2022 புத்தாண்டு வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

2022 புத்தாண்டு வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

2022 புத்தாண்டு வாழ்த்துக்கள்
- பாமக தலைவர் ஜி.கே.மணி        
             
2021க்கு விடை கொடுப்போம்… 
2022ஐ வரவேற்போம்…   
      
2022 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியம், ஆனந்தம், வளம், வளர்ச்சி காணும் சிறப்புமிக்க ஆண்டாக அமைய இதயங்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.        
    
2020, 2021 கொரோனா பெருந்தொற்றின் நெருக்கடி மிகுந்த சோதனைகளிலிருந்து மீண்டு புது தெம்புடன் புத்தெழுச்சியுடன் புது நம்பிக்கையுடன் புதிய வளர்ச்சியை நோக்கி பயணிப்போம்...புதிய வரலாறு காண்போம்...        
        
ஒவ்வொரு தனி நபர் வளர்ச்சியிலும் ஒவ்வொரு குடும்பத்தின் முன்னேற்றத்திலும்தான் நாட்டின் வளர்ச்சி அடங்கியுள்ளது. அனைவருக்கும் உரிய உரிமைகளும் சமூகநீதியும் கிடைக்கப்பெற்று, அன்பும் அறநெறியும் செழித்து, மனித நேயம் - சகோதர நல்லிணக்கம் நிலைத்து, வேளாண்மை செழிப்பும் தொழில் வளர்ச்சியும் கண்டு உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், பெண்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர், வணிகர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வாழ்வாங்கு வாழும் நிலை வேண்டி சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன்... பாடுபடுவேன்...
        
மண் செழிக்க, மக்கள் மேம்பட, மொழி காக்க, மருத்துவர் அய்யா அவர்களும், மருத்துவர் அன்புமணிஇராமதாஸ் M.P அவர்களும் நானும் (ஜி.கே.மணி) ஒட்டு மொத்த பா.ம.கவினரும் பாடுபடுவோம்....              
        
2022 ஜனவரித் திங்கள் முதல் இன்று நாள் முதல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆரோக்கியமும்  மகிழ்ச்சியும் மனநிறைவும் கண்டு, வளமும் நலமும் பெற்று பெரும்புகழுடன் நீடூழி வாழ இதயங்கனிந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages