அக்னிப்புரட்சி இன்றைய (12.02.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (12.02.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (12.02.2022) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை 100 வது நாளாக மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 101.40 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* 12 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.

மன்னார் வளைகுடா பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தால் தமிழகத்தில் வரும் 15ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னி யாகுமரி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 12 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யும்.

கடலுார், புதுக்கோட்டை மாவட்டங்களில், சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும்.

தென் கடலோர மாவட்டங்களில், 13 முதல் 15ம் தேதி வரை மிதமான மழை பெய்யும்.

* கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில்ல் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.

பலத்த மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

* அமெரிக்கர்கள் "அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில்" உக்ரைன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் - வெள்ளை மாளிகை அறிவுறுத்தல்

இன்னும் ஒரு வாரத்திற்குள் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, அஞ்சலக கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் உள்ளிட்ட 11 அடையாள ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் - வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்.

* அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தில் வன்னியருக்கு 10.5% ஒதுக்கீட்டை, ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை இல்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

* தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 2ம் தேதி வரை நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு.

வரும் 16ம் தேதி முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி.

மார்ச் 3 வரை மக்கள் அதிகம் கூடும் அரசியல் மற்றும் மதம், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.

திருமண நிகழ்வுகளில் 200 பேர் வரை கலந்து கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி.

* விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயராஜ் அவர்களை அவருடைய அலுவலகத்தில் அக்னிப்புரட்சி இதழின் ஆசிரியர் நாராயணசாமி அவர்கள் (12.02.2022) இன்று முதன்முறையாக  சந்தித்து பொன்னாடை போர்த்தினார், பதிலுக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயராஜ் அவர்களும் ஆசிரியர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டனர்.

* அக்னிப்புரட்சி இதழின் திண்டிவனம் தொகுதி செய்தியாளராக D. பாலா @
பாலையா M.Sc,. அவர்களை நியமனம் செய்து, அதற்கான அடையாள அட்டையை இன்று (12.02.2022) விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயராஜ் அவர்கள் மூலம் வழங்கப்பட்டது உடன் அக்னிப்புரட்சி ஆசிரியர் நாராயணசாமி இருந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages