அக்னிப்புரட்சி இன்றைய (09.12.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (09.12.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (09.12.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* நீலகிரி : குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விமானப்படை தளபதி மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் நேரில் ஆய்வு.

* நீலகிரி: குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி கண்டெடுப்பு

காட்டேரி நச்சப்புராசத்திரம் மலைப்பகுதியில் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

* ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்புத் துண்டு அணிந்து மரியாதை.

* ஹெலிகாப்டர் விபத்து குறித்து 11 மணியளவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகள் 13 பேருக்கும், நாடாளுமன்ற இரு அவைகளிலும் இரங்கல்.

சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து மதியம் 1 மணியளவில் ராணுவ அதிகாரிகளின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்படுகின்றன.

சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து பிபின் ராவத் உள்ளிட்டோர் பகல் 11.45 மணிக்கு புறப்பட்டனர் - குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக மக்களவையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

வெலிங்டனை அடைய 15 நிமிடங்களே இருந்த நிலையில் நண்பகல் 12 மணியளவில் தொடர்பு துண்டிக்கப்பட்டது

தொடர்பு துண்டிக்கப்பட்ட உடன் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது 
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்

குரூப் கேப்டன் வருண் சிங் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்

வருண் சிங்கை காப்பாற்ற தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்துவருகிறது - அமைச்சர் ராஜ்நாத் சிங்சிங்.

* முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு மக்களவையில் இரங்கல்.

* ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடல் இன்று மாலைக்குள் டெல்லி கொண்டுவரப்படும் - மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத்சிங் விளக்கம்.

* முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது - ராஜ்நாத் சிங் அறிவிப்பு.

* தமிழகத்தில் இருமொழி கொள்கைக்கு ஆதரவு தருமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலை கழக பட்டமளிப்பு விழா மேடையிலேயே கோரிக்கை வைத்தார் அமைச்சர் பொன்முடி.

வெளி உலக தொடர்புக்கு ஆங்கிலமும், மாநிலத்திற்கு தமிழும் இருக்க வேண்டும். 3வதாக தெலுங்கு, இந்தி, கன்னடம் என ஏதாவது ஒரு மொழி படிக்கலாம். ஆனால், கட்டாயப்படுத்தக்கூடாது- அமைச்சர் பொன்முடி.

* ராணுவ வீரரின் உடல் ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் சிக்கியது அந்த ஆம்புலன்சில் இருந்த உடல் வேறொரு ஆம்புலன்சுக்கு மாற்றப்பட்டது.

* சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 13 பேரின் உடல்களும் விமானப்படை விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டது

* காவல்துறை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது.

முதுகுளத்தூரை சேர்ந்த மணிகண்டன் இறந்த வழக்கில் காவல்துறையை விமர்சித்ததாக மதுரையில் கைது.

*:குன்னூர் விமான விபத்தில் உயிர் பிழைத்த விமானப்படை அதிகாரி வருண் சிங் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்படுகிறார்.

* முதலமைச்சரை பாராட்டிய உயர்நீதிமன்றம்.

ஒரு முதல்வரால் எவ்வளவு முடியுமோ அதைவிட அதிகமாகவே தமிழக முதலமைச்சர் பணியாற்றி வருகிறார். அவரை பாராட்டாவிட்டாலும் அவதூறாகப் பேசுவதைத் தவிர்க்கலாம். -  ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி புகழேந்தி

* பள்ளி, கல்லூரி ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது, முன் எழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் - தமிழக அரசு அரசாணை வெளியீடு.

* இந்தியாவிலிருந்தோ, இந்தியாவிலிருந்தும் பயணிக்கும் சர்வதேச விமான பயணிகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவை ஜன.31 வரை ரத்து.

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளரால் அனுமதிக்கப்படும் குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டும் அனுமதி - விமான அமைச்சகம்.

* டெல்லி பாலம் விமானப்படை தளத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.

பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி,  குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் அஞ்சலி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages