அக்னிப்புரட்சி இன்றைய (20.01.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று தொடக்கம்.
வியாழன்தோறும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்.
முதலாவது பூஸ்டர் தடுப்பூசி முகாம் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இன்று நடக்கிறது.
மொத்தம் 600 மையங்களில் இன்று பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.
சென்னையில் மட்டும் 160 இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.
* முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் என 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து தற்போது சோதனையானது நடைபெறுகிறது.
கே.பி.அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு.
தெலங்கானா மாநிலத்திலும் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.
* கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் வாபஸ் பெற்றது இங்கிலாந்து அரசு.
வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தேவை இனி இல்லை - இங்கிலாந்து அரசு.
கட்டாய முகக்கவசம் உட்பட கொரோனா நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு.
* கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க தமிழக அரசு உத்தரவு.
1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் பொருட்களுடன் 5 முட்டைகளையும் சேர்த்து வழங்க உத்தரவு.
ஜனவரி மாதத்திற்கான வேலை நாட்களை கணக்கிட்டு பொருட்களை விநியோகிக்க வேண்டும் - தமிழக அரசு.
* விளக்கு பூஜைக்காக கடந்த 30ம் தேதி திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று அடைக்கப்பட்டது.
மகர விளக்கு பூஜையில் ஐயப்பனுக்கு அணிவிக்க கொண்டுவந்த தங்க அங்கிகள், வீர வாள் அடங்கிய திருவாபரணப்பெட்டி மீண்டும் பந்தளம் அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 34 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,581-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் சவரன் விலை ரூபாய் 272 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,648 க்கும் விற்பனை ஆகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 உயர்ந்து ரூ.68.80 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி விலை ரூபாய் 68,800.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
* பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு ரூ.23.81 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அன்னதாகக் கூடம் உள்ளிட்டவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* புதுச்சேரியில் 3 ஆயிரத்தை நெருங்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு:
புதுச்சேரியில் மேலும் 2,783 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,45,342ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் இதுவரை 1,30,392 பேர் குணமடைந்த நிலையில், 13,053 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
* தருமபுரியில் புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் அடிக்கல் நாட்டினார்.
ரூ .56.20 கோடி மதிப்பில் முடிவுற்ற 46 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேங்கை மகன்; ஒரு வேலையை அவரிடம் தந்தால், அதை மிகச்சிறப்பாக செய்து முடிப்பார்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.
சேலம்-தருமபுரி மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
சேலம் - தருமபுரி இடையே ரூ.250 கோடியில் புதிய சாலை அமைக்கப்படும்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 2ம் கட்டம் ரூ.4,600 கோடி மதிப்பில் விரைவில் தொடங்கப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
எனது வாழ்நாளில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்.
தருமபுரியில்தான் முதன்முதலாக மகளிர் சுய உதவிக் குழுவை தொடங்கி வைத்தார் கலைஞர்.
தருமபுரியில் புதிய பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
தருமபுரியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* இட ஒதுக்கீடு என்பது தகுதிக்கு முரணானது அல்ல; 27% ஓ.பி.சி இட ஒதுக்கீடு இது இறுதி தீர்ப்பை வெளியிட்டது உச்சநீதிமன்றம்.
இட ஒதுக்கீடு என்பது தகுதிக்கு முரணானது அல்ல உள்ஒதுக்கீடு வாய்ப்பு பரவலாக்கி அதன் மூலம் சமூகத்தில் தாக்கம் ஏற்பட வேண்டும்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முன் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டிய அவசியம் இல்லை, எனவே மத்திய அரசு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவு சரியானதே-உச்சநீதிமன்றம்.
மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை ஏற்கனவே கடந்த 7ம்தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
* தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் யூடியூப் நிறுவனமும் உடந்தையா?
யூடியூப்பிற்கு ஏன் தடை விதிக்க கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை.
அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
யூடியூப்பில் தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க உத்தரவு.
யூடியூபில் வரும் தவறான விஷயங்களை அரசு தடுக்க வேண்டாமா? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
* மக்களை திசை திருப்புவதற்காகவே லஞ்ச ஒழிப்புத் துறையினரை பயன்படுத்தி சோதனை நாடகம் அரங்கேற்றப்படுகிறது.
திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரூ.500 கோடி வரை ஊழல் நடந்துள்ளது.
தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதால் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியவில்லை. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது.
போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாத காரணத்தால் தொற்று எண்ணிக்கை 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.
கடந்த 8 மாத காலத்தில் திமுக எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.
அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைதான் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்-சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
* தமிழக மீனவர்களை தாக்குதல், துப்பாக்கிச்சூடு நடத்துதல், படகுகளை தகர்த்தல் என சிங்களப் படையின் அட்டூழியங்கள் தொடர்கின்றன. - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.
இவற்றை மத்திய அரசு கண்டிக்காததால் தமிழக மீனவர்களை தாக்குவதற்கான துணிச்சல் இலங்கை அரசுக்கு அதிகரிக்கிறது.
இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை இந்திய வெளியுறவு அமைச்சகம் அழைத்து தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்கும்படி வலியுறுத்த வேண்டும்- பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.
* பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் புதிய பதிப்பை ஒடிசா கடற்கரையில் பாலசோரில் இன்று இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
இந்த ஏவுகணையில் புதிய தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாகவும் சோதனை வெற்றி பெற்றதாகவும் பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
* அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில்
ரூ.2.87 கோடி ரொக்கம், 6.63 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி, கணக்கில் காட்டப்படாத ரூ.2.65 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல்
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 39 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 19,978 பேர் குணமடைந்தனர்.
தற்போது 1,79,205 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று 7,520 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.
* கேரளாவில் இதுவரை இல்லாத ஒருநாள் பாதிப்பாக 46,387 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழப்பு
வயநாடு தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஒரு நாள் பாதிப்பு 1000 பேருக்கு மேலாக உறுதியாகியுள்ளது
Total Positivity Rate 40.2% ஆக பதிவு
* மழையால் பாதித்த பயிர்களுக்கு ரூ.97.92 கோடி நிவாரணம்:
2021 ல் வடகிழக்கு பருவமழையின்போது பாதித்த பயிர்களுக்கு ரூ .97.92 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.
2,23,788 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ .97.92 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய விவசாயிகளுக்கு 2 நாட்களில் நிவாரண நிதி வரவுவைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
No comments:
Post a Comment