அக்னிப்புரட்சி இன்றைய (17.02.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் 105வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ரூ 101.40-க்கும், டீசல் ரூ 91.43-க்கும் விற்பனை.
* ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்புகள் குறித்து அரசிடம் இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது நிபுணர் குழு.
காவிரி டெல்டாவில் ஆய்வு செய்ய கடந்த ஆகஸ்ட் மாதம் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு.
ஹைட்ரோகார்பன் திட்டத்தால் அப்பகுதிகளில் நிலம் மற்றும் நீர்வளம் மாசடைந்துள்ளது.
கழிவுகள் முறையாக கையாளப்படவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்.
* தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தை திருத்தி அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
எஸ்.குமாரி தலைவராகவும், மாலதி நாராயணசாமி, கீதா நடராஜன் உள்ளிட்டோர் உறுப்பினர்களாகவும் நியமனம். இவர்கள் 3 ஆண்டுகளுக்கு பொறுப்பில் நீடிப்பார்கள் என அறிவிப்பு.
* தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, இன்று முதல் 19-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க தடை - மாநில தேர்தல் ஆணையம்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான பிப்.22-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், அருகில் 5 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.
* சித்ரா ராமகிருஷ்ணன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை.
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் ஆகும்.
சாமியாரின் ஆலோசனையின்பேரில் பங்குச் சந்தையை நடத்தியதாக சர்ச்சை வெளியான நிலையில் ரெய்டு.
* நிலுவையில் உள்ள பிரச்சினைகளை பேசித் தீர்ப்போம் - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜக்தீப் தன்கர் கடிதம்.
இந்த வார இறுதியில் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என மம்தாவுக்கு அழைப்பு.
முதல்வரின் தற்போதைய நிலைப்பாடு அரசியலமைப்பை முட்டுக்கட்டைக்கு இட்டுச்செல்லும்.
ஆரோக்கியமான விவாதம் ஜனநாயகத்திற்கு அத்தியாவசியம் மட்டுமின்றி, அரசியலமைப்பின் பிரிக்க முடியாத அங்கம்.
பேச்சுவார்த்தை மூலம் அனைத்து விவகாரங்களுக்கும் விரைந்து தீர்வு காண வேண்டும் - ஜக்தீப் தன்கர்.
* தேனியில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது; மேற்குத்தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே முக்கியம் - உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்.
மதிகெட்டான் - பெரியார் புலிகள் வலசையில் திட்ட அமைவிடம் இருப்பதால் அனுமதிக்க முடியாது.
புலிகள் சரணாலயத்தை கம்பம் பள்ளத்தாக்குடன் இணைக்கும் முக்கிய இணைப்பாக போடி மலை விளங்குகிறது.
மலையில் மிகச்சிறிய அளவில் மனித செயல்பாடுகளால் அதிர்வுகள் ஏற்பட்டால் கூட புலிகள் நடமாட்டம் பாதிக்கும் - தமிழ்நாடு அரசு.
* சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
60 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னை உடையவர்கள், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
- திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை.
* தஞ்சை: அய்யம்பேட்டை பேரூராட்சி 9வது வார்டு திமுக பெண் வேட்பாளர் உயிரிழப்பு.
வாக்கு சேகரிப்பின்போது மயங்கி விழுந்து திமுக வேட்பாளர் அனுசியா உயிரிழப்பு.
* மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்கம்:
அரசு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புற்றுநோய் துறை தலைவர் மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்கம்.
ஏ.பி.வி.பி.யின் முன்னாள் தலைவராக செயல்பட்ட மருத்துவர் சுப்பையா, அரசு ஊழியர்களுக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகாரை அடுத்து மருத்துவ கல்வி இயக்குனரகம் நடவடிக்கை.
* தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு!
நகர்ப்புற உள்ளாட்சிக்கு நாளை மறுநாள் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது.
* ரஷ்யா உக்ரைனை படையெடுக்கும் சாத்தியம் மிகவும் அதிகமாக உள்ளது-அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் எச்சரிக்கை.
அமெரிக்க உளவுத்துறையின் படி, இது ஏற்கனவே நிகழ்ந்து வருவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment