அக்னிப்புரட்சி இன்றைய (26.12.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (26.12.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (26.12.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* ஆறாத வடு; அழியாத சுவடு- சுனாமி தாக்கி இன்றுடன் 17 ஆண்டுகள்.

தமிழகத்தில் 17வது சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலூர், நாகை கடற்கரைகளில் பொதுமக்கள் அஞ்சலி.

* சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழக அரசு சார்பில் சிலை அமைப்பு

* தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட மத்தியக்குழு இன்று சென்னை வருகை

இந்தியாவில் 10 மாநிலங்களில் மத்தியக்குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்

மருத்துவ நிபுணர்கள் வினிதா, புர்பாசா, சந்தோஷ் குமார், தினேஷ் பாபு ஆகியோர் இன்று இரவு சென்னை வருகை

* இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 422 ஆக அதிகரிப்பு

ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 130 பேர் குணமடைந்துள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை

* 17ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிப்பு

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள், மீனவர்கள் அஞ்சலி
சென்னை பட்டினப்பாக்கத்தில் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி

* இந்தியாவில் மேலும் 6,987 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த பாதிப்பு 3,47,79,815ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் 162 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 4,79,682 ஆக அதிகரிப்பு

* இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவின் 97வது பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

* கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு - மாநில அரசு

* கடலூர் : தென் ஆப்ரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

3 பேருக்கும் ஒமிக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு

செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

* பீகார் மாநிலம் முஸாபர்பூரில் நூடுல்ஸ் தயாரிப்பு ஆலையில் கொதிகலன் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி; காயம் அடைந்த மேலும் 6 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி.

* பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்:

பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் (73) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

* தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட்- முதல் நாள் முடிவில் இந்தியா 272/3.

கே.எல்.ராகுல் 122 ரன்களுடன் அவுட்ஆகாமல் விளையாடி வருகின்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages