அக்னிப்புரட்சி இன்றைய (22.12.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* மதுரையில் நள்ளிரவில் சுவர் இடிந்து விழுந்ததில் போலீஸ் பலியானார்.
இரவில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்ட போது, நெல்பேட்டை அருகே பழைய கட்டடத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.
இதில் சிக்கிய போலீஸ் ஒருவர் பலியானார்; மற்றொரு போலீஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
* சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்ததால் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக கல்லாறு- அடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு மலை ரெயில் பாதையில் விழுந்தன.
தண்டவாளங்கள் சேதமடைந்ததால், மலை ரெயில் சேவை கடந்த ஒரு மாதமாகவே நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது சீரமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவு பெற்று மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
* படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற 117 பேரின் ரிசல்ட் ரத்து:
சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 பேர் முறைகேடாக ஆன்லைன் முறையில் தேர்வெழுதி பட்டம் பெற முயன்றது கண்டுபிடிப்பு.
எந்த பட்டப்படிப்பிலும் சேராமலேயே ஆன்லைன் முறையில் தேர்வெழுதிய 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து - சென்னைப் பல்கலைக்கழகம்.
* மாஸ்டர் பட தயாரிப்பாளரும் நடிகர் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை.
செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனம் தொடர்பான வருமான வரி சோதனையில் பிரிட்டோவிற்கும் தொடர்பிருப்பதாக தகவல்.
* குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு-இரு அவை தலைவர்கள் அறிவிப்பு.
மக்களவையில் நடப்பு கூட்டத் தொடரில் ஒன்பது மசோதாக்கள் நிறைவேற்றம்.
நாளை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே இன்று நிறைவு.
* மதுரையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த காவலர் சரவணன் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
காயமடைந்த காவலர் கண்ணனுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - முதல்வர்.
* டெல்லி - புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை:
தலைநகர் டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை.
ஒமிக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக கொண்டாட்டங்களுக்கு டெல்லி அரசு கட்டுப்பாடு.
* கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான்:
கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு. மொத்த பாதிப்பு 24 ஆக உயர்வு.
* நாகப்பட்டினம் மாவட்டம் சன்னாசி பனங்குடி கிராமத்திலுள்ள தாளரணேசுவரர் கோவிலில் 1992-ஆம் ஆண்டு காணாமல் போன பஞ்சலோக "ஆடிப்புர அம்மன்" சிலை மற்றும் விநாயகர் சிலைகளை 29 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு திருச்சியில் பேட்டி.
* ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின், இராப்பத்து உற்சவத்தின் 9ம் திருநாளான இன்று (22.12.2021) ஸ்ரீ நம்பெருமாள் பனிக்குல்லாவில் ஒரு புஜகீர்த்தியுடன், மகர கர்ண பத்திரம், வைர அபயஹஸ்தம், பங்குனி உத்திர பதக்கம், பெரிய பிராட்டி பதக்கம், ரங்கூன் அட்டிகை, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, 8 வட முத்து சரம், அடுக்கு பதக்கங்கள், ஹஸ்தத்தில் சுட்டிப்பூ தொங்கல் உள்ளிட்ட திருவாபரணங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
* மதுரையில் கட்டடம் இடிந்து விழுந்து காவலர் உயிரிழந்தது தொடர்பாக கட்டடத்தின் உரிமையாளர் முகமது இத்ரீஸ், மேலாளர் அப்துல் ரசாக், நாக சங்கர், சுப்பிரமணி ஆகியோர் கைது.
No comments:
Post a Comment