அக்னிப்புரட்சி இன்றைய (06.02.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (06.02.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (06.02.2022) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* கடலூர் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

* ஜீனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

“இளம் வீரர்களின்  நேற்றைய ஆட்டம் இந்தியாவின் கிரிக்கெட் எதிர்காலம் பாதுகாப்பான கரங்களில் இருப்பதை காட்டுகிறது” என பிரதமர் புகழாரம்.

* பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நல குறைவால் உயிரிழந்தார்

* சகோதரி லதாவின் பாடல்கள் பல உணர்வுகளை வெளிப்படுத்தியவை; பல தசாப்தங்களாக இந்திய திரைப்பட உலகின் மாற்றங்களை அவர் நெருக்கமாகக் கண்டார்.

லதா மங்கேஷ்கர் உடனான உரையாடல்கள் மறக்க முடியாதவை; அவரது குடும்பத்தினரிடம் எனது இரங்கலை தெரிவித்துள்ளேன் - பிரதமர் மோடி.

* பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்.

பாடகி லதா மங்கேஷ்கரின் பாடல்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தின; அவரின் சாதனைகள் ஒப்பிட முடியாதவை - ராம்நாத் கோவிந்த்.

* பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிப்பு.

நாடு முழுவதும் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் - மத்திய அரசு.

* அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு:
மறைந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும்.

லதா மங்கேஷ்கரின் உடல் நண்பகல் 12.30 மணிக்கு அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

மும்பை, சிவாஜி பூங்காவில் மாலை 6.30 மணிக்கு அரசு சார்பில் இறுதிச்சடங்குகள் நடைபெறும்- மகாராஷ்டிரா அரசு.

* 17 ஆயிரம் கோடி இழப்பு; நிர்வாக சீர்குலைவே காரணம்- இராமதாசு அய்யா குற்றச்சாட்டு.

தமிழ்நாடு மின்வாரியத்தின் இழப்பு 2020-21ஆம் ஆண்டில் 17 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

மின்கட்டணத்தை உயர்த்தாமல் மின் உற்பத்தி அதிகரிப்பு, நிர்வாக சீர்கேடுகளை களைதல் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்- மருத்துவர் இராமதாசு அய்யா

* மேற்கு வங்கத்தில் உள்ள சிக்னல்கள், அரசு மற்றும் பொது இடங்களில் அடுத்த 15 நாட்களுக்கு லதா மங்கேஷ்கரின் பாடல்களை இசைக்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு.

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம், மும்பை பிரபுகஞ்சில் இருந்து  தொடங்கியது.

ராணுவ வாகனத்தில் வைத்து சிவாஜி பூங்காவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

* நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் வாவா சுரேஷ்

கேரளாவில் பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாவா சுரேஷ் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்

அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல்

*பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிப்பு

* லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

மும்பையில் இறுதி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி

லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்

* கூகுள் நிறுவனத்தின் அதிநவீன பிராண்டிங்கை வெளிப்படுத்தும் வகையில் 8 ஆண்டுகளுக்குப்பிறகு கூகுள் குரோமின் லோகா புதுப்பிக்கப்பட்டுள்ளதாக இதன் வடிவமைப்பாளர் எல்வின் ஹூ டிவிட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

* ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள Specialist cadre officer (SCO) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள பட்டதாரிகள் வருகின்ற பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

* முன்னாள் கிரி்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக் சாந்த் புற்றுநோயால் காலமானார்

* மும்பை : சிவாஜி பூங்காவில், மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது

முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடன் தகனம் செய்யப்பட்டது

* கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த கட்சி செய்யாததை திமுக செய்திருக்கிறது - கோவையில் திமுக நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் பேச்சு

* தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளதால், அதிமுகவினர் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம் - ஈபிஎஸ்

நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகவும், காங்கிரசும்தான்; நீட் தேர்வை தடுப்பதுதான் அதிமுக

* பிப்.19-ம் தேதி நடைபெறவிருந்த முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கணினி தேர்வு ரத்து

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

* 1,000வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி:

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரின், இன்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

28வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எளிதாக எட்டியது இந்தியா.

அதிகபட்சமாக ரோஹித் 60 ரன்களும், சஹல் 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.

* கொரோனா காலகட்டத்தால் நேரில் சந்தித்து வாக்கு கேட்க முடியவில்லை.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முழுமையான வெற்றி பெற வேண்டும் - காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் பிரசாரம்.

நீட் எதிர்ப்பில் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். நீட் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு விரோதமாக எந்த திட்டம் வந்தாலும் அதை எதிர்ப்போம்.

படிப்பதற்கே ஒரு தகுதி வேண்டும் என்று தடுக்கிற சூழ்ச்சியுடன் வருபவர்களைத்தான் எதிர்க்கிறோம்.

நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யும் அவசியம் திமுகவுக்கு இல்லை.

* மத்திய அரசு அலுவலகங்கள் நாளை முதல் நூறு சதவீதம் இயங்கும்.

மத்திய அரசு அலுவலகங்கள் நாளை(பிப்.7) முதல் முழு அளவிலான பணியாளர்களுடன் இயங்கும் - மத்திய அரசு.

* நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார் இதில் டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்கிறார்கள்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages