அக்னிப்புரட்சி இன்றைய (11.12.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* குடிமைப் பணிகள் (IAS/IPS) முதல் நிலைத் தேர்வு எழுத விரும்புவோருக்கு தமிழ்நாடு அரசு கட்டணமில்லா பயிற்சியளிக்கிறது. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 28, 2021
* 14 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்!
தமிழ்நாடு முழுவதும் 50,000 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது;
இதுவரை 82% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 48% 2 வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
" ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேலும் 2 ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் கண்டறியப்பட்டன - இந்திய ராணுவம்.
சாய் தேஜா மற்றும் விவேக் குமார் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு இன்று அதிகாலை அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைப்பு - இந்திய ராணுவம்.
* முத்து கிரீடம் அலங்காரத்தில் நம்பெருமாள்:
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி
திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பகல் பத்து உற்சவம் 8ம் திருநாள்: ஸ்ரீ நம்பெருமாள் முத்து கிரீடம், ரத்தின அபயஹஸ்தம், அடுக்கு பதக்கம், ரத்தின மகர ஹண்டிகை, முத்துச்சரம் உள்ளிட்ட திரு ஆபரணங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
* கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பர் 19 ல் தேரோட்டமும், டிசம்பர் 20 ல் ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் விழா நடைபெறும்.
கொடியேற்றம், தேர் மற்றும் தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
* ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்- தலைமைச் செயலாளர் உத்தரவு.
சரியான காரணமின்றி சொத்து விவரங்களை தெரிவிக்காமல் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனவரி 31ம் தேதிக்குள்ளாக சொத்து விவரங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய வேண்டும்- தலைமைச் செயலாளர்.
* இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 425 ரன்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 297 ரன்கள் எடுத்தது.
இதனால் 20 ரன்களை இலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழந்து 20 ரன்கள் எடுத்து முதல் டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது.
* நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதுவை மாநில தலைமைச் செயலாளருக்கு வாரண்ட் - சென்னை உயர்நீதிமன்றம்.
புதுவை அரசு நிறுவனமான பாசிக் ஊழியர்களுக்கு சம்பளம் பாக்கி வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
* திருப்பதி: ஏழுமலையானுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான அபய, வரத ஹஸ்தம் எனப்படும் கை ஆபரணம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஏழுமலையானுக்கு பெயர் சொல்ல விரும்பாத பக்தர் ஒருவர், 5.3 கிலோ எடையுள்ள வைரம், மாணிக்கம் உள்ளிட்ட விலை மதிப்புள்ள கற்கள் பதிக்கப்பட்ட அபய, வரத ஹஸ்தம் இரண்டையும் நன்கொடையாக வழங்கினார்.
இவற்றின் மதிப்பு 3 கோடி ரூபாய்; இவற்றை அவர் நேற்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்து முடித்த பின் ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரியிடம் வழங்கினார்.
* நிர்வாக வசதிக்காக செய்தி மக்கள் தொடர்புத்துறை சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி என 6 மண்டலங்களாக பிரிப்பு.
சுற்றியுள்ள மாவட்டங்களை ஒருங்கிணைத்து இணை இயக்குனர்களை கூடுதலாக பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஆணை.
* புழல் சிறையில் விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழப்பு
கஞ்சா வழக்கில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த சீனிவாசன் திடீரென உயிரிழந்த நிலையில்,கணவரின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதால் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி ஜான்சிராணி புகார்
* உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூரில் ரூ 9,800 கோடி மதிப்பிலான 'சரயு நஹர்' தேசியத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
‘சரயு நஹர்' தேசியத் திட்டம் மூலம் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா மற்றும் ரோகினி ஆகிய 5 நதிகளும் இணைக்கப்பட உள்ளது.
* துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்தின் மீட்பு பணிகளுக்கு உடனடியாக உதவிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
மீட்பு பணிக்கு உதவிய நீலகிரி ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் கட்டேரி கிராம பொதுமக்கள் ஆகியோருக்கும் நன்றி - இந்திய விமானப்படை .
* 3 பேர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்:
கன்னியாகுமரியில் குறவர் இனத்தைச் சேர்ந்த 3 பேர் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட விவகாரம்.
அரசுப்பேருந்து நடத்துனர், ஓட்டுனர் உள்பட 3 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது.
3 பேரும் பேருந்தில் சண்டையிட்டதால் இறக்கி விடப்பட்டது தெரியவந்துள்ளது.
* குன்னூர் ராணுவ ஹெலிகாப்ர் விபத்தில், மீட்பு பணிகளில் உதவிய தமிழக அரசுக்கும், நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும், காட்டேரி உள்ளூர் வாசிகளுக்கும் - இந்திய வான் படை நன்றி தெரிவித்துள்ளது
* ஆஷஸ் முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணிக்கு அடுத்த அடி.
ஆஷஸ் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்துவீசிய இங்கிலாந்து அணிக்கு ஐசிசி அபராதம்.
போட்டிக்கட்டணத்தில் 100% அபராதத்துடன், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5 புள்ளிகளும் குறைப்பு.
* ஈரோடு அருகே சித்தோடு பகுதியில் இயங்கிவரும் தனியார் கெமிக்கல் ஆலையில் வாயு கசிந்து விபத்து.
மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆலை உரிமையாளர் உயிரிழந்த நிலையில் 13 பேர் மருத்துவமனையில் அனுமதி.
* நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்து மக்கள் பணியாற்ற இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
அரசியல் ஆர்வமுள்ள 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
* 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதி - கோயில் நிர்வாகம்.
No comments:
Post a Comment