அக்னிப்புரட்சி இன்றைய (12.12.201) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (12.12.201) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (12.12.201) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டதாக அறிவிப்பு.

ஹேக் செய்யப்பட்ட கணக்கு சிறுது நேரத்தில் மீட்கப்பட்டது - பிரதமர் அலுவலகம்.

ஹேக் செய்தவர்கள் பிரதமர் மோடியின் கணக்கில் பிட்காயினுக்கு ஆதரவாக போஸ்ட்.

மீட்கப்பட்ட பின் போஸ்ட் செய்யப்பட்ட ட்விட்கள் உடனடியாக நீக்கப்பட்டன.

* ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்

நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா பகல் பத்து ஒன்பதாம் நாள்
12.12.2021

நம்பெருமாள்   முத்துக்குறிக்காக முத்து பாண்டியன் கொண்டை, முத்து அபயஹஸ்தம், காதுகாப்பு, முத்தங்கி, முத்து ஆபரணங்கள் சூடியவாறு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதித்து வருகிறார்.

* சென்னை மெரினா, எம்.ஆர்.சி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது!

* நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து:

உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

அவர் இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும், நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்- முதலமைச்சர்.

* இனி ஆன்லைன் தேர்வு கிடையாது- யுஜிசி அதிரடி.

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இனி செமஸ்டர் தேர்வை நேரடியாக மட்டுமே நடத்த வேண்டும் - அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானிய குழு கடிதம்.

* ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான வாழ்வு வாழ எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் - நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ட்வீட்.

* சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 18ஆம் தேதி நடைபெறும் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

* சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு

கோவையில் பள்ளி மாணவன் இறுக்கமாக சட்டை அணிந்து வந்ததால் ஆசிரியர் தாக்கிய விவகாரம்

மாணவனை தாக்கிய பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித்தை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவு

* மதுரை கோயில் - தடுப்பூசி உத்தரவு வாபஸ்:

2,டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால்தான் மட்டுமே மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதி என்ற அறிவிப்பை வாபஸ் பெற்றது கோயில் நிர்வாகம்; மேலும், வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தகவல்.

* கேரளாவில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு:

கேரளாவில் முதல் ஒமிக்ரான் தொற்று உறுதியானதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபரின் மனைவி மற்றும் தாய் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி; இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்காணித்து வருகிறோம்- கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

* இந்தியாவில் ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 35ஆக உயர்வு

மகாராஷ்டிரா - 17, ராஜஸ்தான் - 9, டெல்லி - 2, குஜராத் - 3, ஆந்திரா -1, கேரளா-1 கர்நாடகா - 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி

* ஹெலிகாப்டர் விபத்து தவறான தகவல்- நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது :

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூகவலைதளத்தில் தவறான தகவல் பரப்பியதாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் பாலசுப்பிரமணியன் கைது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages