அக்னிப்புரட்சி இன்றைய (13.02.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (13.02.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (13.02.2022) முக்கிய செய்திகள்.

* மருத்துவ படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு நாளை முதல் தொடங்க உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

* நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் காணொலி வாயிலாக பிரசாரம்

* சென்னையில் 101வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ரூ. 101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை

* உலகளவில் இதுவரை 41.05 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனாவில் இருந்து 33.06 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 58.27 லட்சம் பேர் உயிரிழப்பு

* ஐபிஎல் மெகா ஏலம் 2வது நாளாக இன்று பெங்களூருவில் நடைபெற்றது

ஆல்ரவுண்டர் சிவம் துபேவை சென்னை சூப்பர் கிங்ஸ் 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் - இரண்டாவது நாளில் லிவிங்ஸ்டோனிற்கு அடித்தது ஜாக்பாட் !

வீரராக வந்த ஏய்டன் மார்க்கரமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2.6 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜன்சனை 4.2 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஓடின் ஸ்மித்தை பஞ்சாப் கிங்ஸ் அணி 6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஜெயந்த் யாதவை குஜராத் டைட்ன்ஸ் அணி 1.7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் ஜோர்டனை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை

தமிழக வீரர் விஜய் சங்கரை குஜராத் டைட்ன்ஸ் அணி 1.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

டோமினிக் ட்ரேக்ஸை குஜராத் டைட்ன்ஸ் அணி 1.1 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியின் வீரர் லியாம் லிவிங்ஸ்டோனை பஞ்சாப் கிங்ஸ் அணி 11.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் புஜாராவை எந்த அணிகளும் எடுக்கவில்லை.

டேவிட் மலான், மார்னஸ் லபுஸ்சென், மோர்கன் ஆகிய மூன்று பேரையும் யாரும் எடுக்கவில்லை

மந்தீப் சிங்கை டெல்லி கேபிடல்ஸ் அணி 1.1 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.

இந்திய வீரர் ரஹானேவை 1 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் நிகிடியை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இலங்கை வீரர் துஷ்மந்தா சமீராவை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதை 5.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி எடுத்துள்ளது.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவை யாரும் எடுக்கவில்லை

* ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் ஏற்படும் இடர்ப்பாடுகள் குறித்து புதினுக்கு பைடன் அறிவுறுத்தல்

* ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது

2 படகுகளுடன் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

மீனவர்கள்11 பேரையும் தலைமன்னார் முகாமில் வைத்து விசாரணை

* ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 5. 59 மணியளவில் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் மூலம் EOS-04 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 44,877 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  - மத்திய சுகாதாரத்துறை

* மேற்குவங்கம் போல் தமிழகத்தில் சட்டமன்றம் முடக்கப்படலாம்"

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக 5,54,187 பூத் ஸ்லிப் வினியோகம் செய்யப்பட்டுள்ளன - சென்னை மாநகராட்சி தகவல்

* மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கியிருப்பது விதிமுறைகளுக்கும் மரபுகளுக்கும் எதிரானது.

ஆளுநர் என்பவர் அரசியலமைப்பை பின்பற்றுவதில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

பரஸ்பரம் மரியாதை கொடுப்பதே ஜனநாயகத்தின் அழகாகும் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* ஒரே நாடு ஒரே தேர்தல் என ஈபிஎஸ் எந்த அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

* கர்நாடகா: ஹிஜாப் விவகாரத்தால் உடுப்பி மாவட்டத்தில் நாளை முதல் 19ம் தேதி வரை 144 தடை உத்தரவு.

நாளை காலை 6 மணி முதல் பிப்.19 மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு.

* சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முதல் 100 சதவீதம் இயங்கும்.

கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் தென்னக ரயில்வே அறிவிப்பு.

* பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

இலங்கைக் கடற்படையால் மேலும், 12 மீனவர்கள் கைது; உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

* பெரிய மருதும், சின்ன மருதும், ஹைதர் அலியும், திப்பு சுல்தானும், வீர மங்கை வேலுநாச்சியாரும் உலவிய மண் திண்டுக்கல் மண்" - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கொரோனா காலத்தில் மக்களுக்கு ₨4,000 கொடுத்தது திமுக அரசு

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை அமல்படுத்தியது யார்?

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் முழுமையான வெற்றி பெற வேண்டும்.

இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக உழையுங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைப்பேசியில் உரையாடல்

பாஜக ஆளாத மாநிலங்களின் ஆளுநர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்தார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சி முதல்வர்கள் மாநாடு நடத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு

டெல்லியில் எதிர்க்கட்சி முதல்வர்கள் மாநாடு விரைவில் நடத்தப்படும்.
மாநில சுயாட்சியை நிலைநாட்ட திமுக துணை நிற்கும்

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

* திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் லீக்:

நாளை நடைபெறவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததால் அதிர்ச்சி.

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வுக்கான வினாத்தாளும், 12ஆம் வகுப்பு கணிதத் தேர்வுக்கான வினாத்தாளும் கசிந்தது.

வினாத்தாள்கள் கசிந்தது குறித்து விசாரணை நடத்த தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு.

* எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்வதற்கான வரைவு அறிக்கையை பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியமான SEBIயிடம் தாக்கல் செய்தது எல்.ஐ.சி.

முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத்துறை செயலாளர் துகின் கந்த பாண்டே தகவல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages