அக்னிப்புரட்சி இன்றைய (10.12.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு.
டெல்லியில் உள்ள இல்லத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அஞ்சலி செலுத்த அனுமதி.
கன்டோண்ட்மென்ட் மயானத்திற்கு இன்று பிற்பகல் இறுதி ஊர்வலம்.
* நாகர்கோவிலில் பேருந்தில் இருந்து நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தை பேருந்திலிருந்து கீழே இறங்கிய விவகாரத்தில், ஓட்டுநர் நெல்சன் மற்றும் உடைமைகளை தூக்கி வீசிய நடத்துநர் ஜெயபாலன் ஆகியோர் பணியிடைநீக்கம்.
* நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா பகல் பத்து ஏழாம் நாள் 10.12.2021
நம்பெருமாள் முத்து சாய்வு கொண்டை அணிந்து, கபாய் சட்டை, அடுக்கு பதக்கம், வைர அபயஹஸ்தம், முத்துமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடியவாறு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பொதுஜன சேவைசாதித்து வருகிறார்.
* மனோஜ் முகுந்த் நரவனே முப்படைக்கு புதிய தலைமை தளபதியாக பதவியேற்று கொண்டார்
* விழுப்புரத்தில் அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - புகார்.
சென்னை கல்லூரி மாணவியை நடத்துனர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக புகார்.
* தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மறு உத்தரவு வரும் வரை கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிப்பு.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு.
கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் கூட்டமாக உணவருந்த தடை விதிப்பு.
அண்ணா பல்கலைக்கழக விடுதியில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை.
* ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் கடிதம்.
கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்கிறார்கள்.
ஈடுசெய்ய முடியாத இழப்பில் இருந்து மீண்டுவர பலத்தையும், தைரியத்தையும் பெற வேண்டும் - முதல்வர்.
* தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
* முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
* நாடு முழுவதும் பள்ளி குழைந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தில் நுண்ணூட்டச்சத்து நிறைந்த சிறுதானியங்களை சேர்ப்பதற்காக அவை கொள்முதல் செய்யப்படுமா? மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மாநிலங்கள் அவையில் வினா இதற்கு மத்திய அமைச்சர் பதில்
* முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்ல சாவி தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைப்பு- சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி சாவியை ஒப்படைத்தார்.
* விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்- காவல்துறை எச்சரிக்கை.
சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்-காவல்துறை.
ஹெலிகாப்டர் விபத்தில் உண்மையை கண்டுபிடிக்கும் வரை தேவையின்றி யூகம் செய்யாதீர்கள் என விமானப்படை தெரிவித்துள்ளது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்திய விமானப்படை வேண்டுகோள் விடுத்துள்ளது.
* தலைமை தளபதியின் இறப்பின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்கள் இருப்பதாக பொய் செய்திகளை சமூக வலைதளத்தில் பரப்பியது தொடர்பாக குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த ஷிபின் (24) என்ற இளைஞர் கைது.
அவர் மீது 153A, 505/1 b, 504 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
* அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதத்தை கருவிகள் மூலம் இசைப்பதை தவிர்க்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக, பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட ஏற்பாடு செய்ய தமிழக அரசு உத்தரவு.
* டெல்லி பிரார் சதுக்கத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உடல்கள் முழு ராணுவ மரியாதை உடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டன.
* சபரிமலையியல் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் தளர்வுகளை தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.
பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் பகுதியிலுள்ள வனப்பகுதியில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.
* இரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தீவிரமாக கண்காணிக்க போவதாக மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.
யானைகள் இறப்பு குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. யானை வழித்தடங்களில் ரயில்களை மெதுவாக இயக்கினால் என்ன?
இதுபோன்று யானைகள் இறப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை ஜனவரி 21ல் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன்,சதிஷ்குமார் அமர்வு உத்தரவு.
No comments:
Post a Comment