அக்னிப்புரட்சி இன்றைய (21.12.2021) முக்கிய செய்திகள்.
* வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி மெஹுல் சோக்சி உள்ளிட்ட மோசடியாளர்களின் சொத்துக்களை விற்று, 13 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
லோக்சபாவில் (டிச.20) அன்று அவர் கூறியதாவது:
வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தவர்களிடமிருந்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்தியில் நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின், கடந்த ஏழு ஆண்டுகளில் 5.49 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையை, வங்கிகள்மீட்டுள்ளன. வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி போன்றோரின் சொத்துக்களை விற்று, 13 ஆயிரத்து 100 கோடி ரூபாயை வங்கிகள் மீட்டுள்ளன.
கடைசியாக கடந்த ஜூலை மாதம், மல்லையா உள்ளிட்டோருக்கு சொந்தமான சொத்துக்களை விற்று,792 கோடி ரூபாய் மீட்கப்பட்டது.மீட்கப்பட்ட பணம், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கே திரும்ப வழங்கப்பட்டது.கடன் வாங்கி மோசடி செய்தவர்கள் தப்ப முடியாது. அவர்களிடம்இருந்து பணத்தை மீட்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், வங்கிகள் இப்போது பாதுகாப்பாக உள்ளன.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* டாஸ்மாக் கடையில் மது வாங்கிய இல்லம் தேடி கல்வி குழு; நீக்கம் செய்து உத்தரவு.
திருச்சி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் 8 குழுக்கள் ஈடுபட்டு வந்த நிலையில், சர்மிளா சங்கர் தலைமையிலான குழு விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அந்த குழுவை நீக்கி திருச்சி முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை.
* மாநிலங்களவையில் நோட்டீஸ்:
தேர்தல் சட்ட திருத்த மசோதாவை மாநிலங்களவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
திமுக எம்.பி திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், சண்முகம் உள்ளிட்டோர் மாநிலங்களவையில் நோட்டீஸ்.
லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. தீபேந்திர சிங் ஹூடா ஒத்திவைப்பு நோட்டீஸ்.
* தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் - மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு பேச்சு.
குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாக குற்றச்சாட்டு.
* இந்தியாவில் 200 ஐ தொட்டது ஒமைக்ரான் பாதிப்பு.
இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 ஆக உயர்வு.
இந்தியாவில் 200 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் இதுவரை 77 பேர் குணமடைந்துள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை.
* உயிரை காப்பாற்றிய ஹெல்மெட்……
திருச்சி மாநகர ஆயுதபடை காவலர் பாசில்கான் நாய் குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளானார்.
ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பினார்; உடம்பிலும்,கை கால்களிலும் பலத்த காயங்கள்.
அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
* நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைப்பு.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு.
* பிரதமர் படத்தை நீக்க கோரிய நபருக்கு அபராதம்:
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை நீக்க கோரிய நபருக்கு ரூ 1 லட்சம் அபராதம் விதிப்பு - கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு.
இந்த வழக்கு பொதுநலன் கருதி அல்ல, புகழ் நலன் கருதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் தீவிரமான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இதுபோன்ற தேவையற்ற மனுக்களை ஊக்குவிக்க முடியாது - கேரள உயர் நீதிமன்றம்.
* ஓமிக்ரான் அதிவேகமாக பரவி வருவதால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்ய உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை.
உலக நாடுகளில் ஓமிக்ரான் அதிவேகமாக பரவி வருவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்யுமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
கொரோனாவின் உருமாறிய வைரஸான ஓமிக்ரான் டெல்டாவை விட பன்மடங்கு வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் நோயில் இருந்து மீண்டவர்களும் கூட ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை தள்ளி வைக்கலாம் அல்லது ரத்து செய்யலாம்; வாழ்க்கையை இழப்பதை விட, நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது சிறந்தது.
தற்போது கொண்டாடிவிட்டு பிறகு வருத்தப்படுவதை விட, தற்போது ஒத்தி வைத்து விட்டு பிறகு கொண்டாடலாம்- டெட்ராஸ் அதானம்.
* உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதியாக ரூ. 609 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கிராமம், ஊராட்சி, ஒன்றியம், மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான வளர்ச்சி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
* முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்.
50 ஆண்டுகளாக கலைஞரின் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.
அவருக்கும் கருணாநிதிக்கும் இடையேயான உறவு அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்துக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்தது.
கலைஞர் கருணாநிதியை பற்றி தலை முதல் கால் வரை தெரிந்து வைத்திருப்பவராக சண்முகநாதன் திகழ்ந்தார்.
* அருமை அண்ணன் சண்முகநாதன் மறைவுச் செய்தி எனக்கு தீராத மனத்துயரத்தை ஏற்படுத்திவிட்டது; அன்புள்ளம் கொண்ட சண்முகநாதனை இவ்வளவு சீக்கிரம் இழப்போம் என்று நான் நினைக்கவில்லை
கலைஞர் உதவியாளராக இருந்த கோ.சண்முகநாதன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் அஞ்சலி….. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
* கலைஞரை பிரிந்து சண்முகநாதனாலும் இருக்க முடியாது; அவரை பிரிந்து கலைஞராலும் இருக்க முடியாது. கலைஞர் மறைந்த பிறகும் கோபாலபுரம் வீட்டுக்கு வந்து எழுதுவது, அச்சிடுவது, திருத்தம் செய்வது என்று தொடர்ந்து பணியாற்றிவர் சண்முகநாதன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
* இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்.
ஓமிக்ரான் டெல்டா வகையை விட 3 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது - மத்திய சுகாதாரத்துறை.
திருமணம் , இறுதி சடங்குகளில் குறைந்த அளவிலான நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளை தீவிரமாக கண்காணியுங்கள்.
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment