அக்னிப்புரட்சி இன்றைய (21.01.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (21.01.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (21.01.2022) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவுடி தியாகுவை கைது செய்தது தனிப்படை போலீஸ்

அரியானாவில் கைது செய்யப்பட்ட தியாகு விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டார்

* சென்னை பெருநகர காவல் துறையால் உருவாக்கப்பட்டுள்ள "விடுப்பு செயலியை" (CLAPP) முதலமைச்சர் இன்று செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளார்

* பார்ல் நகரில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது

3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலை

* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 2.51 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்; 703 பேர் உயிரிழப்பு.

* கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை கோரிய வழக்குகள் வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைப்பு.

இடைக்காலமாக எந்த உத்தரவும் இல்லை- சென்னை உயர்நீதிமன்றம்.

* தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது, கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

அரசாணை வெளியிட்டுள்ளதாக அரசு அளித்த விளக்கத்தை ஏற்று அவதூறு வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.

* மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் புதிதாக மாபெரும் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கபடும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

மதுரையில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் புதிதாக மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

500 கோடி செலவில் மதுரையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

* பிப்.1 முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு. - அமைச்சர் பொன்முடி.

பிப்ரவரி 1ம் முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்.

பிப்ரவரி 1 முதல் 20க்குள் செமஸ்டர் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும்- உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத் தாள்கள் வந்து சேர்வது தாமதமானாலும் பெற்றுக்கொள்ளப்படும்.

ஆன்லைன் தேர்வு முறையில் தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்லூரி இறுதியாண்டு தேர்வு நேரடியாக சுழற்சி முறையில் நடத்தப்படும் - அமைச்சர் பொன்முடி.

* ரகசியமான மற்றும் முக்கிய ஆவணங்களை வாட்ஸ் அப், டெலிகிராம் மூலம் பகிரவேண்டாம் - அரசு அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

செயலிகள் தனியார் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதால் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களில் கூகுள் ஹோம், அலக்ஸா உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் - மத்திய அரசு.

* சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்ட விடுப்பு செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் இந்த செயலியை துவக்கி வைத்தார்.

தலைமை செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்றனர்.

காவல் துறையினர் இந்த செயலியை அவர்களது தொலைபேசி மூலமாகவே CLAPP என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் அவர்களுக்கு தேவைப்படும் விடுப்புகள், ஏற்கனவே அவர்கள் எடுத்திருக்கும் விடுப்புகளை பதிவு செய்வதற்கும் இந்த செயலி பயன்படும்.

இதற்கு முன்பு இருந்து முறையில் காவலா்கள் நேரடியாக காவல் நிலையத்திற்கு வந்து அதற்கு குறித்த விடுப்பு விண்ணப்பம் எழுதி தான் விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் இருந்தது.

இனி வரக்கூடிய கால கட்டங்களில் காவல் துறையினர் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே விடுப்பு எடுக்கும் வகையில் இந்த செயலியானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் காவல் துறையினர் அவர்களுக்கான சாதாரன விடுமுறை மற்றும் மருத்தவ சேவை தொடர்பான விடுப்பு நேரடியாக இந்த செயலியில் பதிவு செய்யலாம்.

விடுப்பு பதிவு செய்த பின் அதற்கான பதிலை அதிகாரிகள் அதில் பதிவிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கொரோனா மூன்றாம் அலையான ஒமைக்ரான் பரவலின்போது ஏற்படக்கூடிய பொதுவான ஐந்து அறிகுறிகளை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

உடல் நடுக்கம் அல்லது நடுக்கமற்ற காய்ச்சல், இருமல், தொண்டையில் எரிச்சல், தசை பலவீனம் மற்றும் சோர்வு ஆகிய 5 பொதுவான அறிகுறிகள் கொரோனா மூன்றாம் அலையில் காணப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் 5 நாட்களுக்குப்பிறகு படிப்படியாக குறைந்துவிடும்.

அதேபோல், 11 முதல் 18 வயதினருக்கு காய்ச்சலுடன் மேல் சுவாசப்பாதையில் தொற்று ஏற்படுவதாகவும், ஆனால் இந்தமுறை நிமோனியா பாதிப்பு குறைவாக உள்ளது.

* சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தோருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிப்பு.

சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏப்ரலில் நடந்த வெடி விபத்தில் இறந்தோருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க தடை செய்யப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்க உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

* தமிழகம் முழுவதும் உள்ள சுரங்க பணிகளை டிரோன் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

சுரங்கங்கள், கனிமங்கள், பூமியின் கீழ் உள்ள அனைத்தும் இந்திய மக்களுக்கு சொந்தமான தேசத்தின் செல்வங்கள் என்றும் பேராசை கொண்ட சிலர் அநியாய லாபம் ஈட்ட சுரங்கங்களை சுரண்டுவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொழில் வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில் தேசத்தில் செல்வமும், பொதுநலனும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

* தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 23 ஆம் தேதி முழு ஊரடங்கு - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு

* கேரளாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 100%  செலுத்தப்பட்டது - சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

* செல்லப் பிராணிகள், தெரு நாய்கள் வளர்ப்பை முறைப்படுத்துவதற்கு விதிகள் வகுக்கப்பட வேண்டும்

விதிகளை வகுப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் விருப்பம்

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்களை முறையாக பராமரிக்க கோரி தொடர்ந்த வழக்கு பிப்.9க்கு  தள்ளிவைப்பு

* பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரம் - தரமற்ற பொருட்களை விநியோகம் செய்த நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.

அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டு அனுமதிக்க இயலாது - முதலமைச்சர்.

* 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : தென் ஆப்பிரிக்க அணிக்கு 288 ரன்கள் இலக்கு.

இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் குவிப்பு.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் - 85, கே.எல்.ராகுல் -55, ஷர்துல் தாகூர் - 40 ரன்கள் எடுத்தனர்.

* தமிழகத்தில் 30 ஆயிரத்தை நெருங்கிய தினசரி பாதிப்பு.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 33 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 21,684 பேர் குணமடைந்தனர்.

தற்போது 1,87,358 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று 7,038 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2250 பேருக்கும், திருவள்ளூரில் 1016, கோவையில் 3653, கன்னியாகுமரியில் 1248, மதுரையில் 903, சேலத்தில் 1009, காஞ்சிபுரத்தில் 635, திருச்சியில் 632 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி.

* ஒருநாள் தொடரையும் வென்றது தென்னாப்பிரிக்கா.

2வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது தென்னாப்பிரிக்கா.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages