அக்னிப்புரட்சி இன்றைய (08.01.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (08.01.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (08.01.2022) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* தமிழகம் முழுவதும் இன்று 18வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

முகாமில் 15 - 18 வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

ஞாயிற்றுக் கிழமைகளில் முகாம் நடைபெற்று வந்த நிலையில் நாளை முழு ஊரடங்கால் இன்று நடைபெறுகிறது.

* உலகில் ஒரே நாளில் கொரோனாவால் 2,605,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் ஒரே நாளில் 6,122 பேர் மரணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,784 பேர் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துள்ளது.

அங்கு ஒரே நாளில் 766,184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

* 1.41 லட்சமாக அதிகரித்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு.

இந்தியாவில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு ஒன்றரை லட்சத்தை நெருங்குகிறது தினசரி கொரோனா பாதிப்பு.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.41 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி.

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 3,071 ஆக அதிகரிப்பு.

* நீட் விலக்கு: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதம்.

அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, பாஜக, மதிமுக உள்ளிட்ட 13 கட்சிகள் பங்கேற்பு.

திமுக சார்பில் துரைமுருகன், அதிமுக சார்பில் சி.விஜயபாஸ்கர், காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, விசிக சார்பில் சிந்தனைச் செல்வன் ஆகியோர் பங்கேற்பு.

பாஜக சார்பில் வானதி சீனிவாசன், பாமக சார்பில் ஜி.கே.மணி, மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார் ஆகியோர் பங்கேற்பு.

* அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி வெளிநடப்பு

நீட் விவகாரம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து பாஜக வெளிநடப்பு:

ஆளும் கட்சியான திமுக கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போதே நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அப்போதே எங்கள் கருத்துகளை முழுமையாக பேச முடியாததால் வெளிநடப்பு செய்தோம்- வானதி சீனிவாசன்.

நீட் தேர்வால் இடஒதுக்கீட்டை விட அதிகமாக இடங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெற்றுள்ளனர்.

ஆரம்ப கட்டத்தில் நீட் தேர்வினால் சில பிரச்னைகள் இருந்ததை மறுக்கவில்லை.

மாணவர்கள் கஷ்டப்படுவதாக அவர்கள் மீது பழி சுமத்தப்படுகிறது- வானதி சீனிவாசன்.

* நீட் தேர்வு விவகராத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும்.

நீட் தேர்வு ரத்து நிலைபாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

நீட் விலக்கு பெறும் வரை மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும்.

மாணவர்கள் தவறான எண்ணங்களுக்கு செல்வதை தவிர்க்க உளவியல் பயிற்சிகள் அளிக்க வேண்டும் - சி.விஜயபாஸ்கர்.

* நீட் தேர்வு; சட்டசபையின் முடிவை ஆளுநர் மதிக்க வேண்டும்- முதல்வர் ஸ்டாலின் உரை

சட்டசபையின் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதே மக்களாட்சியின் தத்துவம்.

நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைத்துக் கட்சி கூட்டத்தின் இலக்காகும்- முதல்வர்

* மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிமுகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - ஓபிஎஸ், ஈபிஎஸ்.

அதிமுகவின் வலியுறுத்தலால் கிடைத்த வெற்றியை திமுக, தன் வெற்றியாக பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்தானது.

மத்திய அரசு வேலை வாய்ப்பு-கல்வியில் 50% ஒதுக்கீடு நிறைவேற்றம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய அதிமுக குரல் கொடுக்கும் - ஓபிஎஸ், ஈபிஎஸ்.

* அந்தமானில் நிலநடுக்கம்:
இன்று காலை 11.12 மணி அளவில் அந்தமான் தீவு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தகவல். ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.

* மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவடைந்தது.

அனைத்துக்கட்சி கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி:

நீட் விலக்கு தொடர்பாக சட்ட வல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகு மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும்.

மாநில அரசு நிதியில் இருந்து நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது.

நீட் தேர்வு 12 ஆண்டு பள்ளிக் கல்வியை அர்த்தமற்றதாக்குகிறது.

நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும்.

* ஆதி திராவிட நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் / காப்பாளர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு இன்றும், வரும் 10, 11 & 12 தேதிகளிலும் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைப்பு.

* நாளை முழு ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - டாஸ்மாக் நிர்வாகம்

ஒரு யூனிட் ஆற்று மணல், ரூ.1000 - அரசாணை வெளியீடு.

ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ.1,000 என நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

ஆன்லைனில் முன்பதிவு செய்து மணல் பெறலாம் எனவும் அறிவிப்பு.

* ரயிலில் பயணிக்க 2 டோஸ் கட்டாயம்:
2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரும் 10ம் தேதி முதல் 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்களுக்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்றும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட பிரிவு அறிவித்துள்ளது.

* தமிழகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு - தமிழக அரசு.

அனைத்து மாவட்டங்களிலும் திங்கள்தோறும் நடைபெறும் குறைதீர் முகாம்கள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைப்பு.

* கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பல பகுதிகளில் பொங்கல் பரிசு பைகள் தைக்கும் பணியில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்.

பையுடன் வருபவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

பைகள் இல்லாமல் பரிசுத் தொகுப்பை வாங்கும் பயனாளிகளுக்கு தனியே டோக்கன் வழங்கப்படும்.

பைகள் இன்றி பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் பின்னர் பைகளை பெற்றுக் கொள்ளலாம் - அரசு

* கொரோனா ஒமைக்ரான் பரவும் சூழலில் தேர்தல் நடத்துவது மிகவும் சவாலானது.

கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளுடன்
தேர்தல் நடத்தப்படும்.

பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் முதல் முன்னுரிமை-இந்திய தேர்தல் ஆணையம்.

தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தராகண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் 18.34 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்-இந்திய தேர்தல் ஆணையம்.

5 மாநில தேர்தலில் வாக்களிக்க உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு - தலைமை தேர்தல் ஆணையர்.

ஆன்லைன் வாயிலாக வேட்புமனு தாக்கல் செய்ய வசதி செய்து தரப்படும்

தேவைப்படுவோர் ஆன்லைன் வாயிலாக வேட்புமனு தாக்கல் செய்யலாம்- தலைமை தேர்தல் ஆணையர்

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 1250 முதல் 1500 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு- சுஷில் சந்திரா

வாக்குப் பதிவு மையங்களில் சானிடைசர்கள், மாஸ்க்குகள் தயார் நிலையில் இருக்கும்

உ.பி., பஞ்சாப், உத்தராகண்ட் மாநிலங்களில் வேட்பாளர்கள் தலா 40 லட்சம் வரை செலவிட அனுமதி

கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் வேட்பாளர் தலா 28 லட்சம் வரை செலவிட அனுமதி- தலைமை தேர்தல் ஆணையர்

தேர்தல் அட்டவணைகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து 5 மாநிலங்களிலும் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது

தேர்தல் வழிகாட்டுதல்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது

தேர்தல் நடத்தை வழிகாட்டுதல்களை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - தலைமை தேர்தல் ஆணையர்

* உ.பி., பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்
- இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்

உத்தரபிரதேசம் தேர்தல் தேதி அறிவிப்பு:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ம் தேதி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் - தலைமை தேர்தல் ஆணையர்.

உத்தரப் பிரதேசத்தில் பிப்.10 முதல் மார்ச் மாதம் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை நடைபெறும்.

உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.

மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27, மார்ச் 3 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் - தலைமை தேர்தல் ஆணையர்.

பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல்

மணிப்பூரில் பிப்.27ஆம் தேதி முதல் கட்ட தேர்தல், மார்ச் 3ஆம் தேதி 2ஆம் கட்ட தேர்தல்.

5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம்

* முழு ஊரடங்கான நாளை திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு செல்ல அனுமதி.

அழைப்பு பத்திரிக்கை உள்ளிட்டவற்றை காண்பித்தால் அனுமதிக்கப்படுவர் - தமிழக அரசு.

முழு ஊரடங்கின் போது உணவகங்கள், சிற்றுண்டி விடுதிகள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக உணவு வழங்க அனுமதி.

உணவு விநியோகத்திற்கு காவல் துறையினர் ஒத்துழைப்பார்கள் - தமிழக அரசு.

* தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்தது தினசரி தொற்று.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய பாதிப்பு 8,981 ஆக இருந்த நிலையில் இன்று 10 ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி.

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரையாவுக்கு கொரோனா-ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி.

* தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 30 ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஐஜிக்களாக 14 பேருக்கும் டிஐஜி-க்களாக 3 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டும், 13 பேர்களுக்கு பணியிடமாற்றமும் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரம்யா பாரதி டிஐஜி ஆக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக நியமனம்.

நெல்லை சரக டிஐ.ஜிஆக பிரவேஷ்குமார் நியமனம்.

சேலம் சரக டிஐஜி ஆக பிரவீன் குமார் நியமனம்.

திண்டுக்கல் சரக டிஐஜி., ஆக ரூபேஷ்குமார் மீனா நியமனம்.

வேலூர் சரக டிஐஜி., ஆக ஆனி விஜயா நியமனம்.

தஞ்சை சரக டிஐஜி., ஆக கயல்விழி நியமனம்.

பாபு ஐ.ஜி. ஆக பதவி உயர்வு பெற்று திருப்பூர் காவல் ஆணையராக நியமனம்.

சமூகநீதி மற்றும் மனித உரிமை காவல் துறை ஐஜியாக செந்தாமரைக்கண்ணன் நியமனம்.

துரைகுமார் ஐஜி ஆக பதவி உயர்வு பெற்று நெல்லை காவல் ஆணையராக நியமனம்.

ஆசியம்மாள் ஐஜிஆக பதவி உயர்வு பெற்று உளவுத்துறை ஐஜி ஆக நியமனம்.

சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராக கபில் குமார் நியமனம்.

பொன்னி டிஐஜி ஆக பதவி உயர்வு பெற்று மதுரை காவல் ஆணையராக நியமனம்.

மகேஸ்வரி ஐஜி ஆக பதவி உயர்வு பெற்று தொழில் நுட்ப ஐஜிஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமலாக்கப்பிரிவு ஐஜியாக விஜயகுமாரி நியமனம்.

லஞ்ச ஒழிப்புத்துறையின் ஐஜி ஆக லலிதாலட்சுமி நியமனம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages