அக்னிப்புரட்சி இன்றைய (02.02.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (02.02.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (02.02.2022) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* போட்டி தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு:

டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள், அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை வரும் 28-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.

ஆதார் எண் இணைத்த உடன், இனி வரும் காலங்களில் OTR கணக்கு மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

* கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியீடு.

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், காலை 10 மணிக்கு, tanuvas.ac.in, tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் வெளியாக உள்ளது.

* சென்னையில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை.

சென்னை மடிப்பாக்கம் 188 வது வட்ட திமுக செயலாளராக பதவி வகித்த செல்வம் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் 188 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவற்கு மனு தாக்கல் செய்துள்ளார்.

நேற்று இரவு ராஜாஜி சாலையில் உள்ள தனது அலுவலகம் அருகே நிர்வாகிகளுடன் செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் செல்வத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்வம் உயிரிழந்தார்.

அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து மடிப்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு காணொலி வாயிலாக பொதுக்கூட்டம் நடத்துகிறது திமுக.

அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பரப்புரை பொதுக்கூட்டங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

* அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை தடுக்க சிசிடிவி கேமரா பொறுத்த உத்தரவிடக்கோரி கே.கே. ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு.

எந்த ஆதாரமும் இல்லாமல், விளம்பரத்திற்காக மனு தாக்கல் செய்துள்ளதாகக்கூறி மனுதாரருக்கு ₹10,000 அபராதம், 2 ஆண்டுகள் வழக்கு தொடர தடை - உயர் நீதிமன்றம்.

* மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கக்கோரிய வழக்கு வாபஸ்.

10.5% அடிப்படையில் மாணவர் சேர்க்கையோ, பணி நியமனமோ நடைபெறக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி வழக்கு.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் உயர் நீதிமன்றத்தில் ஏன் மனுத்தாக்கல் ?- நீதிமன்றம் கேள்வி

71 லட்சம் அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து வழக்கு வாபஸ்.

* அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு நாட்டின் 37 கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு.

நாடு முழுவதும் உள்ள சமூகநீதி கொள்கையை முன்னெடுத்துச் செல்ல அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்கவுள்ளதாக ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் கடிதம்.

நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினர், பட்டியிலின மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களை பாதுகாக்கவே இந்த கூட்டமைப்பு - ஸ்டாலின்.

பாஜக அல்லாத தேசிய கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு.

சமத்துவம், சுய மரியாதை, சமூகநீதியில் நம்பிக்கை கொண்டவர்கள் ஒன்றிணைந்தால்ஒன்றிணைந்தால்தான் பிரிவினை, மதவாதத்தை எதிர்த்து போராட முடியும் - ஸ்டாலின்.

பன்முகத்தன்மை கொண்ட நமது ஒன்றியம் பிரிவினை, மத மேலாதிக்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது - ஸ்டாலின்.

சமூகநீதியில் பல பத்தாண்டுகளாக நாம் அடைந்த முன்னேற்றத்திற்கு பிற்போக்கு சக்திகள் சவால் விடுகின்றன - ஸ்டாலின்.

* மத்திய காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு.

1,149 மத்திய காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

1,149 பணியிடங்களுக்கு தகுதியான ஆண்கள் மட்டும் வரும் மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

https://cisfrectt.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மத்திய தொழில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

* தபால் வாக்குகளுக்கு முழுவதுமாக விலக்கு கோரிய அதிமுக வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் பாபமுருகவேல் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

யாரை எங்கு பணியமர்த்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது.

தேர்தல் பணியில் எந்த அலுவலர் ஈடுபடுத்துவது என்பதை ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தேர்தல் ஆணையத்தை நாங்கள் நடத்த முடியாது என்று அதிமுகவுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

* காவலர் தேர்வுக்கு தமிழ் கட்டாயம்:
காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு தமிழ் மொழி கட்டாயம்- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்.

தமிழ் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு குறைந்தபட்சம் 40% சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும்.

* சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை வேண்டும்.

அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீரை பாதிப்பது மட்டுமல்ல, நிலத்தையும் மலடாக்கி விடும்- சென்னை உயர் நீதிமன்றம்.

* மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்
கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை ஏதும் இல்லை

* மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்.

வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை.

* மேக் இன் இந்தியா எனக்கூறி கூறியே சிறுதொழில்களை அழித்துவிட்டீர்கள்.

5 கோடி மக்களை மீண்டும் வறுமைகோட்டிற்கு கீழே தள்ளிவிட்டீர்கள்- நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேச்சு.

"You will never ever rule the TamilNadu"-ராகுல் காந்தி மக்களவையில் பேச்சு.

தமிழ்நாட்டிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்- ராகுல் காந்தி.

ஒரு குடிமகனாக நாட்டில் நடைபெற்று வரும் விஷயங்கள் குறித்து கவலை கொண்டுள்ளேன்-ராகுல் காந்தி உருக்கம்.

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, கொரோனா பாதிப்பால் 84% இந்தியர்களின் வருவாய் குறைந்துள்ளது.

இந்தியாவின் 40% சொத்துகள் 10 பேரிடம் மட்டுமே இருக்கிறது -ராகுல்காந்தி.

இந்தியா என்பது கூட்டாட்சி, ராஜாங்கம் இல்லை.

உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஒரு போதும் நீங்கள் தமிழக மக்களை ஆட்சி செய்ய முடியாது

தமிழகத்தில் நீட் குறித்த விவகாரத்துக்கு நீங்கள் செவி கொடுக்கவில்லை - ராகுல் காந்தி.

புதிதாக வேலை வாய்ப்பை உருவாக்காவிட்டாலும் வேலை இழப்பை தடுக்க நடவடிக்கை தேவை.

ஒரு குறிப்பிட்ட நிறுவனம் நாட்டின் முழு அதிகாரத்தையும் தன் கையில் எடுத்து கொள்ள நினைக்கிறது.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பங்களிப்பில் மட்டுமே இந்தியாவை நடத்த முடியும்.

பாஜக மாநிலங்களின் குரலை ஒடுக்க முடியும் என நினைப்பது ஒருபோதும் நடக்காது - ராகுல்.

செய்தியாளர்: தமிழ்நாடுங்குற பெயரை அதிகம் உச்சரிச்சீங்களே ஏன் ?
ராகுல்காந்தி: நானும் தமிழன்தானே.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages