அக்னிப்புரட்சி இன்றைய (07.02.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (07.02.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (07.02.2022) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் திடீர் ரத்து.
3 நாள் பயணமாக ஆளுநர் டெல்லி செல்லவிருந்த நிலையில் ரத்து.

* மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை, வரும் 12ம் தேதி  திறக்கப்பட உள்ளது.

தினமும் 15,000 பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

* லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் செலுத்தும் விதமாக ஒடிசாவின் புரி கடற்கரையில் மணற்சிற்பம் செதுக்கிய சுதர்சன் பட்நாயக்.

* இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் தொடங்கியது.

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 விசைப்படகுகளை ஏலம் விடும் பணி தொடங்கியது.

* தமிழகத்தை ஒரு பொம்மை முதல்வர் ஆள்கிறார்.

கடந்த 8 மாதங்களாக திமுக அரசு எந்த நல திட்டத்தையும் செய்யவில்லை.

திமுக அரசு ஒரு சர்வாதிகார அரசு.
அவர்களிடம் நியாயம் எதிர்பார்க்க முடியாது - சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை.

* திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள்; மகத்தான வெற்றியை அவர்கள் மனமுவந்து தருவார்கள்.

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன்; நிறைவேற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்.

* சிவசங்கர் பாபாவுக்கு சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்க அனுமதி கோரிய வழக்கு.

சிபிசிஐடி, புழல் சிறைத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. வழக்கு விசாரணையை பிப்.11-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவு.

* நாகப்பாம்பு தீண்டியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாம்பு மனிதன் வா வா சுரேஷ் நலம் பெற்று வீடு திரும்பினார்.

இது தனது இரண்டாவது பிறப்பு எனவும் பாம்புகள் பிடிக்கும் பணியை தொடர இருப்பதாகவும் வாவா சுரேஷ் பேட்டி.
மேலும் மருத்துவ உதவி அளித்த கேரள அரசுக்கு சுரேஷ் நன்றி.

* நகர்ப்புற தேர்தலில் மனுவை வாபஸ் பெற அவகாசம் நிறைவு.

நகர்ப்புற தேர்தலில் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நிறைவு.

இன்று மாலை இறுதி வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட உள்ளது.

* தமிழகத்தில் வரும் 10-ம் தேதி நடைபெறவிருந்த முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நாளை மறுநாளே நடைபெறும்.

வரும் 10-ம் தேதி தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் தேதி மாற்றம் - பள்ளிக் கல்வித்துறை.

* காங்கிரசுக்கு வாய்ப்பளிக்காத தமிழர்கள்" மக்கள் அங்கீகரிக்கிறார்களா? என காங்கிரஸ் கட்சி சிந்திக்க வேண்டும் - மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு.

1967ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை.

தெலங்கானா உருவாக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் கட்சிக்கு அம்மாநில மக்கள் வாய்ப்பு அளிக்கவில்லை.

நேர்மையானவர்கள், சேவை செய்பவர்கள் யார் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டனர்-பிரதமர் மோடி.

கொரோனா காலத்திலும் காங்கிரஸ் கட்சி எல்லைமீறி அரசியல் செய்தது.
பலமுறை தோல்வியை சந்தித்த பிறகும், தோல்வி குறித்து  காங்கிரஸ் கவலைப்படவில்லை. பிரதமர் மோடி

* திமுக ஆட்சி அமைந்த 8 மாதத்தில் 70% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.

முன்னாள் முதலமைச்சர் சொந்த மாவட்டத்திற்கு என்ன செய்தார் என்று பட்டியலிட முடியுமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கொடநாடு வழக்கை குறிப்பிட்டால் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்கிறார்கள்.

கொடநாடு வழக்கில் உண்மை வெளிவர வேண்டுமென அதிமுகவினரே எதிர்பார்க்கின்றனர் - முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களே வெற்றி பெறுவர்

திமுக வெற்றி பெற்றால் மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்கள் வரை சென்று சேரும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

* தமிழகத்தில் மேலும் 5,104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நேற்றைய பாதிப்பு 6,120 ஆக இருந்த நிலையில் 5,104 ஆக குறைவு

* இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ₨59 லட்சம் மதிப்பில் விற்பனை

இலங்கை எல்லைக்குள் நுழைந்ததாக கைப்பற்றப்பட்ட 139 படகுகள் ஏலத்தில் விற்பனை

* செங்கல்பட்டு பாலாற்றில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் செங்கல்பட்டில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளன

* இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் முயற்சிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்தி வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages