அக்னிப்புரட்சி இன்றைய (06.12.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (06.12.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (06.12.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* இந்தியாவிலும் கொரோனாவுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா? - இன்று முக்கிய ஆலோசனை.

அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகளைப் போல இந்தியாவிலும் கொரோனாவுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா? - தேசிய நோய்ப் பரவல் தடுப்பு வல்லுநர் குழு டெல்லியில் இன்று கூடி முக்கிய ஆலோசனை.

* தஞ்சை மருத்துவக் கல்லூரி கழிவறையில் சடலமாக பெண் சிசு கண்டெடுக்கப்பட்ட விவகாரம்.

குழந்தையைப் பெற்று ஃபிளஷ் டேங்க்கில் போட்ட தஞ்சை மாவட்டம் பூதலூரைச் சேர்ந்த கொடூர தாய் பிரியதர்சினி கைது.

* பாபர் மசூதி இடிப்பு தினம் -முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை இஸ்லாமிய அமைப்புகள் கருப்பு தினமாக அனுசரித்து வருவதையொட்டி இன்று டெல்லி, மும்பை, அயோத்தி, மதுரா உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

* கரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள நடுநிலை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை- மாவட்ட ஆட்சியர்.

* வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி அசத்தல்!!!

மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சக்திவேல், கர்ப்பமடைந்த அவரது வளர்ப்பு நாய் சுஜிக்கு நேற்று மனிதர்களுக்கு நடத்துவது போலவே வளைகாப்பு நடத்தினார்.

* தடுப்பூசி போடாதவர்களுக்கு வணிக வளாகங்களுக்குள் அனுமதி இல்லை! - பெங்களூரு மாநகராட்சி

* ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் 3வது நாளான இன்று பக்தர்களுக்கு எழுந்தருளிய ரெங்கநாதர்!

* மும்பை டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி:

நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.

* டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
 
மேலும் அங்கு அலங்கரித்துவைக்கப்பட்ட உருவ படத்திற்கு குடியரசுத் தலைவரும், பிரதமரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

* சென்னை, தலைமை செயலகத்தில் உழவர் நலத்துறை சார்பில் மானிய விலையில் தளைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ரூ 25க்கு 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தளைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* அதிமுக ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர்  தேர்தல் நடத்த தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுகவின் ஜெயசந்திரன் என்பவர் முறையீடு.

ஏற்கனவே, கே.சி.பழனிசாமி தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், புதிய வழக்கு.

* கொரோனாவில் இருந்து குணமடைந்த சில நாட்களிலேயே பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும்.

மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டிருந்தாலும், அதன் பின் 7 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன்.

* நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ; மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு.

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைப்பு.

* திருநெல்வேலி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ப. சரவணன் IPS பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

* அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவு.

தேர்தல் மோசடி, சட்ட விரோதமாக வாக்கி டாக்கி வாங்கியது, தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிப்பு.

* அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈ.பி.எஸ் ஆகியோர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு.

* முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கில் தீபக், தீபா ஆகியோரை சேர்க்க வேண்டும் - வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஜெயலலிதா காலமாகி விட்டதால், அவரது வாரிசுகளான ஜெ.தீபா - ஜெ.தீபக் ஆகியோரை சேர்க்க உத்தரவு.

* விழுப்புரம் மாவட்டத்தின் கழுவெளி சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

தமிழ்நாட்டின் 16-வது பறவைகள் சரணாலயமாக வலசைப் பறவைகள் வந்து செல்லும் கழுவெளி சதுப்பு நிலம் அறிவிப்பு.

* அரசு முறை பயணமாக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

ராணுவம், தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட துறைகளில் இருதரப்பும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

* திமுக அரசை கண்டித்து வரும் 9-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் : ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அறிக்கை.

பெட்ரோல் - டீசல் மீதான வாட் வரி, மழை வெள்ள நிவாரணம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக போராட்டம் - அதிமுக.

* ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழப்பு

காவலர்கள் தாக்குதலால் மணிகண்டன் உயிரிழந்ததாக கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

* மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அமெரிக்கா, தென் ஆப்ரிக்காவிலிருந்து மகாராஷ்டிரா வந்த இருவருக்கு
ஒமைக்ரான் பாதிப்பு.

* கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ,50,000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியீடு.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசு அறிவுறுத்தல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages