அக்னிப்புரட்சி இன்றைய (15.12.2021) முக்கிய செய்திகள்.
* முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்சஒழிப்பு துறை சோதனை.
அதிமுக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை; நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு; அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்ப்பு.
ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய 69 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 14 இடங்களிலும், நாமக்கல் உள்பட 9 மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது.
முன்னாள் அமைச்சர் தங்கமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ 4.85 கோடி சொத்து தன் மனைவி மற்றும் மகள் பெயரில் கடந்த 5 ஆண்டில் சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
கிரிப்டோ கரன்சியில் தங்கமணி முதலீடு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு.
* அரசு முறை சுற்றுப்பயணமாக வங்கதேசம் புறப்பட்டார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.
அந்நாட்டின் 50 வது போர் வெற்றி நாள் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகவும் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளார்.
💥 இதுவரை கண்டிராத வேகத்தில் பரவும் ஒமிக்ரான் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.
இதுவரை உலக அளவில் 77 நாடுகளில் பரவியுள்ளது - உலக சுகாதார நிறுவனம்.
ஒமிக்ரான் இன்னும் கண்டறியப்படாவிட்டாலும் கூட, பெரும்பாலான நாடுகளில் இருக்கலாம்.
ஓமிக்ரான் முந்தைய மாறுபாடுகளுடன் நாம் இதுவரை காணாத வேகத்தில் பரவுகிறது.
மக்கள் ஓமிக்ரானை லேசானது என்று நிராகரிக்கின்றனர். இது எங்களுக்கு கவலையை தருகிறது.
நிச்சயமாக, இந்த வைரஸை குறைத்து மதிப்பிடுகிறோம் என்பதை நாங்கள் இப்போது கற்றுக்கொண்டோம்.
தற்போது கடுமையான பாதிப்பு குறைந்த பேருக்கு இருந்தாலும் பின்பு அதிகரிக்கக்கூடும்.
தடுப்பூசிகளால் மட்டும் எந்த நாட்டையும் இந்த நெருக்கடியிலிருந்து காப்பாற்ற முடியாது.
தற்போது எடுக்கும் நடவடிக்கைகள் மூலமே ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
மாஸ்க்குக்கு பதிலாகவோ, சமூக இடைவெளிக்கு பதிலாகவோ தடுப்பூசிகள் இல்லை.
அனைத்தையும் மக்கள் நன்றாக கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
அனைத்து நாடுகளிலும் மிகவும் ஆபத்தில் உள்ளவர்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் போது தடுப்பூசிகள் ஒரு கருவியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரு சில நாடுகள் தடுப்பூசிகளை பயன்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்கின்றன.
உலக சுகாதாரா நிறுவன ஊழியர்கள் தடைகளை சமாளிக்க அந்த நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர்.
ஒமிக்ரான் தொற்று சில நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு வழிவகுத்துள்ளது.
ஆனால் பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரானை கட்டுப்படுத்தும் என்பதற்கான எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை.
இதுபோன்ற திட்டங்கள் கொரோனா தடுப்பூசி பதுக்கலுக்கு வழி வகுக்கும்- உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்.
* தமிழக அரசின் தேயிலை தோட்ட நிறுவனம் சார்பில் புதிதாக நடமாடும் 20 தேநீர் கடைகளை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்
* தமிழக அரசுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் வகையில் முறைகேட்டில் சஸ்பெண்ட் ஆனவர் தற்கொலை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூ .1.80 கோடி அளவிற்கு நகை கடன் மோசடி விவகாரம்.
கீரனூர் கூட்டுறவு வங்கியின் செயலாளர் உள்ளிட்ட 2 பேர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் , கீரனூர் கூட்டுறவு வங்கிச் செயலாளர் நீலகண்டன் , தூக்கிட்டுத் தற்கொலை.
கீரனூரில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் , நீலகண்டன் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை.
* வேலூரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுவரை துளையிட்டு நகைகள் திருட்டு
வேலூர் தோட்டப்பாளையத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையானது நேற்று இரவு 10 மணிவரை செயல்பட்டிருக்கிறது
இரவுநேர காவலர்களும் பணியில் இருந்ததால் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அதிகாலைக்குள் இந்த திருட்டு நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நகைக்கடையின் பின்புற சுவரை துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் கீழ்த்தளத்திலுள்ள நகைகளை திருடிச்சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட எஸ்பி மற்றும் டிஐஜி ஆகியோர் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
* குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழப்பு
* தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை - அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.
பாமகவுக்கு, அதிமுக என்ன துரோகம் செய்தது? மக்கள் வாக்களிக்காததால் தான் பாமக தேர்தலில் தோற்றது - எடப்பாடி பழனிசாமி.
* நீர் நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஒருங்கிணைந்த புதிய சட்ட முன்வடிவு வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட உள்ளது - உயர் நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு அறிக்கை.
* புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அனுமதி:
புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 2ஆம் தேதி வரை நீட்டிப்பு.
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட டிச.24 மற்றும் 25ஆம் தேதிகளில் தளர்வுகள் அறிவிப்பு.
ஆங்கில புத்தாண்டை கொண்டாட டிச.30, 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதி தளர்வுகள் அறிவிப்பு.
டிச.30, 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் அதிகாலை 2 மணி வரை மட்டுமே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
* முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ .2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஒழிப்பு காவல் துறையினர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி 1.130 கிலோ தங்க நகைகள், சுமார் 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டறியப்பட்டன.
சான்று பொருள்களான கைப்பேசிகள் , பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள் , கணினி ஹார்டு டிஸ்க்குகள் , வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
💥 தமிழ்நாட்டிற்குள் புகுந்தது ஓமிக்ரான் வைரஸ்,
ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.- தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த பயணிக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
இவருடன் தொடர்பில் இருந்த 6 பேருக்கு S என்ற மரபணு தொற்று உறுதி.
இந்தியாவில் 9 மாநிலங்களில் ஏற்கனவே 68 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு.
நைஜீரிய பயணியுடன் சென்னை வந்த ஒருவருக்கும் லேசான அறிகுறி உள்ளது - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
No comments:
Post a Comment