அக்னிப்புரட்சி இன்றைய (14.12.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (14.12.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (14.12.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக "ஸ்ரீநம்பெருமாள்" வெண்பட்டுடுத்தி, ரத்தின அங்கியுடன் கிளி மாலைசூடி, பரமபத வாசலை நோக்கி புறப்பட்டார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடந்து  வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் இன்று அதிகாலை 4.44 மணிக்கு திறக்கப்பட்டது.

இதற்காக ரத்தின அங்கியில் எழுந்தருளிய ஸ்ரீ நம்பெருமாள்.
19 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* ஊக்கத்தொகை திட்டம் - அரசாணை வெளியீடு:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டம்.

கல்வி ஊக்கத்தொகை வழங்க ஏதுவாக அஞ்சலக சேமிப்பு கணக்குக்கு பதில், வங்கிகளில் தனிநபர் வைப்புநிதி கணக்கு தொடங்க முடிவு.

ஒவ்வொரு மாணவியருக்கும் தனித்தனியாக தனிநபர் வைப்பு நிதி கணக்கு தொடங்க ஏதுவாக ரூ 16.75 கோடி நிதி விடுவித்து உத்தரவு.

* இந்தோனேசியாவில் 7.5 ரிக்டர் அளவில் கடுமையான நில நடுக்கம் - அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை என இந்திய சுனாமி ஆய்வு மையம் தகவல்.

* டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றம்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர்.

* மாணவி தற்கொலை - ஆசிரியருக்கு குண்டாஸ்.

கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்த‌து.

* யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கு ரத்து. மாரிதாஸ் மீது வழக்கு பதிந்தது செல்லாது - மதுரைக்கிளை.

* இந்திய மற்றும் தமிழ்நாடு அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

பதவிக்காலம் முடிந்தும் எம்.பி.,அமைச்சர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், கடை நிலை ஊழியர்கள் வரை அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதாக நீதிபதிகள் கருத்து.

அனைவரும் சின்னத்தை பயன்படுத்தினால் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் எப்படி அந்த வாகனத்தை நிறுத்தவோ, விசாரிக்கவோ முடியும்? - நீதிமன்றம்.

* 58,453 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு மொத்தம் ரூ.2,749.85 கோடி கடனுதவி இன்று வழங்கப்படுகிறது.

பெண்கள் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்தது திமுக ஆட்சிதான்- திருத்தணியில் நடைபெறும் நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

* டெல்லியில் ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி.

12 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யப்படாததற்கு கண்டனம்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதிக்க கோரிக்கை வைத்தால் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது - காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி.

நாங்கள் அரசாங்கத்தை கேள்வி கேட்க முயற்சி செய்தால் அவர்கள் அனுமதிப்பதில்லை.

நாடாளுமன்ற கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பதில்லை - ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

* தஞ்சை அருகே 62 ஆயிரம் ரூபாய்க்கு, செம்மறி ஆடு மேய்க்கும் தொழிலுக்கு கொத்தடிமைகளாக விற்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

* அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடித் தேர்வு மட்டுமே நடத்தப்படும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளங்களில் வெளியான கடிதம் போலியானது எனவும்,   அது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் எந்த கடிதமும் வெளியாகவில்லை என யுஜிசி விளக்கம்.

* ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த இளைஞர் மணிகண்டன் போலீஸ் அடித்து இறக்கவில்லை - ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் விளக்கம்.

ராமநாதபுரத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் வீட்டில் இருந்து விஷ பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை அடித்ததால்தான் மணிகண்டன் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறான தகவல்- தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன்.

* பணியிடத்தில் பெண்கள் தெரிவிக்கும் பாலியல் குற்றச்சாட்டு மீது உடனடி நடவடிக்கை தேவை-  சென்னை உயர்நீதிமன்றம்.

பெண்களுக்கு எதிரான பாலியல் புகார் விசாரணையை தாமதப்படுத்துவது கடமை தவறிய செயல்.

அரசுத்துறைகள், பொது நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை புகார்கள் அதிகமாக உள்ளன - நீதிபதி.

* வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை கண்டித்து டிச.16, 17ல் திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறும்- வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு.

* அரசு விழாக்கள், தனியார் நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆலைகள், கல்விநிறுவனங்கள் போன்றவற்றில் நடைபெறும் விழாக்களிலும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டுப்புறக் கலைகளை பாதுகாத்திடவும், கலைஞர்களின் வாழ்வினைச் செம்மைப்படுத்திடவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

* தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு.

3,800 பேருக்கான முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என TNPSC அறிவிப்பு.

* கொரோனாவால் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்கள் ₨50 ஆயிரம் நிவாரண தொகையை பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு
www.tn.gov.in

* சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்திப்பு.

* எங்கள் கிராமத்திற்கு மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் பெயரை சூட்ட வேண்டும் என்று விபத்து நடந்த பகுதி மக்கள் நீலகிரி கலெக்டரிடம் மனு...

* வெடிபொருட்களுடன் பிடிபட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 4 பேர் விடுதலை என தீர்ப்பு.

2012 ல் பல்லாவரம்-பம்மல் சாலை சந்திப்பில் உதயாஸ் என்பவரிடம் இருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது; உதயாஸ் கொடுத்த தகவலை அடுத்து மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கை விசாரித்த பூவிருந்தவல்லி நீதிமன்றம் உதயாஸ், சேரா, கிருஷ்ணமூர்த்தி, மகேஸ்வரன் ஆகியோரை வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளது.

வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த மகேஷ்வரன், சிவனேஷ்வரன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages