அக்னிப்புரட்சி இன்றைய (29.12.2021) முக்கிய செய்திகள்.
* அந்தமான் நிகோபார்; போர்ட் பிளேர் பகுதியில் இருந்து 165 கி.மீ தொலைவில் மிதமான நிலநடுக்கம்-ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* தமிழ்நாடு அரசின் "நீட் தேர்வு விலக்கு மசோதா" ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் மாளிகை பதில்.
பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்தபோது நீட் விலக்கு மசோதா அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கத்து.
* 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி இல்லை:
தமிழ்நாட்டில் நகைக் கடன் பெற்றவர்களில் 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடையாது என அறிவிப்பு.
கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேர் தள்ளுபடி பெற தகுதி அற்றவர்கள்- கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவிப்பு.
கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.
* தமிழகத்துக்கு நீட்டில் இருந்து விலக்கு கேட்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.க்கள் இன்று சந்திப்பு.
திமுக எம்.பி டி.ஆர் பாலு தலைமையில் தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேசுகின்றனர்.
திமுக, அதிமுக, இடதுசாரி, விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் அமித்ஷாவை சந்திக்கின்றனர்.
* ஓமிக்ரான் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை:
உலகம் முழுவதும் ஓமிக்ரான் பரவல் அபாயக்கட்டத்தை எட்டியுள்ளது.
டெல்டா வைரசை விட ஒமிக்ரான் பரவல் விகிதம் பல்வேறு நாடுகளில் அதிகரிப்பு - உலக சுகாதார அமைப்பு
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஓமிக்ரான் பரவல் தீவிரம்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 3,05,796 பேர் கொரோனாவால் பாதிப்பு.
பிரிட்டனில் ஒரே நாளில் 1,29,471 பேருக்கு கொரோனா தொற்று பரவியது.
பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் புதிய உச்சம் 1,79,807 பேர் பாதிப்பு.
* இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781ஆக அதிகரிப்பு.
நேற்று 653 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 781 ஆக அதிகரிப்பு.
டெல்லி - 238, மகாராஷ்டிரா - 167, குஜராத் - 73, கேரளா - 65, தெலங்கானா - 62, ராஜஸ்தான் - 46, கர்நாடகா - 34, தமிழ்நாடு - 34 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு.
அரியானா - 12, மேற்கு வங்கம் - 11, மத்திய பிரதேசம் - 9, ஒடிசா - 8, ஆந்திரா - 6, உத்தரகாண்ட் - 4, சண்டிகர் - 3, காஷ்மீர் - 3, உத்தரபிரதேசம் - 2 பேருக்கு ஒமிக்ரான்.
கோவா, இமாச்சல பிரதேசம், லடாக், மணிப்பூரில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு.
* புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு.
அவசர வழக்காக பிற்பகல் விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல்.
ஒமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை.
* டிசம்பர் 31ம் தேதி அன்று இரவு தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை - டி.ஜி.பி.
அனைவரும் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.
டிசம்பர் 31 அன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது; மீறினால் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
புத்தாண்டு அன்று அவசர உதவி தேவைப்பட்டால் 100, 112 எண்களை தொடர்பு கொள்ளுமாறும், KAVALAN - SOS செயலியை பயன்படுத்தமாறும் தமிழக டி.ஜி.பி. வலியுறுத்தல்
* NEET விலக்கு கோரும் தமிழ்நாடு அரசின் சட்ட முன்வரைவு ஆளுநரின் பரிசீலனையில் (consideration) உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக ஆளுநர் மாளிகை பதில்
* நகைக் கடன் தள்ளுபடி சலுகை பெற நிபந்தனைகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு
ஆதார் எண் வழங்காதவர்கள், 2021 கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் தள்ளுபடி பெற்ற உழவர்கள் & அவர்தம் குடும்பத்தினர், 40 கிராமுக்கு மேல் நகைக்கடன் பெற்றோர் உள்ளிட்டோர் தள்ளுபடி சலுகை பெற முடியாது என அரசு அறிவிப்பு
* பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைத்தது ஜார்க்கண்ட் அரசு.
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டும் பெட்ரோல் விலை ரூ.25 குறைப்பு.
* பெண் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் கடலூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள் கடலூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
நேற்று வேலூர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் 2.45 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று அவரது கடலூர் வீட்டில் சோதனை.
* புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்.
புதுச்சேரியில் 31 ம் தேதி இரவு 10 மணி முதல் 1 மணி வரை மதுபான கடைகளை மூடப்பட வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்.
* புத்தாண்டு நள்ளிரவில் மது விற்பனைக்கும், பார்களுக்கும் தடை.
பொதுஇடங்களுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் - புதுச்சேரி அரசுக்கு அறிவுறுத்தல்.
* தமிழகத்தில் இன்று 739 பேருக்கு கொரோனா.
சென்னையில் நேற்று ஒருநாள் பாதிப்பு 194 ஆக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 294 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.
* செஞ்சூரியன் டெஸ்ட் : 4ஆம் நாளில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் சேர்ப்பு.
தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 211 ரன்கள் தேவை; 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு.
No comments:
Post a Comment