அக்னிப்புரட்சி இன்றைய (10.02.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
தி.நகர் பகுதியில் நள்ளிரவில் பதற்றம் - போலீஸ் குவிப்பு
கதவு சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்பட வில்லை
3 மது பாட்டில்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. சம்பவ இடத்தில் துணை ஆணையர் தலைமையில் போலீசார் விசாரணை
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* உ.பி.யில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது:
உத்தரப் பிரதேசத்தில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
2.28 கோடி வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்குகளை பதிவு செய்கின்றனர்.
வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
58 தொகுதிகளில் மொத்தம் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
* பாஜக அலுவலகம் மீது குண்டுவீச்சு - ஒருவர் கைது.
சென்னை: தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கர்த்தா வினோத் என்பவர் கைது.
* காஞ்சிபுரம் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தற்கொலை.
காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் விபரீத முடிவு.
* நாகை: திருப்பூண்டியில் பாஜக இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் புவனேஸ்வர்ராமின் காருக்கு தீ வைப்பு.
பாஜக நிர்வாகி புவனேஸ்வர்ராம் காருக்கு தீ வைத்தது யார் என கீழையூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
* ஜெயலலிதாவின் திட்டங்கள் நூறு ஆண்டுகள் கடந்தாலும் அசைக்கமுடியாத திட்டங்கள்.
நம்பிய மக்களுக்கு ஆட்சிக்கு வந்த 9 மாதங்களில் நம்பிக்கை துரோகம் செய்த கட்சி திமுக- கோவை பரப்புரையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்.
* மூன்று நாட்களாக போராட்டம் நடத்திய கவுரவ விரிவுரையாளர்களுடன் பேச மறுத்து விட்ட தமிழ்நாடு அரசு, அவர்களை மறைமுகமாக அச்சுறுத்தி போராட்டத்தை கைவிடச் செய்துள்ளது. -பாமக நிறுவனர் இராமதாசு அய்யா
உரிமை கேட்டுப் போராடியவர்களின் கோரிக்கைகளைக் கூட அரசு கேட்க மறுப்பது நியாயமற்றது.
* ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ உச்சநீதிமன்ற உத்தரவின்படி மருத்துவக்குழுவை அமைத்தது எய்ம்ஸ்.
மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
* கோயில் வளாகத்தில் பிரசாதம் விநியோகிப்பதில் தவறில்லை ஆனால் உணவுப் பொருட்களை விற்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்.
பிரசாதம் மற்றும் உணவுப்பொருட்களை கோயில் வளாகத்தில் விற்பனை செய்வதை தடுக்கக்கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு.
கோயிலுக்கு வெளியே தான் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது - தமிழக அரசு.
* வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால், 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் இல்லை- மத்திய அரசு.
வெளிநாட்டு பயணிகளுக்கான தளர்வுகள் பிப்ரவரி 14ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
* தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், தென் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
* 6 - 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்.26 அன்று புத்தகமில்லா தினம்.
6 - 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்.26 அன்று புத்தகமில்லா தினம் (No Bag Day) கடைபிடிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை.
மாடித்தோட்டம், மூலிகைத் தாவர வளர்ப்பு, பாரம்பரியக் கலைகள் குறித்த பயிற்சியும், அன்றைய நாளில் மாணவர்களுக்கு சிற்றுண்டி, பரிசுகள் வழங்க ரூ 1.2 கோடி நிதி ஒதுக்கியது பள்ளிக்கல்வித்துறை.
* அரசு மருத்துவமனை பிரசவ வார்டுகளில் போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் உயிரிழந்த பிரியா என்ற பெண்ணின் கணவருக்கு ரூ.14.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு- தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு.
* ஹிஜாப் விவகார வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு.
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை தொடர்பான வழக்கு-கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரணை.
ஹிஜாப் விவகார வழக்கை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு.
எந்தவொரு மதம் சார்ந்த ஆடைகளையும் மாணவர்கள் அணிவதை, யாரும் வலியுறுத்த கூடாது தலைமை நீதிபதி அமர்வு.
கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும் - கர்நாடக தலைமை நீதிபதி அமர்வு.
* ஈரோடு மாவட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் காணொலி பிரசாரம்.
தமிழ்நாட்டை இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாற்ற திமுக உழைத்து வருகிறது.
நீட் தேர்வை திமுக, காங். கொண்டு வந்ததாக அதிமுக தொடர்ந்து பொய் குற்றச்சாட்டு.
நீட் தேர்வை ஜெயலலிதா எதிர்த்தாலும், ஈபிஎஸ் ஆட்சிக்கு வந்த பிறகே தமிழகத்தில் அமலுக்கு வந்தது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் நீட் தேர்வு அதிமுக ஆட்சியில்தான் வந்தது; இதை ஆதாரங்களுடன் நிரூபிக்க தயார்
நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயாரா? - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்.
தமிழகத்தில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான் என்ற நிலை உருவாகும்
நான் நிரந்தர முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல; திமுக தமிழர்களின் உணர்வோடு உருவான இயக்கம் என்பதற்காக - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மக்களால் தோற்கடிக்கப்பட்ட பழனிசாமி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற அநியாயங்களை மறைக்கவும், தானும் தன் அமைச்சர்களும் செய்த ஊழல்களை மறைக்கவும் தினமும் பொய் சொல்லி வருகிறார்.
இவர் பொய் சொல்லுகிற குணத்தை பார்த்து, பச்சை பொய் சொல்லும் பழனிசாமி என மக்களே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்; பொய் சொல்லுவதில் டாக்டர் பட்டம் வாங்கும் அளவுக்கு மக்களிடம் பொய் சொன்னவர்தான் இந்த பழனிசாமி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* ரஜினிகாந்த் நடிக்கும் 169 வது படம்:
நடிகர் ரஜினிகாந்தின் 169வது படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைக்கிறார் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.
* 90% காவல் அதிகாரிகள் ஊழல்வாதிகள் - உயர்நீதிமன்றம்.
தமிழக காவல்துறையில் 90 சதவிகித அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர்.
10 சதவிகித அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளனர்- சென்னை உயர்நீதிமன்றம்.
ஊழல் அதிகாரிகளை களைந்து, திறமையற்ற அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டும்.
* கள்ளக்குறிச்சி: மாதவச்சேரி செல்லும் சாலையில் நெல் அறுவடை செய்து கொண்டிருக்கும் போது இயந்திரம் திடீரென தீப்பற்றி எரிந்ததில் முழுவதும் சேதம்.
* சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி:
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு.
* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் குற்றச்சாட்டு.
காஞ்சிபுரம் மாநகராட்சி அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மரணத்திற்கு திமுகவினரின் கொலை மிரட்டலே காரணம் - ஓபிஎஸ், ஈபிஎஸ்.
* கர்நாடகாவில் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14ல் பள்ளிகள் திறப்பு.
கல்லூரிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் - முதலமைச்சர் பசவராஜ் பொம்மை.
No comments:
Post a Comment