திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஏந்தல் பக்தா அறிக்கை
அக்னி கலசம் இரவோடு இரவாக மாவட்ட நிர்வாகம் திருடியதை நாங்கள் இதோடு விடுவதாக இல்லை. மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் போல் செயல்படாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் போல் செயல்படுகிறார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் காவல்துறை எங்களை கண்ணியத்துடன் நடத்தினார்கள் காவல்துறை நண்பர்களுக்கும் நன்றி. ஆனால் தாசில்தார், DRO, VAO அவர்கள் அக்னி கலசத்திற்கு எதிராகவும் வன்னிய இனத்திற்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகள் இன்று இல்லை என்றாலும் என்றேனும் ஒருநாள் கண்டிப்பாக இந்த இடத்திற்கு கைகட்டி பதில் சொல்ல வேண்டிய நிலை கூடிய விரைவில் வரும்.
கூடிய விரைவில் அக்னி கலசம் அதே இடத்தில் மீண்டும் புதுப்பொலிவுடன் நிறுவப்படும்.
நாங்கள் மக்களுக்கும் அரசுக்கும் எந்தவித இடையூறும் கொடுக்காமல் கைதாகிறோம். நாங்கள் மருத்துவர் அய்யாவின் வளர்ப்பு அதனால் சிறைவாசம் எங்களை பின்னோக்கித் தள்ளாது நாங்கள் எதிலும் உற்சாகத்துடன் அதிகளவில் அக்னி கலசத்தை மீட்டெடுக்கும் வரை உற்சாகத்துடன் செயல்படுவோம். மேலும் என்னோடு அக்னி கலசத்தை மீட்க களம் கண்ட மேற்கு மாவட்ட செயலாளர் இலா.பாண்டியன் மற்றும் காளிதாஸ், ஜானகிராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
மாவட்ட செயலாளர் ஏந்தல் பக்தா
No comments:
Post a Comment