வலுப்பெற்று ஆந்திரா- ஒடிசா இடையே டிசம்பர் 4-ஆம் தேதி கரையை கடக்கும்.
* 2002ம் ஆண்டு குஜராத்தில் இசுலாமியர்களுக்கு எதிரான கலவரம் யாருடைய ஆட்சியின் கீழ் நடைபெற்றது?" என சிபிஎஸ்இ 12ம் வகுப்பு சமூகவியல் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை!
கேள்வித்தாள் தயாரித்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என CBSE அறிவிப்பு
* தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு - என்பது மக்கள் மீது திணிக்கப்பட்ட சட்டம்"
"It's better to change the opinion than to persist in a wrong one"
என சாக்ரடீஸ் சொற்றொடரை மேற்கோள் காட்டி தற்போதைய நிலை தொடர வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை
* திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.
அடையாறு இல்லத்தில் கி.வீரமணியை நேரில் சந்தித்து முதல்வர் வாழ்த்து.
* சீனாவின் முன்னாள் துணைப் பிரதமர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்திய டென்னிஸ் வீராங்கனை Peng Shuai கடந்த 3 வாரங்களாக பொதுவெளியில் தோன்றாத நிலையில் ஹாங்காங் மற்றும் சீனாவில் நடக்கும் போட்டிகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது பெண்கள் டென்னிஸ் சங்கம்
* தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
ஆய்வுக்காக திருச்சி விமான நிலையம் சென்றபோது தடுப்புக் கம்பியில் கார் மோதியது - யாருக்கும் காயமில்லை.
* டிச.7 அதிமுக உட்கட்சித்தேர்தல் -ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு
கட்சியின் 30-வது விதிப்படி தேர்தல் நடக்கும் உட்கட்சித்தேர்தலின் வேட்புமனுத்தாக்கல் டிச. 3 நாளை தொடங்குகிறது.
தேர்தல் ஆணையர்களாக பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் நியமனம்
டிசம்பர் 7ஆம் தேதி உட்கட்சி தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவு டிச.8 அன்று வெளியாகும் என அதிமுக தலைமை அறிவிப்பு
* மின் வாரிய ஊழியர்கள் வரும் 7ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உத்தரவு.
தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது - மின் வாரியம் உத்தரவு.
* அந்தமானில் உருவாக உள்ள புயல் காரணமாக டிச.4, 5, 6ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
டிச.4ல் மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.
டிச.5ல் நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு.
டிச.6ல் நீலகிரி, கோவை, நாமக்கல், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
* டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை:
டெல்லியில் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.
காற்று மாசு தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில், அரசு முடிவு.
அடுத்த அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் திறக்க கூடாது" - டெல்லி அமைச்சர் கோபால்ராய்.
இன்று காலை விசாரணையின் போது காற்று மாசு குறையாமல் பள்ளிகளை ஏன் திறந்தீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
* அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா மீண்டும் அறிக்கை:
அநீதியை எதிர்த்தும், துரோகத்தை வீழ்த்தியும் தோன்றியதுதான் அதிமுக.
இது உயிர்த்தொண்டர்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் உருவான இயக்கம்.
சிலரது தேவைகளுக்காகவும், விருப்பு வெறுப்புக்காகவும் அதிமுக தற்போது செயல்படுகிறது.
அதிமுகவிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள், ஒதுங்கியவர்கள் கவலைப்படாமல் பொறுமை காக்கவும்.
அதிமுகவின் நிலை விரைவில் மாறும், தலை நிமிரும்.
உண்மைகளும், நியாயங்களும் என்றைக்கும் தோற்றதாக சரித்திரம் இல்லை.
எத்தனை இடர்பாடுகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து என் உயிர்மூச்சு உள்ளவரை நம் இயக்கத்தை காத்து, தொண்டர்களின் இயக்கமாக மாற்றும் வரை நான் உழைத்துக்கொண்டே இருப்பேன், ஓய்ந்துவிட மாட்டேன் - சசிகலா.
* ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.
நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு திறன்வளர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குனராக நியமனம்.
பால் உற்பத்தி & பால் பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குனராக சுப்பையன் நியமனம்.
பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனராக கந்தசாமி நியமனம்.
* கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது!
இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதாரத்துறை தகவல்!
* முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முன்னறிவிப்பு இன்றி நீர் திறக்கப்படுகிறது. திட்டமிட்டு, படிப்படியாக, போதிய எச்சரிக்கை கொடுத்த பிறகே நீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல்.
* தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை
அண்மையில் வெங்கடாசலம் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியது.
* தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
கர்நாடகாவில் தொற்று ஏற்பட்டுள்ளதால், நாம் அச்சம் கொள்ள தேவையில்லை - அமைச்சர்.
ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர் - கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர்.
மற்றொருவர் கர்நாடகாவை சேர்ந்த மருத்துவர்; அவருக்கு வெளிநாட்டு பயணத்தொடர்பு எதுவும் இல்லை - கர்நாடக அமைச்சர் சுதாகர்.
* அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது.
மேலும் இது புயலாக வலுவடைந்து மத்திய வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் நிலைகொண்டு, ஆந்திரா - ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும்.
* நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கெடுப்பு செய்து வரும் 4ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு.
எவ்வித சுணக்கமும் காட்டாமல் கணக்கெடுப்பு நடத்தி, தெளிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தல்.
* விழுப்புரத்தில் தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியதில், ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு - பேருந்தின் கண்ணாடி முற்றிலுமாக உடைக்கப்பட்டு, பின்பகுதியில் தீ வைக்கப்பட்டது
* 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்:
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.
இதன் காரணமாக , கடலூர், நாகை, புதுவை, சென்னை உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment