அக்னிப்புரட்சி இன்றைய (31.12.2021) முக்கிய செய்திகள்.
* மழை பாதிப்பு - முதல்வர் ஆய்வு
தஞ்சை, திருச்சி பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் முக.ஸ்டாலின் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஆய்வு
* 4 மாவட்டங்களில் இன்று விடுமுறை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 4 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிப்பு - சென்னை போக்குவரத்து காவல் துறை.
துரைசாமி சுரங்கப்பாதை, ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதைகள் மூடல்.
தென் ஆப்பிரி்க்க விக்கெட் கீப்பர் குயின்டன் டீ காக் இளம்வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு.
இந்திய அணிக்கு எதிராக அடுத்து நடக்கும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் டீ காக் விளையாடமாட்டார்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என டீகாக் தெரிவித்துள்ளார்.
* 1000 த்தை கடந்த ஒமிக்ரான் பாதிப்பு:
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிப்பு.
நேற்று 961 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 1,270 ஆக அதிகரிப்பு.
வேகம் எடுக்கும் கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,764 புதிய கொரோனா பாதிப்பு.
7,585 பேர் குணமடைந்த நிலையில் 220 பேர் உயிரிழந்தனர்- மத்திய சுகாதாரத்துறை.
தற்போது 91,361 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடையும் விகிதம் தற்போது 98.36% ஆக உள்ளது.
* மழை நீரை அகற்றும் பணியை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனியில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத நீரிறைக்கும் இயந்திரங்கள் மூலம் வெளியேற்றும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
10 வருசமா குட்டிச்சுவர் ஆக்கி வைத்திருக்கிறார்கள். விமர்சனம் செய்வதற்கு தயாராக இல்லை.
இதை சரிசெய்யணும்; அடுத்த மழை சீசன் வருவதற்குள் இவைகளை சரிசெய்வோம் என்ற நம்பிக்கை இருக்கு. நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* நாகை மாவட்டத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய அதி கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து:
கொரோனாவை தொடர்ந்து ஒமிக்ரான் வேகமாக பரவி வருவதால் புத்தாண்டு நாளான ஜனவரி -1 அன்று என்னைச் சந்திப்பதற்காக நேரில் வருவதைக் கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* பொங்கல் விழாவில் பிரதமர் மோடி:
மதுரையில் 12-ம் தேதி நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
‘மோடி பொங்கல்' என்னும் நிகழ்ச்சியில் 10,008 பேர் பொங்கல் வைத்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்.
* நாகை மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் அதி கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்.
* புதுச்சேரியில் இரவுநேர ஊரடங்கு:
புதுச்சேரியில் ஒமைக்ரான் பரவல் காரணமாக வைகுண்ட ஏகாதசி திருநாள் தவிர்த்து ஜனவரி 31 வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
* ஊரடங்கு கட்டுப்பாடுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
ஊரடங்கு தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுபாடுகள், தளர்வுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
சுழற்சி முறை மற்றும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவது குறித்தும் ஆலோசனை.
தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
* மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பதா? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
தமிழக மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளித்தது மனிதாபிமானம் இல்லாத செயல்.
மீனவர்களை தனிமைப்படுத்தி அதன்பின்னர் கொரோனா பரிசோதனை செய்திருக்கலாம்.
கைது செய்யும் மீனவர்களை கண்ணியம், மனிதாபிமானத்துடன் நடத்துவதை இலங்கை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
பொங்கலுக்கு பின் தமிழக மீனவர்களை மத்திய அரசு அழைத்து வரும் என நீதிமன்றம் நம்புகிறது - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
* 68 மீனவர்களும் அவர்களது குடும்பத்துடன் தொலைப்பேசியில் பேச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு,
* சென்னையில் நேற்று பெய்த மழைக்கு மேக வெடிப்பு காரணமல்ல - புவியரசன்.
மேலடுக்குச் சுழற்சி நிலப்பகுதிக்கு நகர்ந்ததே அதிக கனமழைக்குக் காரணம்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று வேகமாக நகர்ந்ததால் சென்னையில் கனமழை பெய்தது.
அதிகனமழைக்கான காரணம் பற்றி வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் விளக்கம்.
காற்றின் வேகம் மற்றும் சுழற்சியை சில நேரங்களில் துல்லியமாக கணிக்க இயலாது.
* ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை 5% முதல்12% ஆக உயர்த்தும் முடிவு தற்காலிகமாக நிறுத்திவைப்பு.
வரி உயர்வு தொடர்பாக பிப்ரவரி மாதம் நடைபெறும் கூட்டத்தில் மதிப்பாய்வு செய்ய உள்ளதாக தகவல்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு.
ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரி நாளை முதல் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நிறுத்திவைப்பு.
எம்.இ. கலந்தாய்வு கட்டணத்திற்கு 18 % ஜிஎஸ்டி:
முதுகலை பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாவு கட்டணத்திற்கு 18 % ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
ஜன.,3 ம் தேதியில் இருந்து கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில் அண்ணா பல்கலை., அறிவிப்பு.
* டெல்டா கொரோனாவுக்கு மாற்றாக தற்போது ஒமிக்ரான் பரவத் தொடங்கியுள்ளது- மத்திய அரசு.
டெல்டா கொரோனாவுக்கு மாற்றாக தற்போது ஒமிக்ரான் பரவத் தொடங்கியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
* குடும்ப வன்முறை வழக்கில் பிடிவாரண்டை செயல்படுத்தாத இரு பெண் காவல் ஆய்வாளர்களின் ஊதியத்தை திரும்ப வசூலிக்க வேண்டும்.
சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
பெண் காவல் ஆய்வாளர்கள் தனலட்சுமி, செல்வி ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் காவல் ஆணையருக்கு உத்தரவு.
கடந்தாண்டு குடும்ப வன்முறை வழக்கில் சபீதா, ஸ்ரீநாத் ஆகியோருக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
* நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு 2022:
உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் 2022ஆம் ஆண்டு பிறந்தது.
நியூசிலாந்து மக்கள் கண்கவர் வாண வேடிக்கைகள் உடன் புத்தாண்டு கொண்டாட்டம்.
* ஒருநாள் மழைக்கு மிதக்கும் சென்னை; 8 மாதங்களாக என்ன சாதித்தது அரசு?; மழைநீரால் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி,
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவி விலகச்சொன்னவர், அமைச்சர் செந்தில் பாலாஜியை ராஜினாமா செய்ய சொல்வாரா? - எடப்பாடி பழனிசாமி.
* ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்.
டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இலங்கையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
* ஆஸ்திரேலியாவில் பிறந்தது 2022; வானவேடிக்கைகளுடன் சிட்னியில் உற்சாகமாக கொண்டாடிய மக்கள்!
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம்.
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் சற்று காலதாமதம் ஆவதால் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க வலியுறுத்தல்.
தனியார் மருத்துவமனைகளிலும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்க அரசுகளுக்கு வலியுறுத்தல்.
* விழுப்புரம் அருகே திருமணம் செய்த காதல் ஜோடி நேற்று பாதுகாப்பு கேட்டு எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்த நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பின்பு அப்பெண் பெற்றோர் உடன் சென்றுவிட்டார்.
விரக்தியில் திருமணம் செய்த வெற்றிவேல் (20) என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.
* தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் 50% பார்வையாளர்கள் உடன் செயல்பட அனுமதி
அழகு நிலையங்கள், சலூன்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி
அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு - தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிப்பு.
ஜன.10ம் தேதி வரை 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த தடை
உணவகம், விடுதிகளில் வாடிக்கையாளர்கள் 50 சதவீதம் மட்டுமே அனுமதி.
திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்வுகள் 100 பேருக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 பேருக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
ஜிம்கள், யோகா பயிற்சி நிலையங்கள் 50% நபர்களுடன் செயல்பட அனுமதி
மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகளுக்கு அனுமதி -தமிழ்நாடு அரசு
9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும் - தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் 50% பார்வையாளர்கள் உடன் செயல்பட அனுமதி
அழகு நிலையங்கள், சலூன்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி
அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு - தமிழ்நாடு அரசு
* இந்திய கடலோர காவல்படையின் 24வது இயக்குநர் ஜெனரலாக வி.எஸ்.பதானியா பொறுப்பேற்றார்
* தமிழகத்தில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் இன்று மட்டும் 1,155 பேருக்கு கொரோனா பாதிப்பு.
சென்னையில் மேலும் 586 பேருக்கு கொரோனா தொற்று.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 603 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் 7,470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் - சுகாதாரத்துறை.
கொரோனா காரணமாக இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
* தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 120 ஆக உயர்வு - 66 பேர் குணமடைந்தனர்.
No comments:
Post a Comment