அக்னிப்புரட்சி இன்றைய (27.12.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* மத்திய குழு தமிழகம் வருகை:
ஒமிக்ரான் பரவல் குறித்து ஆய்வு செய்ய மத்திய பன்னோக்கு மருத்துவ குழு சென்னை வருகை.
தமிழகத்தில் 3 நாட்கள் வரை ஆய்வு செய்து மத்திய அரசிடம் குழு அறிக்கை சமர்ப்பிக்கும்.
இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 578ஆக அதிகரிப்பு.
அதிகபட்சமாக டெல்லியில் 142 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி.
* ஓமிக்ரான் பரவல் எதிரொலியாக 5 மாநில தேர்தல் தள்ளி போகுமா ? - மத்திய சுகாதாரத்துறை செயலாளருடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை.
தேர்தல் அறிவிக்கப்பட வேண்டிய மாநிலங்களின் நிலைமை குறித்து தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
உத்தரப் பிரதேசம் , மணிப்பூர், உத்தராகண்ட், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவிக்கும் முடிவில் தேர்தல் ஆணையம் உள்ளது.
நாட்டில் ஓமிக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரக்கூடிய சூழலில் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியுமா எனவும் கேள்வி எழுந்துள்ளது.
* திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் உள்ள கிராமத்தெரு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்து.
4 மாடி கட்டடத்தில் நேற்றிரவு விரிசல் ஏற்பட்ட நிலையில், இன்று காலை விரிசல் அதிகமாகி இடிந்து விழுந்துள்ளது.
* 2ம் தேதி வரை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்.
* தமிழகத்தில் ஒமிக்ரான் பாதித்த 34 பேரில் இதுவரை 18 பேர் குணமடைந்துள்ளனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழகத்தில் 97 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறிகள்: மரபணு பகுப்பாய்வு முடிவுகள் வருவதில் தாமதம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
* ஜன.1 முதல் முன் பதிவு செய்யலாம்:
கொரோனா தடுப்பூசிக்கான கோவின் ( COWIN ) செயலியில், 15 – 18 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஜன .1 முதல் முன் பதிவு செய்யலாம்.
ஆதார் அட்டை இல்லாதவர்கள் 10 ஆம் வகுப்பு அடையாள அட்டையை காட்டி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் - மத்திய அரசு.
* ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஒரு மாத பரோலில் விடுவிப்பு.
வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார் நளினி.
* பூஸ்டர் டோஸ் செலுத்தும் போது ஏற்கனவே செலுத்திய தடுப்பூசியை மட்டுமே செலுத்த வேண்டும்-மத்திய அரசு அறிவுறுத்தல்.
பூஸ்டர் டோஸ் செலுத்தும் போது ஏற்கனவே செலுத்திய தடுப்பூசியை மட்டுமே செலுத்த வேண்டும் என 2 டோஸ் செலுத்தியவர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஒருவர் 2 தவணை கோவாக்சின் செலுத்தி இருந்தால் அதனையே பூஸ்டராக செலுத்த வேண்டும் என கூறியுள்ளது.
ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது.
* கேரளாவில் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் - மாநில அரசு
ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு கேரள அரசு நடவடிக்கை
* கர்நாடகாவில் நாளை முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் - கர்நாடக அரசு.
* இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து.
No comments:
Post a Comment