அக்னிப்புரட்சி இன்றைய (18.01.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (18.01.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (18.01.2022) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* கடலூர்: வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா.

கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது.

* பேரூராட்சிகள் ஒதுக்கீடு விவரம்: 200 பேரூராட்சிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

ஆதிதிராவிடர்களுக்கு 85 பேரூராட்சிகளும், பழங்குடியினருக்கு 3 பேரூராட்சிகளும் ஒதுக்கீடு.

பழங்குடியின பெண்களுக்கு நீலகிரி மாவட்டம் சோளூர், தேவர்சோலா ஆகிய பேரூராட்சிகள் ஒதுக்கீடு.

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி பழங்குடியின பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

* குடியரசுத் தினவிழாவில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்ட விவகாரம்; மத்திய அரசு விளக்கம்.

அலங்கார ஊர்திகள் பங்கேற்பது குறித்த முடிவை நிபுணர் குழுவே தீர்மானிக்கும்; மத்திய அரசு அல்ல.

நேரக் கட்டுப்பாடு காரணமாக 56 விண்ணப்பங்களில் 21 மட்டுமே விழாவில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்திகளுக்கான விண்ணப்பங்கள் உரிய விவாதங்களுக்கு பின்னரே நிராகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2016, 2017, 2019, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசாங்கத்தின் தலைமையில் நடைபெற்ற குடியரசுத் தினவிழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் அனுமதிக்கப்பட்டன-மத்திய பொதுப்பணித்துறை.

* பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை.

சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான புகாரில் 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

* தமிழக மீனவர்களின் சிறை காலம் நீடிப்பு.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் சிறை காவல் பிப்.1ஆம் தேதி வரையில் நீட்டித்து ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவு.

* வாடிய பயிரைக் கண்டால் மனம் வாடும் இரக்கமும், சாதி பேதமற்ற சமரச சன்மார்க்க நெறியும் கொண்டவரான வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் நினைவை போற்றி, அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

* மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றின் தலைவர்களை நேரடியாக மக்களே வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம்.

அத்துடன், துணைத் தலைவர் பதவிகளில் தலித் பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்.

மேலும் இட ஒதுக்கீட்டின் அளவை 2011 ஆண்டு மக்கள் தொகையின்படி  இருபது சதவீதமாக உயர்த்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்- விசிக தலைவர் திருமாவளவன்.

* தேசிய கொடிக்கு மதிப்பளிப்பது, பொது நிகழ்வுகளில் மக்கள் தேசிய கொடி பயன்படுத்தும் முறை  தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்.

கலாச்சார நிகழ்வுகள்,பொது நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் பொது  பொதுமக்கள் பயன்படுத்த கூடிய தேசியக் கொடி என்பது காகிதத்தாலான கொடியாக இருக்க வேண்டும்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் அந்த காகித தேசியக்கொடியை தூக்கி எறிவதை தடுக்க வேண்டும், அதுபோல் நிகழாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு பயன்படுத்தப்பட்ட காகித கொடியை மொத்தமாக சேகரித்து பாதுகாப்பு முறையில் தனியாக அப்புறப்படுத்த வேண்டும்.

* பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவ்ந்த் மன். - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

* குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெறாது.

குடியரசுத் தினவிழாவில் தமிழக ஊர்தி பங்கேற்காது- மத்திய பாதுகாப்புத் துறை திட்டவட்டம்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு.

தமிழக ஊர்தி பங்கேற்காதது குறித்து மறுபரிசீலனை செய்ய முடியாது- மத்திய அரசு.

தமிழக ஊர்தி இடம்பெறாதது குறித்த காரணங்களை மாநில அரசிடம் தெரிவித்துவிட்டோம்- மத்திய அரசு.

* புதுச்சேரியில் வரும் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.

1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு.

* ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசுகள் குறித்து அரசு சிந்திக்க வேண்டும். ஏற்கெனவே காரினைப் பரிசாகப் பெற்ற வீரர்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்?- இயக்குநர் தங்கர் பச்சான்.

ஜல்லிக்கட்டு போட்டியில் வென்றவருக்கு கார் பரிசளிப்பதற்கு பதிலாக காரின் தொகைக்கு ஈடாக உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடு, நிலம் இவைகளைத் தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம் - இயக்குநர் தங்கர் பச்சான்.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 23,888 பேருக்கு கொரோனா உறுதி; 15,036 பேர் டிஸ்சார்ஜ்; 29 பேர் உயிரிழப்பு.

* டில்லியில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும்.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

* கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்.

கொரோனா "Positivity rate" உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, பரிசோதனைகளை அதிகரிக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages