அக்னிப்புரட்சி இன்றைய 05.02.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய 05.02.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய 05.02.2022) முக்கிய செய்திகள்.

* சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு 3,456 பேர் வேட்புமனு தாக்கல்!

1696 ஆண்கள், 1847 பெண்கள், 3 திருநங்கைகள் என மொத்தம் 3456 பேர் வேட்பு மனு தாக்கல்; கடைசி நாள் மட்டும் 2112 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்!

* காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை:

ஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகர் அருகே சகுராவில் நடந்த என்கவுன்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் லஷ்கர் - இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் - ஜம்மு-காஷ்மீர் போலீஸ்.

*:காஷ்மீரில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு.

ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து காஷ்மீரின் குல்மார்க் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல்.

* நீட் விவகாரம் - அனைத்து கட்சி கூட்டம் தொடக்கம்:

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து  விவாதிப்பதற்கான அனைத்துக் கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடக்கம்.
அதிமுக, பாஜக புறக்கணிப்பு.

* நுழைவுத்தேர்வு தேவையில்லை என்று முடிவு செய்த மாநிலம்தான் தமிழ்நாடு - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம்.

2006-ல் நுழைவுத்தேர்வு தொடர்பான சட்டம் கொண்டு வரப்பட்டு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வெளிப்படையானது என அப்போது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறியது -  மு.க.ஸ்டாலின்.

நீட் விலக்கு மசோதா 8 கோடி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும்.

சமூகநீதி போராட்டத்தை முன்னெடுக்கவே அனைத்துக்கட்சி கூட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அரசியல் சாசனப்படி தனது கடமையை ஆளுநர் செய்யவில்லை.

நீட் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள்:

1. திமுக - அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா.சுப்பிரமணியன்

2. காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை

3. அதிமுக - பங்கேற்கவில்லை

4. பாட்டாளி மக்கள் கட்சி - வெங்கடேஸ்வரன்

5. பாரதிய ஜனதா கட்சி - பங்கேற்கவில்லை

6. மதிமுக - டாக்டர்.ரகுராமன்

7. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - தளி ராமசந்திரன்

8. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - நாகை மாலி

9. விடுதலை சிறுத்தைகள் - சிந்தனைச் செல்வன்

10. மனிதநேய மக்கள் கட்சி - ஜவாஹிருல்லா

11. தமிழக வாழ்வுரிமைக் கட்சி - வேல்முருகன்

12. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - ஈஸ்வரன்

13. புரட்சி பாரதம் - பங்கேற்கவில்லை

* நீட் விலக்கு சிறப்பு சட்டமன்ற கூட்டம்.
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற வரும் 8 ஆம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டம்  நடைபெறுகிறது.

சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப முடிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* அதிமுக ஆதரவு அளிக்கும்
அதிமுகவைப் பொறுத்தவரை நீட் தேர்வு ரத்து தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!

நீட் விலக்கு பெறுவதற்காக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு தரும்.

நீட் விலக்கு தொடர்பான தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடிதம்.

* ஆராய்ச்சி படிப்புகளுக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் இல்லை:

முதுநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளதால், ஆராய்ச்சி படிப்புகளுக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

மத்திய அரசு வெளியிட்ட உயர்கல்விக்கான புதிய தேசிய கல்வி கொள்கையிலும் இதே நடைமுறை தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் வரும் திங்கட்கிழமை முதல் வெளிப்புற நோயாளிகளுகான சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகள் செயல்படும் - ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு.

நீட் சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிய ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில், அக்கட்சியினர் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

* மும்பையின் சில பகுதிகளில் கடந்த இரண்டு மணி நேரங்களாக ஜியோ இணைப்பில் இடையூறு!
ஜியோ வாடிக்கையாளர்கள் கடும் அவதி.

* சென்னையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல். சோதனை செய்ததில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை என போலிசார் தகவல்.

மிரட்டல் விடுத்த நபர் திருகோவிலூரைச் சேர்ந்தவர் என முதல்கட்ட விசாரணையில் தகவல்.

* நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை அடுத்து, வருகிற 8ம் தேதி சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு!

இந்த ஆண்டின்
முதல் முறையாக செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது

* எந்தெந்த உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்தலாம் - பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு போக்குவரத்துத்துறை.

சென்னையில் இருந்து கோவை, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் பேருந்துகள் பிரசன்ன பவனில் உணவு அருந்த அனுமதி.

சேலம், திண்டுக்கல், காரைக்குடி செல்லும் பேருந்துகளின் பயணிகள் வசந்தபவனில் உணவு அருந்த அனுமதி.

பல்வேறு இடங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகளின் பயணிகள் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் இடையே அமைந்துள்ள ஸ்ரீபாலாஜி ஆரியாஸ் உணவகத்தில் நிற்க உத்தரவு.

எந்தவித புகாருமின்றி பயணிகளின் உணவுக்காக பேருந்துகளை நிறுத்தி முறையாக உத்தரவை பின்பற்ற வேண்டும்.

பேருந்துகள் இயக்கப்பட்ட விவரம், உணவுக்காக நிறுத்திய விவரங்களை வாட்ஸ் அப் மூலமாக தெரிவிக்க வேண்டும்.

அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு.

* முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு. பிப்.12ம் தேதி தொடங்க உள்ள தேர்வுக்கான ஹால் டிக்கெட் trb.tn.nic.in இணையதளத்தில் வெளியீடு.

* 216 அடி உயர பிரமாண்ட ராமானுஜர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

தெலங்கானா: ஐதராபாத்தில், ஸ்ரீராமானுஜருக்கு ₨1,000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

120 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டு 500 டன் எடையில் சிலை அமைப்பு.

திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகள் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் சிலை அமைப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages