அக்னிப்புரட்சி இன்றைய (31.01.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (31.01.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (31.01.2022) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார் மேற்கிந்திய தீவுகள் வீரர் ஜேசன் ஹோல்டர்.

டி20 போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய நான்காவது வீரர்  என்ற சாதனையை படைத்தார் ஜேசன் ஹோல்டர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது.

* பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பு:

நிதிநிலை கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்.

அனைத்து உறுப்பினர்களும் விரிவான ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்.

அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.

* தேசிய உயர் கல்வித் தகுதிக்கான
வரைவு அறிக்கை வெளியீடு.

உயர்கல்வி தகுதிக்கான வரைவு அறிக்கை குறித்த கருத்துக்களை வரும் பிப்.13-க்குள் idpnep2020@gmail.com மூலம் தெரிவிக்க வேண்டும் - பல்கலைக்கழக மானியக் குழு.

* நாடாளுமன்ற கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது:

75வது சுதந்திர தின விழா இந்த ஆண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அத்தனை போர் வீரர்களுக்கும் எனது வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்- குடியரசு தலைவர்.

நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய, உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எனது வீர வணக்கம்.

இந்தியா கொரோனாவால் கடுமையான சவால்களை சந்தித்தது; இருப்பினும், ஒரே ஆண்டில் 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளது. இதற்கு எனது வாழ்த்துகள்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் விஷயத்தில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா திகழ்கிறது; கடுமையான சவாலான காலத்திலிருந்து இந்தியா ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளது.

கடந்த காலங்களை விட தற்போது இந்தியாவில் சுகாதார கட்டமைப்பு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது; ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழை மக்கள் சுகாதார திட்டங்களை பெறுவதற்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.

சமுதாயத்தில் சம நிலை இருக்க வேண்டும் என்பது அம்பேத்கரின் எண்ணம்; அதனை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது- குடியரசு தலைவர்.

* நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி  நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் திமுக எம்.பிக்கள் முழக்கம்.

மத்திய அரசு தலையிட்டு நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்.

நீட் தேர்வு குறித்து தமிழக ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக ஆர்ப்பாட்டம்.

* நாட்டின் அனைத்து  கிராமங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் ஏராளமான பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்து இருக்கிறது- குடியரசு தலைவர்.

பொருளாதாரத்தில் கடும் பாதிப்படைந்த ஏழைகளுக்கு நேரடியாக பணம் கிடைப்பதை அரசு உறுதி செய்திருக்கிறது; டிஜிட்டல் பண பரிவர்த்தனை கொரோனா பொதுமுடக்க காலத்தில் அனைவருக்கும் பேருதவியாக இருந்தது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அரசு விவசாயிகளுக்கு உதவி வருகிறது.

விளை நிலங்களுக்கு அருகிலேயே போதுமான கட்டமைப்புகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்துகிறது.

அரசின் முயற்சிகளால் முஸ்லீம் மாணவர்களின் பள்ளி இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது.

ஸ்கில் இந்தியா திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய இளைஞர்களின் சக்தியை பறைசாற்றப்பட்டது- குடியரசு தலைவர்.

மத்திய அரசின் திட்டங்கள் மூலம் முஸ்லீம் பெண்கள் பலன் அடைந்து வருகின்றனர்.

முஸ்லீம் பெண்களின்  உரிமையை உறுதி செய்ய முத்தலாக் நடைமுறை நீக்கப்பட்டது-குடியரசு தலைவர்.

* தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

* சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி செயல்பட்டு வரும் நிலையில் பரிந்துரை.

* நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, தனித்துப்போட்டியிட உள்ளதாக பாஜக அறிவிப்பு.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டி - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு.

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது; நகர்ப்புற உள்ளாட்சி தேரத்லில் பாஜக தனித்து போட்டி;  தேசிய ஜனநாயக கூட்டணியில் தோழமை தொடரும் என்று தமிழக பாஜக தலைவைர் அண்ணாமலை அறிவிப்பு.

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக இணைந்தே தேர்தலை சந்திக்கும் - அண்ணாமலை

அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரிய உந்துசக்தி.

பாஜகவின் எல்லா திட்டங்களுக்கும் அதிமுக உறுதுணையாக இருந்தது.

2021 தேர்தலில் அதிமுகவிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் சில சங்கடங்கள் இருந்தன- அண்ணாமலை.

பாஜக வேகமாக வளர்ந்து வரும் கட்சி.
அதிக இடங்களில் போட்டியிட தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

கட்சியை பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

இல்லம் தோறும் தாமரை என்பதே எங்கள் இலக்கு- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு.

கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.

அதிமுக பாஜக நல்லுறைவு தொடரும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக நீடிக்கிறது.

நயினார் நாகேந்திரன் பேசியதற்கும் கூட்டணி முறிவிற்கு சம்பந்தமில்லை.

பாஜக அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுடன் எந்த வருத்தமும் இல்லை-தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

* வார்டு ஒதுக்கீட்டில் திமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை; ஜோதிமணி எம்.பி.

கரூரில் திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தன்னை வெளியேற சொன்னதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி திமுக மீது புகார்.

* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில் அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

சேலம், ஆவடி, திருச்சி, மதுரை, சிவகாசி, தூத்துக்குடி மாநகராட்சிக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு முழுவதும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறப்பு- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

மாணவர்கள், பெற்றோர்கள் விரும்பினால் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம்.

நேரடி வகுப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

கொரனோ அறிகுறிகள் தென்படும் மாணவர்களை உடனே தனிமைப்படுத்தி பரிசோதிக்க வேண்டும்.

நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்.

* மலையாள செய்தி சேனல் மீடியாஒன் ஒளிப்பரப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.பாதுகாப்பு காரணங்களால் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்

* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் 100 வேட்பாளர்கள் பட்டியலை தேமுதிக வெளியிட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் நிலையில் திருப்பூரை தொடர்ந்து சென்னைக்கும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

* உள்ளாட்சித் தேர்தலுக்கு பறக்கும் படைகள்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 1,650 பறக்கும் படைகள். 8 மணி நேரத்திற்கு 550 குழுக்கள் என்றும்  24 மணி நேரத்துக்கு 1,650 பறக்கும் படைகளும் பணியில் இருக்கும்- மாநில தேர்தல் ஆணையம்.

* தமிழ்நாட்டில் 20,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு:

புதிய பாதிப்பு-19,280.
மொத்த பாதிப்பு-33,45,220.
உயிரிழப்பு-20
சிகிச்சையில்-1,98,130

* பிப்.2-ம் தேதி வெளியாகிறது கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்-தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு.

கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர பெறப்பட்ட 26,898 விண்ணப்பங்களில் 26,459 விண்ணப்பங்கள் தகுதியானவை.

தகுதியான விண்ணப்பங்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை மறுநாள் tanuvas.ac.in / www2.tanuvas.ac.in இணையதளங்களில் காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

* புதுச்சேரியில் வருகிற 4 தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகிறது.

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்களும் வகுப்புகள் நடைபெறும்-புதுச்சேரி அரசு அறிவிப்பு.

* தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது.

* கேரளாவின் மிக பிரபலமான பாம்பு பிடி மன்னன் வா வா சுரேஷை நல்லபாம்பு கடித்தது.

கோட்டயம் குறிச்சி என்ற பகுதியில் நல்லபாம்பை பிடித்து அதை பையினுள் அடைக்க முயலும் போது சுரேஷின் தொடையில் பாம்பு கடித்தது.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages