அக்னிப்புரட்சி இன்றைய (18.12.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (18.12.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (18.12.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* ஸ்ரீபெரும்புதூர்: தனியார் விடுதியில் தரமற்ற உணவு வழங்கியதால், சென்னை - பெங்களூரு சாலையில் தனியார் தொழிற்சாலையைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பெண்கள் விடிய விடிய போராட்டம்

சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களுடன் ஆட்சியர் பேச்சுவார்த்தை.

விஷமான உணவை உண்டதால் பெண்கள் இறந்ததாக கூறப்படுவது வதந்தி என ஆட்சியர் தகவல்.

நலமுடன் இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பாதிக்கப்பட்ட பெண்கள் வீடியோகாலில் பேசினர்.

சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் பல மணி நேரமாக 3 ஆயிரம் பெண்கள் போராட்டம்.

* ஜன.12 ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகின்றார்.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க பிரதமர் மோடி சென்னை வருகை தர உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

* காஞ்சிபுரம்;  ஸ்ரீபெரும்புதூர் அருகே 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

தனியார் நிறுவன விடுதியில் தரமற்ற உணவு வினியோகிப்பதாக சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் வாபஸ்

தங்கும் உணவு விடுதி வார்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர்

* செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் 'இன்னுயிர் காப்போம்' என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முதல் 48 மணி நேரத்திற்கான மருத்துவ செலவை அரசே ஏற்கும்.

தமிழகம் முழுவதும் 610 மருத்துவமனைகளில் 'இன்னுயிர் காப்போம்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பினும், அரசு சார்பில் ரூ 1 லட்சம் நிதி அளிக்கப்படும்.

இளைஞர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும்.

கார்களில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

விபத்துக்கு முக்கிய காரணம் சாலைகளில் வேகமாக செல்வது, எனவே சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* திருச்சி, நவல்பட்டு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்த‌து.

புதுக்கோட்டை சிறையில் இருந்த மணிகண்டன் திருச்சி சிறைக்கு மாற்றம்.

* சென்னை திருமங்கலத்தில் ஆன்லைன் வகுப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய கணித ஆசிரியர் கைது.

சென்னை திருமங்கலத்தில் ஆன்லைன் வகுப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய கணித ஆசிரியர் மதிவாணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆன்லைன் வகுப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய மதிவாணனை போக்சோவில் திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

* இந்தியாவின் அதி நவீன புதிய ஏவுகணையான அக்னி-பி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. 

ஒடிசா பாலசோர் கடற்கரையில் நடந்த சோதனையில் அக்னி-பி ஏவுகணை பாய்ந்து சென்று துல்லியமாக இலக்கை தாக்கியுள்ளது.

* இந்தியாவில் ஓமிக்ரான் பரவினால் தினசரி 15 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் - ஓமிக்ரான் பரவல் பற்றி நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால் எச்சரிக்கை.

பண்டிகை காலத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வி.கே.பால் அறிவுறுத்தல்.

ஐரோப்பாவில் ஓமிக்ரான் பரவும் வேகத்தோடு இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிட்டு விகே பால் பேச்சு.

* பிரிட்டனில் 93,045 பேருக்கு ஓமிக்ரான் தொற்று பரவியுள்ளது.

பிரான்சில் 80% பேர் தடுப்பூசி செலுத்திய போதும் ஓமிக்ரான் பரவல் தீவிரம்.

* தொழிற்சாலைகள், வணிக நிறுவன ஊழியர்களுக்கு விடுதிகளில் அடிப்படை வசதிகள், சத்தான உணவுகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் - பாமக நிறுவனர் இராமதாஸ் அய்யா.

ஊழியர்கள் நலனை கண்காணிக்க பல்துறை அதிகாரிகளை கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் - இராமதாஸ் அய்யா

* இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு (Covovax) உலக சுகாதார நிறுவனம் அனுமதி!

அவரச கால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்தது உலக சுகாதார நிறுவனம்.

உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளிக்கும் 9 வது கொரோனா தடுப்பூசி இதுவாகும்.

* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்கு இதுவரை ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்காக இதுவரை 7 கோடியே 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்காக பிரதமரின் சுகாதார பாதுகாப்பு திட்ட நிதியில் இருந்து விடுவிக்கப்பட்ட தொகை பற்றிய விவரங்கள் மக்களவையில் கேள்வியாக கேட்கப்பட்டது.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019-2020-ம் ஆண்டு 3 கோடியே 12 லட்ச ரூபாயும், 2020-2021-ம் ஆண்டு 4 கோடியே 23 லட்சம் ரூபாயும் விடுவிக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

* ஜல்லிகட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி!

இந்தாண்டு ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் நாட்டு இன மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

கலப்பின மாடுகளுக்கு டோக்கன் கொடுக்கப்பட மாட்டாது. - அமைச்சர் மூர்த்தி

*:தனது மகன்கள் மற்றும் டிரைவரை காவல்துறையினர் சட்டவிரோதமாக விசாரித்தாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரியின் முறையீடு.

குடும்ப உறுப்பினர்களை விசாரணை என்ற போர்வையில் துன்புறுத்த வேண்டாம் என விருதுநகர் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை பெஞ்ச்.

* மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின், இராப்பத்து உற்சவத்தின் 5ம் நாளான இன்று (18.12.2021) மதியம் ஸ்ரீ நம்பெருமாள், வைரமுடி, சிகப்பு மற்றும் வைர ரங்கூன் அட்டிகை, தாயார் - அழகிய மணவாளன் பதக்கம், அடுக்கு பதக்கங்கள், காசு மாலை, முத்து இரட்டைவட சரம், பின் சேவை புஜகீர்த்தியுடன் சந்திரஹாரம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

* அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.

ராஜேந்திர பாலாஜி ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அப்பீல்.

* திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற & சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

* சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்திற்கு அனுமதி:

சிவ பக்தர்கள் இந்து முன்னணியினர் கோயில் எதிரே சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில் தேரோட்டத்திற்கு  அனுமதி என அறிவிப்பு.

போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தேரோட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து குறைந்த அளவிலான பக்தர்களோடு தேரோட்டம் நடத்த  வேண்டுகோள்.

தேரோட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages