அக்னிப்புரட்சி இன்றைய (08.12.2021) முக்கிய செய்திகள்.
* சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு;
ரூ.3,400 ஆக இருந்த ரெபிட்-பிசிஆர் பரிசோதனை கட்டணம் ரூ.2,900 ஆக குறைப்பு.
ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டணம் ரூ.700 லிருந்து ரூ.600 ஆக குறைப்பு, இன்று முதல் அமல்.
* ஸ்ரீரங்கம் அருள்மிகுஅரங்கநாதசுவாமி திருக்கோயில் : வைகுந்த ஏகாதசி பகல் பத்து 5- ம் நாள் (08.12.2021).
ஸ்ரீநம்பெருமாள்
இரத்தின பாண்டியன் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரகைக் காப்பு,விமான பதக்கம், நெல்லிக்காய் மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
* சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி, சில்லரை வியாபாரத்தில் ₨130-க்கு விற்பனை
* டெல்டா திரிபைவிட ஓமிக்ரான் திரிபு தீவிரமானதில்லை என்பதை 'கிட்டத்தட்ட உறுதியாகச்' சொல்லலாம் என்கிறார் அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஆண்டனி ஃபௌசி.
* நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு - அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரிதிநிதிகள் பங்கேற்க அழைப்பு
* அரசு பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - போக்குவரத்துத்துறை
தணிக்கையாளர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது படிக்கட்டு பயணத்தை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பான முறையில் ஏறி, இறங்குவதை உறுதி செய்த பின்னரே பேருந்துகளை இயக்க வேண்டும் - போக்குவரத்துத்துறை
* டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு-தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* மின்சாரத் திருத்த சட்டத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்க வேண்டும்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
மின்சார சட்டத் திருத்தம், தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையிலும் இருப்பதோடு, மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவும் உள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 20 முதல் 24ம் தேதி வரை நடைபெறும்.
புதிய ஹால் டிக்கெட்டை வரும் 14ம் தேதி முதல் dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
💥 குன்னூர் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேரில் 13 பேர் உயிரிழப்பு என தகவல்.
சடலங்கள் டி.என்.ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட உள்ளதாகவும் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல்.
💥 தமிழகம் விரைகிறார் ராஜ்நாத் சிங்!
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு நடுவண் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
💥 திட்டமிட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்:
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் மும்பையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து.
💥 பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து பிரதமரிடம் ராஜ்நாத் கிங் விளக்கி கூற உள்ளதாக தகவல்.
💥 குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்.
உதகை செல்லும் வாகனங்கள் அனைத்தும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலை மார்க்கமாக மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.
ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப் படை வீரர்களின் திடீர் மரணம் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது
- பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்.
💥 முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்; இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் நிற்கிறோம்; விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது இரங்கல்.
இந்த துயரத்தில் இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
💥 பிபின் ராவத் பலி - குடியரசு தலைவர் இரங்கல்
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் மறைவுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்
பிபின் ராவத் மரணம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது - குடியரசு தலைவர்
இந்திய தனது துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்து விட்டது - குடியரசு தலைவர்
💥 முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப் படை அறிவிப்பு.
💥 குன்னூர் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்றுள்ள நிலையில் அதிமுக சார்பில் நாளை நடக்க இருக்கும் போராட்டம் வரும் 11ம் தேதி ஒத்திவைப்பு- அதிமுக.
* புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் இதழின் "உலகின் 100 திறன்மிகு பெண்கள்" பட்டியலில் இடம்பிடித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
* இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோகித் ஷர்மா நியமனம் - பிசிசிஐ அறிவிப்பு
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாகவும் ரோகித் ஷர்மா நியமனம் - பிசிசிஐ
💥 கோவையில் இருந்து ஹெலிகாப்டர் விபத்து நடந்த குன்னூர் பகுதிக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக குன்னூர் செல்கிறார் முதல்வர்
ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
💥 ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழப்புக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரங்கல்
ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழப்புக்கு பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் இரங்கல்
💥 வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்த முப்படை முதல் தலைமை தளபதி பிபின் ராவத் படத்திற்கு அஞ்சலி செலுத்தி அங்கு வைக்கப்பட்ட புத்தகத்தில் இரங்கல் குறிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்தனர்
💥 மறைந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு வரும் வெள்ளிக்கிழமை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
பிபின் ராவத், மற்றும் அவரது மனைவியின் உடல்கள் நாளை ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகின்றன.
No comments:
Post a Comment