அக்னிப்புரட்சி இன்றைய (01.01.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* காஷ்மீர் வைஷ்ணவ் தேவி கோயிலில் நெரிசல்; 12 பேர் பலி.
ஜம்மு காஷ்மீரில் மாதா வைஷ்ணோ தேவி பவன் கோவிலில் கூட்ட நெரிசலால் 12 பேர் பலி.
கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம் அடைந்ததால் பரபரப்பு.
* சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி - முன்பதிவு தொடங்கியது.
இந்தியாவில் 15-18 வயது சிறார்களுக்கான வேக்சின் முன்பதிவு இன்று தொடக்கம்.
ஜனவரி 3ல் இருந்து 15-18 வயது கொண்டவர்களுக்கு கொரோனா வேக்சின் வழங்கப்படும்.
Cowin தளத்தில் முன் பதிவு செய்யலாம் என்று அதன் தலைவர் டாக்டர் ஆர்எஸ் சர்மா தகவல்.
சிறார்கள் வேக்சின் முன் பதிவை செய்ய பின்வரும் படிகளை பின்பற்ற வேண்டும்.
https://www.cowin.gov.in/ தளத்தில் இதற்காக புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் சிறார்கள் தங்கள் ஆதார் உள்ளிட்ட 9 ஐடி கார்டுகளில் ஒன்றை கொடுத்து ரிஜிஸ்டர் செய்ய முடியும்.
வயதானவர்கால் எப்படி ரிஜிஸ்டர் செய்தனரோ அதேபோல் செய்தால் போதும்.
அப்பா, அம்மாவின் போன் எண் கொடுத்து ஓடிபி மூலம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.
ஆனால் அதே சமயம் பலரிடம் ஆதார் இருக்காது. 18 வயது குறைவானவர்கள் என்பதால் வேறு அடையாள அட்டை இருக்காது.
எனவே இவர்கள் பள்ளி ஐடி கார்டை பதிவேற்றினால் போதும்.
இதில் அவர்களின் பெயர்கள் மற்றும் 15-18 வயது கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் விவரம் இருக்க வேண்டும்.
அதே சமயம் சிறார்களுக்கு என்ன வேக்சின் போடலாம் என்பதை பெற்றோரே தேர்வு செய்ய முடியும்.
15-18 வயது கொண்டவர்களுக்கு இந்தியாவில் கோவாக்சின், சைட்ஸ் கேடில்ல்லா நீடில் இல்லாத வேக்சின் இரண்டும் வழங்கப்படுகிறது.
* ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வு இன்று முதல் அமல்.
அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் ஏடிஎம்களில் பணமெடுப்பதற்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரவிருக்கிறது.
ஒவ்வொரு மாதமும், மாநகராட்சிப் பகுதியில் வேறு வங்கியின் ஏடிஎம்களில் 3 முறையும், மாநகராட்சி அல்லாத பகுதிகள் என்றால் 5 முறையும் இலவசமாக பணமெடுக்கலாம்.
இதற்கு மேல் பணமெடுத்தால் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்தக் கட்டணங்கள் இன்று முதல் உயர்த்த வங்கிகள் முடிவு செய்துள்ளன.
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட ஏடிஎம் இலவச சேவைக்கு அதிகமாக பணமெடுக்கும் போது வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம் 21 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* இந்தியாவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,775 புதிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ள நிலையில் 8,949 பேர் குணமடைந்தனர்; 406 உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,431 ஆக அதிகரிப்பு.
நேற்று 1,270 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 1,431 ஆக அதிகரிப்பு.
* 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பொது சுகாதாரத் துறை.
2007 ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் தடுப்பூசி போட தகுதியானவர்கள்.
அவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும்.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தகுதியான மாணவர்களை கணக்கெடுக்க வேண்டும்.
* தாம்பரம் காவல் ஆணையராக எம்.ரவி நியமனம்.
ஆவடி காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.
இருவரும் சிறப்பு அதிகாரிகளாக இருந்த நிலையில் காவல் ஆணையர்களாக நியமித்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு.
* சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து 4 பேர் உயிரிழப்பு.
புதுப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 2 அறைகள் தரைமட்டமானது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
* சென்னை வானிலை ஆய்வு மைய செயல்பாட்டை மேம்படுத்திட வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
உரிய நேரத்தில் வேகமாக கணிப்புகளை வெளியிட முடியாத நிலை உள்ளது - முதல்வர் மு.க. ஸ்டாலின்
* தமிழ்நாடு காவல்துறையில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று முதல் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அமலுக்கு வந்தது.
* 50% இருக்கை கட்டுப்பாடு காரணமாக 5 ம் தேதி சட்டசபை கூட்டத்தை கலைவாணர் அரங்கில் நடத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாவதாக தகவல்
* கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
அனைத்து மாநிலங்களும் தேவையான அளவு தனிமைப்படுத்தல் மையங்களை ஏற்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
* ஜன.5ஆம் தேதி ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது.
புனித ஜார்ஜ் கோட்டை சட்டப்பேரவை அரங்கில் கூட்டத்தொடர் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக கலைவாணர் அரங்கிலேயே கூட்டத்தொடர் நடைபெறுவதாக அறிவிப்பு.
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
611 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழப்பு.
* கொரோனா மற்றும் இன்ப்ளூவென்சா இணைந்து ஏற்படுத்தும் இரட்டைத்தொற்று நோய் இஸ்ரேலில் முதன்முறையாக ஒரு நபருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
'ப்ளோரனா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த இரட்டைத்தொற்று பரவினால் கூடுதல் பாதிப்பு மற்றும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவியலாளர்கள் அச்சம்.
* தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 121 ஆக உயர்வு
ஒமிக்ரானில் இருந்து 97 பேர் குணமடைந்துள்ள நிலையில் 27 பேருக்கு சிகிச்சை
* சென்னை, கடற்கரையில் நாளை முதல் பொதுமக்களுக்கு தடை - மாநகராட்சி நிர்வாகம்
பிரத்யேக நடைபாதையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி - சென்னை மாநகராட்சி
நடைபயிற்சி செல்வோருக்கு மட்டும் அனுமதி - சென்னை மாநகராட்சி
ஒமிக்ரான் பரவல் காரணமாக மறு உத்தரவு வரும்வரை பொதுமக்களுக்கு மணல்பரப்பில் அனுமதியில்லை - சென்னை மாநகராட்சி
* டெல்லியில் மேலும் 2,716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 6,360 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
* ஆப்கானிஸ்தானில் உள்ள ஃபைசாபாத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
* மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 9,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
* மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் 4,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
No comments:
Post a Comment