அக்னிப்புரட்சி இன்றைய (20.12.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை.
நாமக்கல் - 10, ஈரோடு - 3, சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 15-ம் தேதி தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் மீண்டும் சோதனை.
* விபத்து: 3 பேர் உயிரிழப்பு.
கடலூர்: திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் கடலூர் சிப்காட் அருகே மரத்தின் மீது மோதி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.
* தடுப்பூசி போடாதவர்களுக்கு ஆபத்து……
“ஒமிக்ரான் கட்டுக்கடங்காமல் பரவுகிறது" - அமெரிக்கா எச்சரிக்கை.
உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருவதாக அமெரிக்க அதிபருக்கான மருத்துவ ஆலோசகர் அந்தோணி பவுசி தகவல்.
கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் தொற்று வேகமாக பரவக் கூடும் என்றும் தடுப்பூசி போடாதவர்கள் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கை.
* தமிழக மீனவர்களை அடிக்கடி சிறைப்பிடித்து துன்புறுத்தும் இலங்கை கடற்படையினருக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம்.
மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது, மீன்பிடி உரிமையை காப்பது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு - ஓபிஎஸ்.
* டெல்லி; நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பங்கேற்பு.
* அதிமுக ஆட்சியில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் கோடிக்கணக்கில் முறைகேடு.
52 கல்லூரி முதல்வர்கள் நாளை நேரில் விசாரணைக்கு ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்.
* நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு.
லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் அவை ஒத்திவைப்பு.
* சட்டவிரோத வெளிநாட்டு தொடர்பு விவகாரம்: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன்.
வெளிநாடுகளில் சட்டத்திற்கு புறம்பாக முதலீடு செய்தவர்களின் பட்டியல் பனாமா பேப்பரில் வெளியானது.
இந்த பட்டியலில் பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராயின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பியுள்ளது.
அமிதாப் பச்சன் மற்றும் அஜய் தேவ்கனுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.
* யூடியூப் வீடியோ பார்த்து பிரசவம் - குழந்தை பலி:
அரக்கோணத்தை அடுத்த நெடும்புலி கிராமத்தில் யூடியூப் வீடியோவை பார்த்து மனைவிக்கு பிரசவம் - குழந்தை உயிரிழப்பு.
மரச்செக்கு எண்ணெய் ஆலை உரிமையாளர் லோகநாதன் தனது மனைவி கோமதிக்கு யூடியூப் பார்த்து பிரசவம் செய்ததில் குழந்தை உயிரிழந்துள்ளது - அதிகாரிகள் விசாரணை.
* பிரசவம் பார்ப்பது ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல - அன்புமணி இராமதாஸ் கண்டனம்
யூடியூப் பார்த்து கணவரே பிரசவம் செய்வது, ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல.
மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது.
சிறிய தவறு நடந்தாலும் தாய்க்கும், சேய்க்கும் உயிரிழப்பு அபாயம் ஏற்படும்.
அரக்கோணம் அருகே இளம்பெண்ணுக்கு அவரது கணவர் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததாகவும், அதில் குழந்தை இறந்ததுடன் தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் வெளியான செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.
யூடியூப் மூலம் மகப்பேறு பார்ப்பது ஒரு சாகசம் என்பது போன்ற விஷமப் பிரச்சாரம் சமூக ஊடகங்களில் செய்யப்படுகிறது.
அவற்றை மக்கள் நம்பக் கூடாது; இது தொடர்பாக தமிழ்நாடு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் ட்வீட்.
* வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்.
இந்த சட்டம் மூலம் கள்ள ஓட்டுகளை தடுக்க முயற்சி - கிரண் ரிஜிஜூ.
நியாயமாக வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் சட்டம் கொண்டுவரப்படுகிறது - கிரண் ரிஜிஜூ.
* இலங்கை கடற்படை சிறைபிடித்த 55 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் நாளை மறுநாள் உண்ணாவிரதம் நடத்தவுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு.
ஜனவரி 1ம் தேதி சென்னை செல்லும் ரயிலை மறித்து போராட்டம் நடத்தவும் மீனவர்கள் திட்டம்.
* அடிலேய்டு டெஸ்ட் : ஆஸ்திரேலியா அபார வெற்றி.
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2ம் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை.
* வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் 'தேர்தல் சட்டத் திருத்த மசோதா' மக்களவையில் நிறைவேறியது.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றம்.
* வேதா நிலையம்; மேல்முறையீடு இல்லை - தமிழக அரசு விளக்கம்.
வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என நீதிபதி கிருபாகரன் அமர்வு உத்தரவிட்டிருந்தது.
நீதிபதி சேஷசாயி அமர்வும் இதேபோல் உத்தரவிட்டதால் மேல்முறையீடு செய்யவில்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்.
* வேலூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான கொள்ளையன் டீக்கா ராமனின் புகைப்படம் வெளியீடு.
வேலூர் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ தங்க நகைகள், 500 கிராம் வைர நகைகள் மீட்பு.
* சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 பொங்கல் சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும்,
பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகளும் இயக்கப்படும்- போக்குவரத்துத் துறை.
பொங்கல் பேருந்துகளுக்கு tnstc.in, redbus.in, paytm.com, busindia.com, tnstc official app இணையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம்- போக்குவரத்துத் துறை.
பொங்கல் நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு
1800 425 6151, 044 24749002 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்- போக்குவரத்துத் துறை.
* ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவ குழு ஒன்றை உருவாக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை.
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆவணங்களை மருத்துவ குழுவிடம் வழங்க நீதிமன்றம் ஆணை.
ஆணையத்தின் அனைத்து நடவடிக்கையிலும் மருத்துவ குழு தலையிடவுடம் உச்சநீதிமன்றம் அனுமதி.
* அரக்கோணம் அருகே யூ-டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது.
யூ-டியூப் பார்த்து பிரசவம் பார்த்ததில் பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு.
குழந்தையின் தாய்க்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஆதார் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் தேர்தல் சட்டங்கள் சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் அல்லது மசோதாவை தெரிவுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்- விசிக தலைவர் திருமாவளவன்.
தேர்தல் சட்டங்கள் மசோதா நிறைவேறினால் வாக்காளர்களை மதம், சாதி, இனம் அடிப்படையில் வகைப்படுத்தவும்,
அதனடிப்படையில் குறிவைத்து பிரச்சாரம் மேற்கொள்ளவும், குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கும் வழி ஏற்படுத்திவிடும்-திருமாவளவன்
* தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அதிகரிக்கும் நோய் தொற்றை கட்டுப்படுத்திட உரிய நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு.
* ஓமிக்கிரான் தொற்று எண்ணிக்கை 1.5- 3 நாட்களில் இரண்டு மடங்கு ஆகிறது.
இதன் காரணமாக தினசரி தொற்று எண்ணிக்கை மிக வேகமாக உயரும்.
இவ்வாறு உயர்ந்தால் சுகாதார கட்டமைப்பு மீது பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
* அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக வழக்கு;
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 2 தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், தனிப்படையினர் பாண்டிச்சேரி மற்றும் திருப்பதிக்கு விரைந்தனர்.
No comments:
Post a Comment