அக்னிப்புரட்சி இன்றைய (09.01.2022) முக்கிய செய்திகள்.
* கொரோனா தடுப்புக்கான முழு ஊரடங்கு தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா தடுப்புக்கான முழு ஊரடங்கு தொடங்கியது.
இன்று காலை 5 மணி முதல் நாளை அதிகாலை வரை அமல்.
ஊரடங்கை கடைபிடிக்க, பொதுமக்களுக்கு போலீஸார் வேண்டுகோள்.
பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின.
* ஜனவரி 21ம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வை ஒத்தி வைத்தது சென்னைப் பல்கலைக்கழகம்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிப்பு.
* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு தொற்று!
* நெல்லை; நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் இன்றி கொடியேற்றம்
* உலகில் ஒரே நாளில் கொரோனாவால் 258,925,368 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் கொரோனாவால் இதுவரை 305,872,815 பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கொரோனாவில் இருந்து 589,447 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 258,925,368 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் ஒரே நாளில் 4,771 பேர் மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,501,970 பேராக உயர்ந்துள்ளது.
* பிப்ரவரி 1 முதல் 15 ஆம் தேதிக்குள் கொரோனா 3வது அலை இந்தியாவில் உச்சம் தொடும்.
கடந்த இரு அலைகளைப் போல், மோசமான பாதிப்புகள் இருக்காது- சென்னை IIT நடத்திய முதற்கட்டப் பகுப்பாய்வில் தகவல்.
* பத்திரிக்கையாளர்களுக்கு மருத்துவ காப்பீடு - வரும் திங்கட் கிழமை தொடங்கி வைக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்
* ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை.
* மதுரை: கல்லுமேடு அருகே கொரோனா உறுதியானதால் அச்சத்தில் சானி பவுடரை கரைத்து குடித்து குடும்பத்தினர் தற்கொலை முயற்சி.
3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழப்பு - மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை.
* வேலூர், சி.எம்.சி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
* மக்கள் மீது ஊரடங்கை திணித்து பொருளாதார பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட கட்டுபாடுகள் அறிவிக்கப்படும் - அமைச்சர்
* அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும்; நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பொங்கல் தொகுப்பு திட்டம் குறித்து சிலர் விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகளை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் - முதல்வர்
எந்த புகாரும் இன்றி அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் -முதல்வர்.
* முதுகலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வரும் 12-ம் தேதி தொடங்குகிறது - மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா.
முதுகலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் அறிவிப்பு.
* பூஸ்டர் டோஸ் செலுத்துவோர் கவனத்திற்கு!!!
60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான முன்பதிவு Cowin.gov.in இணையதளத்தில் தொடங்கப்பட்டு உள்ளது.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை முதல் தொடங்க உள்ளது.
* டெல்லி: நாடாளுமன்றத்தில் பணிபுரியும் 400 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் 400 பேருக்கு பாதிப்பு.
400 பேரின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பிவைப்பு.
* புதுச்சேரியில் 1-9ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் விடுமுறை.
கொரோனா பரவல்; புதுச்சேரியில் 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை(ஜன 10) முதல் மூடல்- பள்ளி கல்வித்துறை அமைச்சர்
* கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அலுவலகம் செல்வதிலிருந்து விலக்கு - மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திரசிங்.
கர்ப்பிணி பெண்கள் , மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அலுவலகம் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆனால், வீட்டிலிருந்து வேலை செய்யும் வகையில், பணி நேரத்தில் இருக்க வேண்டும்.
* கட்டுப்பாட்டு மண்டல பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், கட்டுப்பாடுகள் நீங்கும் வரை விலக்கு அளிக்கப்படுகிறது- ஜித்தேந்திரசிங்.
* கொரோனா பரவல் - பிரதமர் மோடி ஆலோசனை:
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தடுப்பூசி போடும் பணிகள், மருத்துவ கட்டமைப்புகளை தயார்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை.
* கர்நாடகாவில் உயரும் கொரோனா தொற்று:
பெங்களூரில் ஒரே நாளில் 9,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
கர்நாடகா முழுவதும் ஒரே நாளில் 12,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது.
* விழுப்புரம்: செஞ்சி அருகே போந்தை கிராமத்தில் குட்டையில் குளித்த 3 சிறுமிகள் உயிரிழப்பு.
குட்டையில் குளித்த போது நீரில் மூழ்கி சிறுமிகள் ஹேமாவதி, கலையரசி, சுபாஷினி உயிரிழந்தனர்.
* கடைசி ஒரு விக்கெட்டை எடுக்க போராடிய ஆஸ்திரேலியா.
12 பந்துகளில் கடைசி ஒரு விக்கெட்டை எடுக்க 11 வீரர்களும் போராடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டியை போராடி ட்ரா செய்தது இங்கிலாந்து.
பரபரப்பாக சென்ற ஆட்டத்தின் கடைசி 12 பந்துகளில் ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருக்க அதை வெற்றிகரமாக ஆடி முடித்தனர் பிராட் மற்றும் ஆண்டர்சன்.
* ஓபிஎஸ், மகன் ரவீந்திரநாத் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு:
நீதிமன்ற உத்தரவுப்படி ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.
வேட்புமனுவில் சொத்து விவரங்களை தவறான தகவல் தந்த புகாரில் வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மிலானி என்பவரது வழக்கில் தேனி சிறப்பு நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ய 7-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
* பிரேசிலி ஃபர்னாஸ் ஏரியில் சுற்றுலாப் படகுகள் மீது பாறை முகப்பிலிருந்து ஒரு பெரிய பாறை விழுந்ததில் 7 பேர் பலியாகினர், மற்றும் 3 பேரை இதுவரை காணவில்லை.
32 பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சுற்றுலா சென்றவர்களுக்கு நடந்த அந்த விபத்தின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
*:தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் மேலும் 12,895 பேர் பாதிப்பு.
சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 6,186 பேர் பாதிப்பு.
இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 1,808.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 12 பேர்.
இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,48,308. தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 51,335 பேர்.
* தமிழகத்தில் ஒமிக்ரானால் 179 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 179 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்-சுகாதாரத்துறை அறிக்கை .
No comments:
Post a Comment