அக்னிப்புரட்சி இன்றைய (27.01.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியில், ஜப்பான் எல்லை அருகே மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
வடகொரியா நடப்பாண்டில் 6வது முறையாக ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
* எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
6,999 எம்.பி.பி.எஸ். மற்றும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது.
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.
நாளை மற்றும் நாளை மறுதினம் 7.5% இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
பொது பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஆன்லைன் கலந்தாய்வுக்காக www.tnhealth.tn.gov.in, மற்றும் https://tnmedicalselection.net இணையதள முகவரிகள் வெயிடப்பட்டுள்ளன.
* ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீஸில் புகார்.
சென்னையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ், போலீஸில் புகார்.
* சென்னையில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அகற்ற வேண்டும்-உடனடியாக பணிகளை தொடங்க அதிகாரிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தல்.
* அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளி பயணிகளை உபசரிப்புடனும், அன்புடனும் நடத்த வேண்டும்.
ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு.
பேருந்தில் இடமில்லை என மாற்றுத்திறனாளிகளை இறக்கிவிடக்கூடாது.
மாற்றுத்திறனாளிகளிடம் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது - போக்குவரத்துத்துறை.
* சென்னையில் குடியரசு தினவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு, தமிழக அரசிடம் வருத்தம் தெரிவித்தது ரிசர்வ் வங்கி.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து, ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி தலைமையிலான அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.
* கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 4 வயது சிறுவன் அடித்துக் கொலை.
முந்திரி தோப்பில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுவன் சடலம் மீட்பு.
சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை.
கீழக்கொள்ளை கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்நாதனின் 4வயது மகன் அஸ்வின்.
சிறுவன் அஸ்வின் நேற்று மதியம் 3 மணி முதல் மாயமான நிலையில் சடலமாக மீட்பு.
* ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பதிவுத்துறையினர் நீர்நிலைகள் நிலங்களை பதிவு செய்ய கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஆக்கிரமிப்பு இல்லை என அறிவிப்பு பெற வேண்டும்.அறிவிப்பு இல்லாமல் சொத்துவரி, மின், குடிநீர் இணைப்பு வழங்க கூடாது - நீதிமன்றம்.
அனுமதி கோரும் கட்டிடம் நீர்நிலைகளில் இல்லை என ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் - பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு.
* பழைய கட்டிடம் இடிந்து 2 மாணவர்கள் உயிரிழப்பு; ஒருவர் மீட்பு.
கடலூர் வண்டிக்குப்பம் பகுதியில் சமத்துவபுரத்தின் அருகில் இருந்த பழைய அரசு கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் சிக்கினர்.
பழைய கட்டிடத்தின் அருகில் அமர்ந்திருந்த போது கட்டிடம் இடிந்து விபத்து.
சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில் 2 பேர் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு.
வீரசேகர்(17), சுதீஷ்குமார் 17) ஆகிய +2 மாணவர்கள் உயிரிழப்பு, புவணேஷ் (17) படுகாயத்துடன் மீட்பு.
* கடலூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி.
இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தாருக்கு வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், காயமடைந்த சிறுவனுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு.
* கடைகளில் விற்பனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசிகள்.
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளை சந்தையில் விற்க அனுமதி
சாதாரன மருந்தகங்களில் தடுப்பூசி கிடைக்காது.
மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு - இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்.
* தமிழக குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம் - தமிழக அரசு.
தரமற்ற பொங்கல் பரிசு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டதாக புகார்கள் வந்ததையடுத்து தமிழக அரசு நடவடிக்கை.
* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்;
ஜன.29ம் தேதி சனிக்கிழமையன்றும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
அனைத்துக்கட்சி பிரதிநிதிகளின் கருத்தை ஏற்று வாக்குப்பதிவு செய்ய காலை 7முதல் மாலை 6 மணி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்குப்பதிவு நாளன்று மாலை 5-6 மணி வரை வாக்குப்பதிவு செய்யலாம்- மாநில தேர்தல் ஆணையம்.
* சிறுதானியங்கள் விற்பனை - அரசாணை வெளியீடு.
ரேசன் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனைக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறுதானியங்களை கொள்முதல் செய்து விநியோகிக்க முடிவு.
சிறு தானியங்களின் மதிப்பை கூட்டவும், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை.
ராகி, கம்பு, திணை, குதிரைவாலி, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு.
சிறு தானியங்களின் தயாரிப்பை அதிகப்படுத்த, விலை நிர்ணயம் செய்ய மாநில அளவில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் அந்தந்த மாவட்டங்களில் குழு அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.
சிறு தானியங்கள் அரை கிலோ மற்றும் ஒரு கிலோ பாக்கெட்டுகள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - அதிமுக நாளை மாலை ஆலோசனை.
தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை.
அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் நேர்காணல் நிறைவடைந்த நிலையில் ஆலோசனை.
கூட்டணி பேச்சுவார்த்தை, பரப்புரை, வேட்பாளர் தேர்வு, வெற்றிக்கான வியூகம் குறித்து நாளை மாலை ஆலோசனை நடத்துகிறது அதிமுக.
* தமிழகத்தில் கொரோனா பதிப்பு அதிகரித்து வருகிறது - மத்திய அரசு.
கர்நாடகா, கேரளா, தமிழகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மராட்டியம், உ.பி, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் குறைந்து வருவதாகவும் மத்திய குடும்பநலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தகவல்.
* நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நீக்கம், வரும் ஞாயிறு (ஜன 30) முழு ஊரடங்கு கிடையாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.
தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
28-1-2022 முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (30-1-2022) முழு ஊரடங்கு கிடையாது.
* ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் 8 ஆண்டுகளுக்கு மேலான இலகுரக வாகனங்களை மாற்ற வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்.
சுற்றறிக்கைக்கு எதிராக தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் உத்தரவு.
* கல்லூரி மாணவர்கள் குழப்பம்:
பிப்.1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், நவம்பர்-டிசம்பர் மாத செமஸ்டர் ஆன்லைன் தேர்வாக நடைபெறுமா என மாணவர்கள் குழப்பம்.
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மேலும் 28,620 பேர் டிஸ்சார்ஜ் - 2.13 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 53 பேர் உயிரிழப்பு.
* பிப்.1 முதல் அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறப்பு:
தமிழகத்தில் பிப். 1 ஆம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க இந்துசமய அறநிலையத்துறை அறிவுறுத்தல்.
* உயர்கல்வித் துறை விளக்கம்
கல்லூரி மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆன்லைன் வழியே தேர்வு நடைபெறும் என உயர்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் நாளை முதலே அனைத்து வழிபாட்டுத்தளங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி.
No comments:
Post a Comment