திருப்பாவை மார்கழி18ம் நாள்
பாடல் விளக்கம்.
மதம் நிறைந்த யானைகளை செலுத்தும் தோள் வலிமை பெற்றவரும், புறமுதுகிட்டு ஓடிவராத தோள் வலிமை உடையவருமான நந்தகோபரின் மருமகளாகிய திருமகளே,
நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே,
வந்து வாசல் கதவினைத்திறப்பாயாக.
பொழுது புலர்ந்ததற்கு அடையாளமாக சேவல்கள் கூவிக் கொண்டிருக்கின்றன.
குருக்கத்தி மலர்ப்பந்தலில் குயில்கள் காலையில் எழுந்து கூவுவது உன் காதில் விழவில்லையா?
பந்து விளையாடும் பெண்ணே.,
உனது கணவனான கண்ணனின் திருப்பெயர்களை நாங்கள் எழுந்து
பாடிக்கொண்டிருக்கிறோம். நீயும் எங்களுடன் சேர்ந்து கண்ணின் புகழினைப்பாட, அழகிய மலர்போன்ற கைகளில் உள்ள வளையல்கள் ஒலிசெய்ய நடந்து வந்து வாசல் கதவினைத்திறக்கவேண்டும். அதனால் எங்கள் மனம் மகிழ வேண்டும்.
No comments:
Post a Comment