அக்னிப்புரட்சி இன்றைய (03.02.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 8வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக:
மதுரை, கடலூர், ஆவடி, ஈரோடு மாநகராட்சிகள், திட்டக்குடி, திருவள்ளூர், திருத்தணி, தருமபுரி உள்ளிட்ட நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
* அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் அஞ்சலி.
பேரறிஞர் அண்ணா நினைவு தினம்: அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.
* மாணவி லாவண்யாவின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்.
விசாரணையை சிபிஐக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டால் தமது தரப்பு கருத்தை கேட்க வலியுறுத்தி கேவியட் மனு.
* இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்திய ராகுல்காந்திக்கு நன்றி.
அனைத்துத் தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
* தனியார் வேலைவாய்ப்பில் உள்ளூர் வாசிகளுக்கு 75% இட ஒதுக்கீடு செய்து ஹரியானா அரசு நிறைவேற்றிய சட்டத்தை நிறுத்திவைக்க பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவு.
* மத வழிபாட்டு தலங்களுக்கு வந்தால் கொரோனா தொற்றுமா?
மதுக்கடைக்கு வருபவர்களுக்கு கொரோனா தொற்று பரவாதா?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு பிறகு கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டது ஏன்? - லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர்
* இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலையை நிறுவும் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு, அவர் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் சந்தான பீர்ஒளி பாராட்டு
சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார் சந்தான பீர்ஒளி
* சென்னை, டி.டி.கே.சாலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் முதல்வருக்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர் சதிஷ் நன்றி
'CM SIR HELP ME' என்ற பதாகையுடன் முதல்வரை சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு கொண்டுவர கோரிக்கை
* ராகுல்காந்தி 'தமிழன்' என்று சொல்வதற்கு முகாந்திரம் இல்லை - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
* மயிலாடுதுறை கோயில் திருட்டில் திருப்பம்: ரெங்கநாதர் கோயில் படிச்சட்டத்தை களவாடிய 2 பேர் கைது.
ரெங்கநாதர் திருக்கோயில் உற்சவ மூர்த்தியை தூக்கி செல்ல பயன்படும் படிச்சட்டம், கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் களவாடப்பட்டது.
இது தொடர்பாக கே.கே.நகரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
மனுவில் சொல்லியுள்ளபடி வெள்ளி தகடுகள் உரிக்கப்பட்டு படிச்சட்டம் களவுபோனது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸில் தீவிர வீசாரணையில் ஸ்ரீநிவாச ரெங்க பட்டர், முரளிதர தீட்சிதர் ஆகீயோர் தான் படிச்சத்தை களவாடியது கண்டுபிடிக்கப்பட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்கப்படுமா?
நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
ராமர் பாலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது - மத்திய அரசு
* சினிமா துறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி ரசிகர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி
நம்பிக்கையை மட்டுமே மூலத்தனமாக கொண்டு துவங்கிய பயணம் - நடிகர் சிவகார்த்திகேயன்
எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து அன்பும் நன்றிகளும்
* சென்னை புத்தக கண்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.
பிப்ரவரி 16ஆம் தேதி6 முதல் மார்ச் வரை புத்தக கண்காட்சி நடத்த அனுமதி
* சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது திறமையின்மையை மறைக்கப் பார்க்கிறாரா ?-எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.
* நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 7 மாநில முதல்வர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
யாராவது பதில் கடிதம் எழுதியுள்ளனரா ? அப்படி இருந்தால் வெளியிட முடியுமா ? - எடப்பாடி பழனிசாமி.
* தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு.
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கவும் கோரிக்கை.
* நீட் மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய தமிழக அரசின் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி.
மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு சபாநாயகருக்கு ஆளுநர் ரவி அறிவுறுத்தல்.
நீட் மசோதாவை தமிழக சபாநாயகருக்கே திருப்பியனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள விளக்கம்:
தமிழ்நாடு அரசு அமைத்த நீட் உயர் மட்ட குழு அறிக்கையையும், அதை அடிப்படையாக வைத்து இயற்பட்ட தமிழ்நாடு அரசின் மசோதாவையும் ஆய்வு செய்தேன். நீட் தேர்வுக்கு முந்தைய காலகட்டம், நீட் தேர்வுக்கு பிந்தைய காலகட்டத்தில் மாணவர் சேர்க்கையை ஒப்பிட்டு பார்த்தோம். அப்படி பார்க்கையில் இந்த மசோதா சமூக நீதிக்கு எதிரான மசோதாவாக அறியப்படுகிறது.
அதிலும் கிராமத்தில் வரும் மாணவர்களுக்கும், பொருளாதார ரீதியாக வசதி குறைந்த மாணவர்களுக்கும் எதிரான மசோதாவாக இது உள்ளது,. அதனால் இந்த மசோதாவை திருப்பி அனுப்புகிறேன்.
அதேபோல் நீட் மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக இருக்கிறது வேலூர் சிஎம்சி கல்லூரி மற்றும் மத்திய அரசு இடையிலான வழக்கில் ஏற்கனவே நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக இந்த மசோதா உள்ளது. அதில் கிராமத்தில் வரும் மாணவர்களுக்கும், பொருளாதார ரீதியாக வசதி குறைந்த மாணவர்களுக்கும் ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மசோதா அந்த தீர்ப்பிற்கு எதிராக உள்ளது. அதனால் இதை திருப்பி அனுப்பி உள்ளோம் என்று ஆளுநர் தனது விளக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
* சிரியாவில் அமெரிக்கப்படை தாக்குதலால் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் குரேஷி உயிரிழந்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
* தமிழக ஆளுநர் ரவியை திரும்பப் பெறக்கோரி அமளி.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வேண்டும் - மக்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளி.
நீட் தேர்வு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை கண்டித்து மக்களவையிலிருந்து தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு.
* நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான தமிழ்நாடு அரசின் சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது துரதிருஷ்டவசமானது.
திருப்பி அனுப்புவதற்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி கூறியுள்ள காரணங்கள் தேவையற்றவை- அன்புமணி ராமதாஸ்.
* நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் வரும் 5 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்.
நாளை மறுநாள் (5-02-2022) காலை 11 மணிக்கு சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
* ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாஷிமி அல் குரேஷி கொல்லப்பட்டார்-அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்.
பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டையில் கொல்லப்பட்டார் என ஜோ பைடன் டுவிட்டரில் தகவல்.
* ஏ. கே.ராஜன் குழு கண்டறிந்துள்ள உண்மைகளை ஆளுநர் எதைக்கொண்டு மறுக்கிறார் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
நீட் மசோதாவைத் திருப்பி அனுப்பியதன் மூலம் தமிழ்நாட்டு மக்களை அவமதித்த ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்- விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை.
* தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் ஞாயிற்றுக்கிழமை ( 05.02.2022) அன்று, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்தப்படும்- தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவிப்பு.
* நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிரானது.
தமிழ்நாடு அரசு மீண்டும் மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் - முத்தரசன், சிபிஐ மாநிலச் செயலாளர்.
* நீட் தேர்விலிருந்து விலக்கு தரக்கோரி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டவரைவுக்கு ஒப்புதல் தரமறுத்து திருப்பியனுப்பிய தமிழக ஆளுநரின் செயல்பாடு பேரதிர்ச்சியளிக்கிறது.
ஆளுநரின் முடிவு பெரும் சனநாயகப்படுகொலையாகும்- நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
No comments:
Post a Comment