இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்கள், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் 11 பேர் குன்னூர் அருகே இன்று மதியம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்கள் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல். - Agnipuratchi

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்கள், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் 11 பேர் குன்னூர் அருகே இன்று மதியம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்கள் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.

Share This

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்கள், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் 11 பேர் குன்னூர் அருகே இன்று மதியம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்கள் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.

இந்திய போர்ப்படையின் 26-ஆவது தளபதியாக பணியாற்றிய ஜெனரல் பிபின் ராவத் இந்திய எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஏராளமான திட்டங்களை வகுத்து செயல்படுத்தியவர். பாகிஸ்தான் எல்லையிலும், சீன எல்லையிலும் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர். 1987-ஆம் அருணாச்சல பிரதேச எல்லையில் சீன இராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற போது இவரது தலைமையிலான படையணி தான் அங்கு நிறுத்தப்பட்டது. இந்திய இராணுவத்தில் பல்வேறு நிலைகளில் வியக்கத்தக்க வகையில் பல சாதனைகளை படைத்திருக்கிறார். இந்தியாவின் முதல் முப்படைத் தலைமைத் தளபதியாக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட பிறகு சீன எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வந்தவர். வெலிங்க்டன் பாதுகாப்பு கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பாதுகாப்பு குறித்த பட்டங்களை பெற்றதன் மூலம் தமிழ்நாட்டுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் அவர்.

ஜெனரல் பிபின் ராவத் அவர்களின் மறைவு நாட்டிற்கும், பாதுகாப்பு படைகளுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரையும் அவரது மனைவியையும் இழந்து வாடும் அவர்களின் குடும்பங்களுக்கும்,  இவ்விபத்தில் உயிரிழந்த மற்ற 11 வீரர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த கேப்டன் வருண்சிங் விரைந்து முழு நலம் பெற விழைகிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages