வரம் கொடுத்தவர் தலை மேல் கை வைப்பதா? வன்னியர்களை ஏளனம் பேசுவதா? - Agnipuratchi

வரம் கொடுத்தவர் தலை மேல் கை வைப்பதா? வன்னியர்களை ஏளனம் பேசுவதா?

Share This

வரம் கொடுத்தவர் தலை மேல்
கை  வைப்பதா? வன்னியர்களை ஏளனம் பேசுவதா?

நாள் /15/12/2021/புதன்கிழமை

இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிருபரின் கேள்விக்கு பதிலளிக்கையில்

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி
மாறுவது அவர்கள் வாடிக்கை என்று நகைப்புக்குரிய வகையில் பேசி இருக்கிறார்  அவர்களுக்கு

           "ஓர் தெளிவுரை"

பாட்டாளி மக்கள் கட்சி என்பது 1989இல் துவங்கப்பட்டு அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து தேர்தல் களம் கண்டு6.7 சதவீத வாக்குகளைப் பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றது

இந்த 6.7 சதவீத வாக்கு என்பது மற்ற சிறிய கட்சிகள் போல் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதியிலும்  2000./3000.  /5000 ./என்று வாங்கப்பட்ட வாக்குகள் அல்ல தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள 80 தொகுதிகள் வரை வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வகையில் வாங்கப்பட்ட வாக்குகளாகும்

அதன்பிறகு  1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து களம் கண்டு

ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையை அடுத்து மிகப்பெரிய அனுதாப அலை வீசிய போதும் ஒரு சட்டமன்ற உறுப்பினரை பெற்றெடுத்தது டன் தனது வாக்கு வங்கியை இழக்காமல் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கட்சிதான் பாட்டாளி மக்கள் கட்சி
அதன்பிறகு 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தனித்துக் களம் கண்டு 4 சட்டமன்ற உறுப்பினர்களை வென்று எடுத்ததோடு மட்டுமல்லாமல்

25 சட்டமன்ற தொகுதிக்கு மேல் இரண்டாம் இடத்தை பெற்று அதிமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளிய கட்சிதான் பாட்டாளி மக்கள் கட்சி

அதோடு மட்டுமல்லாமல் அதிமுக காங்கிரஸ் கூட்டணியின் அதிமுக வேட்பாளராக எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆகிய தங்களை

அத்தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்
ஐ .கணேசன் அவர்கள் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் தங்களை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியது தங்களுக்கு நினைவிருக்கலாம் எனக் கருதுகிறேன்

அந்தத் தேர்தலில் உங்களுடைய அதிமுக
கட்சி படுதோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் பல இடங்களில் தனது ஜாமின் தொகையையும் இழந்தீர்கள் என்பதையும் தாங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் என கருதுகிறேன்

அந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 4 சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றது

உங்களுடைய அதிமுக கட்சி இரண்டு சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்றது பிறகு ஆலங்குடி தொகுதியில் சுயேட்சையாக வெற்றி பெற்ற வெங்கடாஜலம் உங்கள் கட்சியில் சேர்ந்து கொண்ட வகையில் மூன்று உறுப்பினர் ஆக உயர்ந்தது

இந்தநிலையில் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்
தனித்து களம் கண்ட பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்ற இடங்களின் அளவில்கூட அதிமுக வெற்றி பெறவில்லை என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள் என கருதுகிறேன்

தொடர் தோல்வியை சந்தித்து வந்த அதிமுக தலைமை எப்படியாவது வாக்கு வங்கியோடு வலம் வருகின்ற பாட்டாளி மக்கள் கட்சியை தங்கள் கூட்டணிக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று அம்மையார் அவர்கள்

வாழப்பாடியார் அவர்கள் மூலமாக தூதனுப்பி அதன் மூலம் சாதுரியமாக கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார் என்பதே வரலாறு

அதனை அடுத்து  1998ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி .மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் .பாரதிய ஜனதா கட்சி. வாழப்பாடியார் கட்சி. சுப்பிரமணி சாமி அவர்களின் ஜனதா கட்சி. ஆகியவை கூட்டணியாக தேர்தலை எதிர் கொண்டு வெற்றி கண்டன

அந்தத் தேர்தலில்  பாட்டாளி மக்கள் கட்சி 80 சதவீத வெற்றியும் அதிமுக 70 சதவிகித வெற்றியும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 60 சதவீத வெற்றியும் பாரதிய ஜனதா கட்சி 60 சதவீத வெற்றியும் பெற்றிருந்தனர் என்பதை கருத்தில் கொள்ளுங்கள் எடப்பாடியார் அவர்களே

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் மக்கள்தான் ஓட்டளிக்க வேண்டும் நாங்கள் என்ன செய்வது என்று தானே சொல்ல வருகிறீர்கள்  1998 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் உங்களோடு கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி 80 சதவீத வெற்றி பெறுகிறது ஆனால் நீங்கள் 70 சதவிகிதம் வெற்றி பெற்றீர்கள்இதிலிருந்து மக்கள் யாரை நிராகரிக்கிறார்கள் என்பது  உங்களுக்கு புரியவில்லையா

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிராகரித்தது   உங்கள் தலைமையிலான அண்ணா திமுகவை என்பதுதான் நிதர்சனமான உண்மை

உங்களோடு கூட்டணி வைத்த காரணத்தினால் தான் பாமக தோல்வியுற்றது என்பதே உண்மை நிலை

ஒருவேளை பாட்டாளி மக்கள் கட்சி இந்த தேர்தலில் தனித்து களம் கண்டிருந்தால்ப15 தொகுதி வரை  வெற்றி பெற்று இருப்பார்கள் 40 தொகுதி வரை உங்கள் அதிமுகவை மூன்றாம் இடத்திற்கு  தள்ளி இருப்பார்கள் அதோடு மட்டுமல்லாமல் உங்கள் தலைமையிலான அதிமுக வை முடிவுக்கு கொண்டு வந்திருப்பார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்து பேசுங்கள்

அதற்கு தெளிவான ஒரு விளக்கத்தை தருகிறேன் தற்போது நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் வட மாவட்டங்களில் ஏழு மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றது
அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி பலமாக வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை

அந்தத் தேர்தலில் 100 சதவீத வேட்பாளர்களை களத்தில் நிறுத்திய உங்களுடைய வெற்றி நிலை என்ன

40 சதவீத வேட்பாளர்களை நிறுத்திய பாட்டாளி மக்கள் கட்சி வென்ற அளவிற்கு கூட உங்களால் வெல்ல முடியவில்லை என்பதே உண்மை நிலை

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்தாத இடங்களில்தான்  அதன் முன்னணித் தலைவர்களை சாதுர்யமாக வளைத்து அதன் வாக்குகளை வாங்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக உங்கள் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது என்பது தாங்கள் அறியாததா

மேலும் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சியும் மருத்துவர் அய்யா அவர்களும்   அதிமுகவிற்கு ஆதரவு அளிக்காமல் போயிருந்தால் 2019 ஆண்டு  நாடாளுமன்ற தேர்தலோடு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் படுதோல்வி அடைவதோடு மட்டுமல்லாமல் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அதிமுக என்ற ஒரு கட்சி சிதிலமடைந்து இருக்கும் என்பதை மறந்து பேச வேண்டாம்

கடந்த தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கி விட்டோம் என்ற போர்வையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு நியாயமாக கொடுக்கவேண்டிய 40 தொகுதிகளை கொடுக்காமல் 23 தொகுதிகளை ஒதுக்கி அதற்கு இட ஒதுக்கீட்டை காரணம் காட்டினீர்கள்

இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி வன்னியர்களின் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்து 30 சட்டமன்ற தொகுதிக்கு மேல் வடமாவட்டங்களில் வெற்றி பெற்றுவிட்டு
வன்னியர்களின் வாக்குகளை முழுமையாக பெற்று தங்களுடைய வாக்கு சதவீதத்தை உயர்த்திக் கொண்டுவிட்டு

பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்குகள் விழாத வண்ணம் நீங்கள் ஒரு பகுதியிலும் ஓபிஎஸ் ஒரு பகுதியிலும் இட ஒதுக்கீடு குறித்து   தெளிவான விளக்கத்தை தெரிவிக்காத காரணத்தினால்

பிற சமூக வாக்குகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு விழாத வண்ணம் பார்த்துக் கொண்டீர்கள்  அந்த வகையில் இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஏமாந்து விட்டனர் என எதிர்க்கட்சியினர் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டனர் அந்தவகையில் பாமக பலமாக பாதிக்கப்பட்டது உண்மை

அதைதான் மருத்துவர் ஐயா அவர்கள்

கடந்த தேர்தலில் அதிமுக வினர் எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்கள் என்று கூறுகிறார் இதைவிட உங்களுக்கு ஒரு விளக்கம் தேவையா

அதேபோன்று தேர்தல் கூட்டணியில் மாறி மாறி கூட்டணி வைப்பது மாநில கட்சிகள் மட்டுமல்ல தேசிய கட்சிகளும் கூட தான் ஏதோ பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தேர்தலுக்குத் தேர்தல் மாறி மாறி கூட்டணி வைத்து ஆதாயம் அடைவது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டாம்

உங்களோடு பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியில் தொடர்ந்து நீடித்தால் என்ன நடந்திருக்கும் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் வட மாவட்டங்களில் நடைபெற்ற 7ம் பாமகவின் ஆதரவினால் நீங்கள் ராஜபோக வெற்றி பெற்று இருப்பீர்கள் வெற்றி பெற்று முடிந்தவுடன்

இந்த வெற்றி அம்மாவின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி என்று நாக்கூசாமல் பேசிவிட்டு ஒரு சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக  தோல்வி அடைந்து இருந்தால் அதற்கு ஜாதி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி தான் காரணம் என்று நாக்கூசாமல் கூறிவிட்டு சென்றிருப்பீர்கள்

உங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி தனியாக இருந்த காரணத்தினால் தான் அந்த ஏழு மாவட்டங்களிலும்  கணிசமான இடங்களில்  பாமக வெற்றி பெற முடிந்தது உங்களோடு இருந்தால் அதுவும் கிடைத்திருக்காது மேலும்

தூங்குபவர்களை எழுப்ப முடியும் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது

எனவே வரம் கொடுத்தவர்கள் தலையில் கை வைக்கும் வேலையை தொடர்கதையாக்க வேண்டாம்?

அன்புடன்
மணலூர் க.சுந்தர்ராஜன்
நிர்வாகத் தலைமை இயக்குனர்
No1 சர்வே குழு

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages