அக்னிப்புரட்சி இன்றைய (22.01.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.01.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.01.2022) முக்கிய செய்திகள்.

* கோவை பி.கே.புதூர் தனியார் குடோனில் புகுந்த சிறுத்தை 6 நாட்களுக்கு பின் பிடிபட்டது. வனத்துறையினர் சிறுத்தையை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

* அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் காணொலி வாயிலாக சந்திப்பு

சீனாவின் ராணுவ செல்வாக்கு, வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளுக்கு இரு நாட்டு தலைவர்களும் கண்டனம்

* லடாக்; கார்கில் பகுதியில் இருந்து 169 கி.மீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு

* கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 6.76 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு

பிரான்ஸ் - 4 லட்சம், இந்தியா - 3.35 லட்சம், இத்தாலி - 1.79 லட்சம், பிரேசில் - 1.68 லட்சம், ஸ்பெயின் - 1.41 லட்சம், ஜெர்மனி - 1.38 லட்சம், அர்ஜென்டினா - 1.18 லட்சம் பேர் பாதிப்பு

* நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று கலந்துரையாடுகிறார்

மாவட்ட அளவில் பல்வேறு திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதை நோக்கமாக கொண்டு உரையாடல் நடைபெற உள்ளது

மாவட்டங்களில் அரசுத் திட்டங்களின் செயல்பாட்டின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் கேட்டறிகிறார்

* சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநில சுகாதார செயலாளர்கள், மத்திய சுகாதார செயலாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று காணொலி மூலம் ஆலோசனை

உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உ.பி ஆகிய மாநிலங்களில் பொதுக்கூட்டம் நடத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில் ஆலோசனை

* ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதா அல்லது மேலும் நீட்டிப்பதா என்பது குறித்து இன்று முடிவு

* தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது

சென்னையில் 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது

* நடப்பாண்டில் ஐபிஎல் தொடர் நடைபெறும் இடம் குறித்து, அணி உரிமையாளர்கள் உடன் பிசிசிஐ இன்று ஆலோசனை

இந்தியாவில் ஏதேனும் ஒரே நகரத்தில் மட்டும் நடத்துவதா அல்லது வேறு நாடுகளில் நடத்துவதா என்பது குறித்து ஆலோசனை

ஐபிஎல் 2022; அகமதாபாத், லக்னோ ஆகிய புதிய அணிகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களின் விவரங்கள் வெளியீடு

அகமதாபாத் அணியில் ஹார்திக் பாண்ட்யா, ரஷித் கான், சுப்மான் கில் ஆகியோர் ஒப்பந்தம் - அணி நிர்வாகம்

லக்னோ அணியில் கே.எல்.ராகுல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னோய் ஆகியோர் ஒப்பந்தம் - அணி நிர்வாகம்

* தஞ்சை மாவட்டத்தை சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுடன் இணைக்கும் வகையில் புதிதாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ‘அணைக்கரை’ பாலம் இடிந்து விழுந்தது.

பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில் இடிந்தது.

* கொரோனா பரவல் காரணமாக 4 பயணிகள் ரயில்கள் இன்று முதல் 6 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம்.

நாகர்கோவில் - கோட்டயம் எக்ஸ்பிரஸ், கொல்லம் - திருவனந்தபுரம், கோட்டயம் - கொல்லம், திருவனந்தபுரம் - நாகர்கோவில் ரயில்கள் நிறுத்தம்.

* கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை

* மாணவி உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் - நீதிமன்றம்.

தற்கொலை செய்து கொண்ட தஞ்சை பள்ளி மாணவியின் உடலை பெற வேண்டும் - மாணவியின் பெற்றோருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

பாலியல் தொல்லை புகார் இல்லாததால் மறு உடற்கூறாய்வு தேவையில்லை.

மாணவியின் பெற்றோர் நாளை தஞ்சை நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜராகவும் உத்தரவு.

* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் டெபாசிட் தொகை 4 ஆயிரமாக உயர்வு.

மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ 4 ஆயிரம் டெபாசிட் தொகை.

நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ 2 ஆயிரம் நிர்ணயம்.

பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ 1000 டெபாசிட் தொகை நிர்ணயம்.

வாக்குச் சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் கைப்பேசி பயன்படுத்த தடை.

வேட்பாளர்களும் முகவர்களும் வாக்குச் சாவடிகளில் செல்போன் பயன்படுத்த தடை.

* பொங்கல் பரிசுத்தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியிருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம்"

தரமற்ற பொருட்கள் மக்களுக்கு போய் சேர்ந்த பிறகு இவர் நடவடிக்கை எடுப்பதால் என்ன பயன் ஏற்படப்போகிறது” - டிடிவி தினகரன் கேள்வி!

* கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:

கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்விலை 1-1-2020 முதல் 30-6-2021 வரை நிறுத்தி வைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன.

தற்போது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 1-1-2022 முதல் அகவிலைப்படியினை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவுப்படி, அகவிலைப்படி தொடர்பாக ஏற்கனவே பதிவாளர் அலுவலக அந்தந்த நிர்வாக பிரிவுகளில் வழங்கியுள்ள அறிவுரைகளின்படியும் அகவிலைப்படி வழங்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கி கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

* மதுபான கடைகளுக்கு நாளை விடுமுறை - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.

முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அறிவிப்பு.

* வெள்ளி சனி ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் கோயில்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதை அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். கடந்த முறையும் பாஜக போராட்டம் நடத்தித்தான் கோயிலை திறக்க வைத்தோம்.

இம்முறை அந்த சூழலுக்கு எங்களை அரசு தள்ளாது என்று நம்புகிறோம்- பாஜக தலைவர் அண்ணாமலை.

* குடியரசு தின விழாவில் நிறைவாக இசைக்கப்படும் காந்தியின் விருப்பப் பாடலான Abide With Me என்ற பாடலை நீக்கியது மத்திய அரசு.

1950ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வந்த வழக்கத்தை மாற்றி மத்திய அரசு நடவடிக்கை.

* மாணவி லாவண்யாவின் மரணத்தை, மதமாற்ற நிர்பந்தம் என இல்லாத ஒரு பிரச்சனையோடு இணைத்து தனது குறுகிய அரசியல் ஆதாயத்தை அடையத் துடிக்கும் பாஜக-வின் முயற்சி கண்டிக்கத்தக்கது-சிபிஐஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

மதத்தை வைத்து வெறுப்பு அரசியலை கிளப்பி விட முயற்சிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கையும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்-சிபிஐஎம்.

* தமிழ்நாட்டில் 30 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை.

புதிதாக 30,744 பேர் பாதிப்பு.
23,372 பேர் டிஸ்சார்ஜ்.
33 பேர் உயிரிழப்பு; 1,94,697 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில்-6,452 பேர், செங்கல்பட்டில்-2,377 பேர், கோவையில்-3,886 பேர், திருவள்ளூரில்-1069 பேர், திருப்பூரில்-1,014 பேர், கன்னியாகுமரில்-1,266 பேரும் பாதிப்பு.

* தமிழக வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகன் நியமனம்.

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக துறைமுகம் காஜா என்கிற காஜா முகைதீனை நியமனம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

* மார்ச் மாதத்தில் ஐபிஎல்
நடப்பாண்டின் ஐபிஎல் தொடர் மார்ச் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை நடைபெறும்

இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்துவதில்தான் உறுதியாக உள்ளோம் - பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages