அக்னிப்புரட்சி இன்றைய (04.12.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* மாணவர் உயிரை காப்பாற்றிய நர்ஸ்; குவியும் பாராட்டு….
மன்னார்குடி அருகே விபத்தில் சிக்கி செயல்படாத மாணவரின் இதயத்தை செயல்பட வைத்த செவிலியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருவாக்குறிச்சியைச் சேர்ந்தவர் வசந்த் 18; பாலிடெக்னிக் இறுதியாண்டு படித்து வருகிறார்.
நேற்று லக்னாம்பேட்டை என்ற கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் வரும்போது செம்மறி ஆடுகள் மீது மோதி கீழே விழுந்ததில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.
அவ்வழியாக காரில் வந்த மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர் வனஜா கீழே கிடந்த வசந்தை பரிசோதித்து பார்த்துள்ளார்.
அவரது இதயம் செயல்படாததை அறிந்து, அவசர கால முதலுதவியாக இதய பகுதியை கைகளால் மசாஜ் ( CPR சிகிச்சை) செய்ததில் ரத்த ஓட்டம் சீராகி மாணவரின் இதயம் மீண்டும் செயல்பட துவங்கியது.
உடனடியாக மாணவருக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மாணவர் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
* ஒருங்கிணைந்த NET தேர்வு; தேசிய தேர்வு முகமை அறிவிப்பு:
ஜன.29, பிப்.5 மற்றும் 6 தேதிகளில் ஒருங்கிணைந்த NET தேர்வு நடைபெறும்.
தேர்வுக்கு ஜன.2ம் தேதி வரை csirnet.nta.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
* தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை-மாவட்ட ஆட்சியர்.
* கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (டிச.4) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
* தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோசைய்யா உயிரிழந்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழப்பு.
* இரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களின் பங்கு 3%லிருந்து 9% ஆக அதிகரிப்பு.
2018ம் ஆண்டுக்கு முன்பு ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுடைய மொத்த பங்கு 3%. 2019ம் ஆண்டில் 9%ஆக அதிகரிப்பு- ரயில்வே அமைச்சகம்.
* அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலையொட்டி ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
டிசம்பர் 7-ம் தேதி ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
* தொடர் மழையால் பாதிக்கப்பட்ட போரூர், மாங்காடு, அய்யப்பன்தாங்கல் பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
ஆய்வை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்யப்பன்தாங்கல் பரணிபுத்தூர் சாலையில் நிவாரண உதவிகளை வழங்கினார்.
* கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.
கடந்த 22ம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
* ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு.
இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையிலான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு - பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா.
* இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் சாதனை.
ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்கிற பெருமையை பெற்றர் அஜாஸ்.
* 2 வது டெஸ்ட் - இந்தியா 325 க்கு ஆல்அவுட்:
நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் : 2 வது நாள் முதல் இன்னிங்சில் இந்திய அணி 325 ரன்களுக்கு ஆல் அவுட்.
இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 150 , அக்சர் படேல் 52 , சுப்மன் கில் 44 ரன்கள் குவிப்பு.
* ஒமிக்ரான் அச்சுறுத்தல்: தமிழ்நாடு அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம்.
மத்திய அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைப்படி விமான நிலையங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும்.
சென்னை,திருவள்ளூர்,வேலூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்.
* திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று அலங்காரத்துடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார் ரெங்கநாதர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித்திருநாள் தொடங்கியுள்ளது. நம்பெருமாள் காலை 7.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.15 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
இதே போல் நாள் தோறும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல் பத்து திருநாளில் முக்கிய நிகழ்ச்சியான மோகினி அலங்காரம் டிசம்பர் 13ஆம் தேதியன்று நடைபெறும். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு 14ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் முதல் ராப்பத்து திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.
* மும்பை டெஸ்ட் 2ம் நாள் ஆட்டம் தேநீர் இடைவேளை - முதல் இன்னிங்சில் விளையாடும் நியூசிலாந்து 38/6 ரன்கள் எடுத்துள்ளது.
சிராஜ் 3, அக்ஸர் படேல், அஷ்வின், ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்துள்ளனர்; 287 ரன்கள் நியூசிலாந்து பின்தங்கியுள்ளது.
* அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு.
சுமார் 150 வேட்புமனுக்கள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
* இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு:
குஜராத்தில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி - இந்தியாவில் இதுவரை 3 பேர் பாதிப்பு.
ஜிம்பாப்வேயில் இருந்து திரும்பிய குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கு "ஒமிக்ரான்" கொரோனா தொற்று உறுதி-குஜராத் சுகாதாரத்துறை.
* 62 ரன்களுக்கு சுருண்டது நியூசிலாந்து.
இந்தியாவுடனான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு ஆல் அவுட்.
நியூசிலாந்து 263 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்தியா இரண்டாவது இன்னிங்சை துவங்கியது.
* மூத்த ஊடகவியலாளர் வினோத் துவா உடல்நலக் குறைவு காரணமாக தில்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 67.
பத்து விக்கெட் படேல்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வம்சாவளியை சேர்ந்த நியூசி. வீரர் அஜாஸ் சாதனை
அஜாஸ் படேல் மும்பையில் பிறந்தவர் ஆவார் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த பவுலர்கள்!
* 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எளிதில் கிழியாத மற்றும் நீரினால் சேதம் அடையாத செயற்கை இழையாலான "புதிய மதிப்பெண் சான்றிதழ்" வழங்க ரூ.10.62 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.
* பொதுத் துறை வங்கிகளை தனியாருக்கு விற்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வங்கி ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
* தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு.
கர்நாடகாவில் 2 பேருக்கும், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு.
* வங்கக்கடலில் உருவான 'ஜவாத்' புயல் வலுவிழந்தது - இந்திய வானிலை ஆய்வு மையம்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 'ஜவாத்' புயல் வலுவிழந்தது.
No comments:
Post a Comment